ஒரு நபரின் பிறந்த நேரம், தேதி, நாள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கிரகங்களின் நிலைகளை அடிப்படையாக வைத்து ஜாதகம் கணிக்கப்படுவதை போலவே அவருக்கு தொடர்புடைய சில எண்களை வைத்தும் அவர்களின் குண நலன்கள், வாழ்க்கை முறைகள், எதிர்காலம் ஆகியவற்றை கணிக்க முடியும்.
முன்னர் இருந்ததை விட இன்றைய நவீன காலத்தில் இந்த எண்களை அடிப்படையாக வைத்து ஒருவரின் வாழ்க்கையை தெரிந்து கொள்ளும் நியூமராலஜி மிக பிரபலமாகி வருகிறது. அந்த வகையில் ஒருவரின் மொபைல் நம்பரின்10 இலக்க எண்களை கூட்டினால் கிடைக்கும் ஓரிலக்க எண்ணை வைத்து அவர்களின் வாழ்க்கையை கணிக்க முடியும். அந்த வகையில் உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத் தொகையின் ஓரிலக்க எண் 5 என்று இருந்தால் அதற்குரிய பலன்களை பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.
எண் 5 – ன் குணநலன்கள்:
எண் 5 அறிவு மற்றும் சமநிலையை குறிக்கிறது. மேலும் நீங்கள் நிறைவாக இருப்பீர்கள், அதே சமயத்தில் சுதந்திரமாக செயல்பட விரும்புவீர்கள். மன உறுதி மிக்கவராக இருப்பீர்கள். இதயம் திறந்து உங்கள் எண்ணங்களை வெளிப்படுத்துபவராக இருப்பீர்கள். மற்றவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்குவீர்கள். மற்றவர்களுக்கு தேவையான அனைத்தையும் செய்யும் நீங்கள் சில நேரங்களில் உங்கள் வாழ்விற்கான முடிவுகளை எடுக்கின்ற நேரத்தில் பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகலாம். இந்த எண்ணை உடையவர்கள் சொத்து மற்றும் செல்வம் நிறைந்தவராகவும் சமுதாயத்தில் நல்ல அந்தஸ்தில் வலிமையான ஒரு நபராக விளங்குவார்கள்.
எண் 5 ஆனது உங்கள் பத்திலக்க நம்பரில் எத்தனை முறை தோன்றுகிறது என்பதை பொறுத்து சில பலன்களை கணிக்கலாம்!
எண் 5 ஒரு முறை தோன்றினால்:
உங்கள் பத்திலக்க மொபைல் நம்பரில் 5 என்ற எண் ஒரே ஒரு முறை மட்டும் வந்தால் அது சமநிலையை குறிக்கிறது. அந்த நபர் நம்பகத்தன்மை வாய்ந்தவராகவும் மக்களால் விரும்பப்படுபவராகவும் இருப்பீர்கள். இவர்கள் எப்போதும் சுதந்திரமாக செயல்பட விரும்புவார்கள் மேலும் மற்றவர்களுக்கு உதவி செய்ய அதிகம் விரும்புவர்கள். தான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என பிடிவாதக்காரராகவே இருப்பார்கள்.
எண் 5 இரண்டு முறை வந்தால்:
உங்கள் மொபைல் நம்பரில் 5 என்ற எண் இரண்டு முறை தோன்றினால் உங்கள் மன உறுதியை குறிக்கிறது. மிக வெளிப்படையானவராகவும் அதே சமயத்தில் மனோதிடம் உள்ளவராகவும் இருப்பீர்கள். ஆனால் வாழ்வில் சில நேரங்களில் தங்கள் சமநிலையை இழந்து கடினமான காலகட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலை வரலாம். அந்த நேரத்தில் தங்கள் தவறை மறைத்து மற்றவர்களை குறை கூறிக் கொண்டிருப்பார்கள். பின்னர் இதை நினைத்து வருந்துவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் தேவை.
எண் 5 மூன்று முறை தோன்றினால்:
உங்கள் மொபைல் நம்பரில் எண் 5 மூன்று முறை தோன்றினால் மனதில் தோன்றியதை வெளிப்படையாக பேசுபவராக இருப்பார்கள். உண்மையும் மற்றும் அறிவாற்றலும் இவர்களிடம் நிறைந்து இருக்கும். வாழ்வில் அதிக ரிஸ்க் எடுக்க விரும்புவார்கள். குட்டையை போல் இல்லாமல் ஓடும் நீரை போல மாற்றங்களை அதிகம் விரும்புபவராகவும், வாழ்வில் நகர்ந்து கொண்டே இருக்கவும் விரும்புவார்கள். இவர்களின் நடத்தையை பார்த்தால் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காதவர் போல தோன்றும். இவர்களுக்கு வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
எண் 5 நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட தடவை தோன்றினால்:
உங்கள் மொபைல் நம்பரில் எண் 5 நான்கு முறையோ அல்லது அதற்கு அதிகமாக தோன்றினால் நீங்கள் வசதியாக வாழ விரும்புவோராக இருப்பீர்கள். மாற்றங்களை விரும்பாதவராகவும் உங்களுக்கென ஒரு குறிப்பிட்ட எல்லையை வகுத்துக் கொண்டு அந்த எல்லைக்குள்ளேயே வாழ விரும்புகிறார்கள். மற்றவர்களின் சொல்லை கேட்டு நடப்பவராக இருப்பீர்கள். உடல் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இவர்களுக்கு அடிக்கடி ஏற்படும். வாழ்க்கையில் சமநிலை வருவதும் போவதுமாக இருக்கும். இதனால் உங்களுக்கு வரும் வெற்றியை முழுவதுமாக அனுபவிக்க முடியாத நிலை ஏற்படலாம்.
கூட்டு தொகை 5 ஆக இருந்தால்:
மொபைல் நம்பர் கூட்டுத்தொகை 5 ஆக இருந்தால் அவர்களின் வாழ்க்கை புதிய பாதையை நோக்கி செல்லும். முழுவதும் நேர்மறை ஆற்றல் நிறைந்த, விதவிதமான அனுபவங்களை பெறுவீர்கள். நல்ல நோக்கத்துடன் செய்யப்படுகின்ற அனைத்து வேலைகளையும் செய்து அற்புதமான முடிவுகளை அளிப்பார்கள். இந்த எண்ணை உடையவர்கள் மற்றவர்கள் எவ்வளவு முயன்றும் செய்ய முடியாத, செய்வதற்கரிய சாதனைகளை செய்து காட்டுவார்கள். மேலும் இந்த எண் உடையவர்கள் தங்கள் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரிந்தவராகவும், தங்கள் ஆசைகளை வரைமுறைப்படுத்தி நெறிப்படுத்துவதில் வல்லவராகவும் இருப்பார்கள்.
மொபைல் நியூமராலாஜி
Also Read : மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?
Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக இருக்கும் நபர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.!
Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 3-ஆக இருக்கும் நபர்கள் இப்படிதான் இருப்பார்கள்.!
Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் நம்பரில் ‘6’ இருக்கா? உங்க பலன்கள் இதுதான்!
Also Read : மொபைல் நியூமராலாஜி: உங்கள் மொபைல் எண்ணில் 7 ஆம் எண் இருந்தால் இதைப்படிங்க.!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Numerology, Tamil News