ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 4 ஆக இருக்கிறதா.? அப்போ இந்த குணாதிசயங்கள் நிச்சயம் இருக்கும்.!

மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 4 ஆக இருக்கிறதா.? அப்போ இந்த குணாதிசயங்கள் நிச்சயம் இருக்கும்.!

மொபைல் நியூமராலஜி

மொபைல் நியூமராலஜி

Mobile Numerology No 4 | நீங்கள் வாங்கும் மொபைல் எண்ணின் கூட்டுத்தொகையானது எண் 4 எத்தனை முறை தோன்றுகிறது? இதைப் பொறுத்து எண் கணிதம் கணக்கிடப்படுகிறது. அது மட்டுமில்லாமல் எண்ணின் கூட்டுத்தொகை 4 என்றிருக்கும் நபர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இன்றைக்கு பெரும்பாலான மக்கள் குழந்தைப் பிறப்பு, திருமணம், வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள் முதல் புதிதாக எந்த வேலையைத் தொடங்க வேண்டும் என்றாலும் ஜோதிடம் பார்ப்பதை வழக்கமாகிக் கொண்டனர். இதிலும் எண்களைக்கொண்டு எதிர்கால வளர்ச்சி, குணாதிசியங்கள் போன்றவற்றை கணக்கிடும் நியூமராலஜி எனப்படும் எண் கணிதம் பார்ப்பது அதிகரித்து வருகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் இவர்களின் வாழ்க்கையில் உள்ள இருள் நீங்கி வெளிச்சம் பெற முடியும் என்ற நம்பிக்கையோடு உள்ளனர்.

பெயர்களுக்கு மட்டுமில்லாமல் மொபைல் எண் வாங்கினாலும் எண் கணித முறையைப் பின்பற்றுகின்றனர். இந்நிலையில் உங்களது மொபைல் எண்ணின் கூட்டுத்தொகையானது 4 என வந்தால்? நீங்கள் எத்தகைய குணாதிசியங்களைப் பெற்றிருப்பீர்கள் மற்றும் என்னென்ன நன்மைகளைப் பெற முடியும்? என்பது குறித்து இங்கே அறிந்துகொள்வோம்.

எண் 4 :

உங்கள் மொபைல் நம்பரின் இறுதி கூட்டுத்தொகையானது எண் 4 என வந்தால், நீங்கள் பணம் மற்றும் சொத்து விஷயங்களில் ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கிறீர்கள் என அர்த்தம். கடின உழைப்பு மற்றும் சரியான பாதையை வாழ்க்கையில் தேர்வு செய்தாலே நல்ல ஒழுக்கத்துடன் நீங்கள் இருப்பீர்கள். உங்களால் மற்றவர்களும் நன்மை பெறுவார்கள். எப்போதும் நேர்மையுடன் இருப்பீர்கள். தனக்காக வேலை செய்யும் மற்றவர்களை அவமானப்படுத்தும் குணாதிசயம் உண்டு. உங்களுக்கான வேலை நடக்கவில்லை என்று தெரிந்தால் எதிர்மறையான சிந்தனைக்கு நீங்கள் செல்லக்கூடும் மற்றும் மற்றவர்களுடன் எதையும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பீர்கள்.

இதோடு உங்களது மொபைல் எண்ணில் 4 என்ற எண் எத்தனை முறை தோன்றுகிறது? இதனால் என்னென்ன நன்மைகள் என்பது குறித்தும் இங்கே பார்ப்போம்.

எண் 4 ஒருமுறை தோன்றினால்: உங்கள் மொபைல் எண்ணில் 4 என்ற எண் ஒரு முறை தோன்றினால், நீங்கள் எப்போதும் நேர்மறையான அணுகுறையை கையாண்டு வாழ்க்கையில் மகிழ்ச்சியாய் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சிறந்த குணங்கள் பணியை திட்டமிடப்பட்ட முறையில் தொடங்குவதங்கு வழிவகை செய்யும். சுற்றுப்புறத்தை சுத்தம் செய்ய விரும்புவீர்கள். இசையின் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கும். வாழ்க்கையில் கடினமான பணியை கூட எளிதில் முடிப்பீர்கள்.

