ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 3-ஆக இருக்கும் நபர்கள் இப்படிதான் இருப்பார்கள்.!

மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 3-ஆக இருக்கும் நபர்கள் இப்படிதான் இருப்பார்கள்.!

மொபைல் நியூமராலஜி

மொபைல் நியூமராலஜி

Mobile Numerology No 3 | இந்த நிலையில் உங்களது மொபைல் நம்பரின் கூட்டு தொகையானது 3 என வருகிறதா? நீங்கள் எத்தகைய நலன்களை பெற முடியும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெரும்பாலும் நம் எல்லோருக்கும் தெரிந்த பாரம்பரிய ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களை வைத்து ஒரு நபரின் குணாதிசயங்கள், வளர்ச்சி உள்ளிட்ட பலவற்றை கணிப்பது போல ஒருவருக்கு சம்பந்தமான எண்களை கொண்டு அவரின் மேன்மை, வளர்ச்சி, எதிர்காலம், குணாதிசயங்களை கணித்து சொல்வதே நியூமராலஜி எனப்படும் எண் கணிதம்.

தற்போது பலரும் குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது முதல் தங்கள் பெயரில் சிறிய மாற்றங்களை செய்வது வரை எண் கணித சாஸ்திரத்தை தங்கள் வாழ்வில் புகுத்தி வருகின்றனர். இப்படி செய்வதன் மூலம் தங்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் விலகி, வாழ்வில் பல வளங்களை பெறலாம் என்று நம்புகின்றனர். நம்முடைய பெயரில் இருக்கும் எழுத்துக்களின் கூட்டு, எந்த நம்பரை குறிக்கிறது, அந்த எண்ணுக்குரிய தன்மைகள், குணங்கள், அது கொடுக்க கூடிய நன்மை, தீமைகள் மற்றும் அதிர்ஷ்டம் தான் நியூமராலஜியின் அடிப்படை.

இந்த வகையில் இன்று ஆறாம் விரலாய் இருக்கும் நம்முடைய 10 டிஜிட் மொபைல் நம்பரை சேர்த்து கூட்டினால் கடைசியாக கிடைக்கும் சிங்கிள் டிஜிட் நம்முடைய அன்றாட வாழ்வில் பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக நியூமராலஜி நிபுணர்கள