எண் 4 இரண்டு முறை தோன்றினால்: உங்களது மொபைல் எண்ணில் எண் 4 இரண்டு முறை இருக்கும் நபர்கள், எப்போதும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எந்த வேலையிலும் அதிக ஆர்வம் காட்டுபவர்களாக இருப்பார்கள். எந்த வேலையையும் எளிதில் செய்து முடிக்கும் திறன் உள்ளது. வாழ்க்கையில் எப்போதும் ஆர்வத்துடன் மற்றும் அர்ப்பணிப்புடன் இருக்க நேரிடும். அவர்கள் செய்யும் வேலையினால் திறமை வெளிச்சத்திற்கு விரைவில் தெரிய வரும். இந்த நபர்கள் எந்த சூழலிலும் பாதியில் இருந்து விலக மாட்டார்கள்.

எண் 4 மூன்று முறை தோன்றினால் : நீங்கள் வைத்திருக்கும் மொபைல் எண்ணில் 4 எண் 3 முறை தோன்றினால், அவர்கள் திட்டமிடுதலில் சிறந்தவராகவும், சரியான நேரத்தில் எப்போதும் செயல்படுபவர்களாக இருப்பார்கள். தங்கள் அறிவு மற்றும் மன திறன்களை சரியாகப் பயன்படுத்துவதில்லை, இதனால் வெற்றியை இழக்க நேரிடும். மேலும் கஞ்சத்தனமானவர்கள், செலவு செய்வதற்கு முன் நிறைய யோசிப்பவர்களாக இருப்பார்கள்.

எண் 4 நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை தோன்றினால்: உங்களது மொபைல் எண்ணில் எண் 4 என்பது நான்கு அல்லது அதற்கு மேற்பட்டமுறை வருபவர்கள், எப்போதும் தேவைக்கு அதிகமாக எதையும் செய்வார்கள். வாழ்க்கையில் அவர்களால் எந்த உறுதியான முடிவையும் எடுக்க முடியாது. மேலும் தனிப்பட்ட மற்றும் தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகளை இழப்பீர்கள். முடிவெடுக்க நேரம் மற்றும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் எப்போதும் தவிக்கும் சூழல் ஏற்படும். மகிழ்ச்சியின்மையை உணர்வீர்கள்.

எண் 4 இல்லாதபோது: மொபைல் எண்ணில் எண் 4 என இல்லை என்றால், அவர்கள் கவனக்குறைவாக இருப்பார்கள் என அர்த்தம். எந்த வேலையை செய்தாலும் முன்கூட்டியே திட்டமிடுதல் இல்லாமல் வேலையை முடிக்க முடியாமல் திணறுவார்கள். கடின உழைப்பை மேற்கொள்வதற்கு வெட்கப்படும் நபர்களாக இருப்பீர்கள். வீட்டை எப்போதும் சுத்தமாகவும் ஒழுங்காகவும் உங்களால் வைத்திருக்க முடியாது.

மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை மொத்தம் 4 என்றால்:  உங்களது மொபைல் எண்ணில் கூட்டுத்தொகையானது மொத்தம் 4 என வந்தால், ஒழுக்கமானவர் என அர்த்தம். வாழ்க்கையில் சாதனையாளராக இருக்க முடியும். இருந்தப்போதும் பல சிக்கல்கள் ஏற்படும். வாழ்க்கையில் முடிவுகளை தாமதமாக எடுப்பீர்கள். இருந்தப்போதும் பிரச்சனை விரைவில் முடிவடையும்.

மொபைல் நியூமராலாஜி

Also Read : மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக இருக்கும் நபர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 3-ஆக இருக்கும் நபர்கள் இப்படிதான் இருப்பார்கள்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: உங்கள் மொபைல் எண்ணில் 5 என்ற எண் இருந்தால் என்ன பலன்.!

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் நம்பரில் ‘6’ இருக்கா? உங்க பலன்கள் இதுதான்!

Also Read : மொபைல் நியூமராலாஜி: உங்கள் மொபைல் எண்ணில் 7 ஆம் எண் இருந்தால் இதைப்படிங்க.!

First published:

Tags: Numerology, Tamil News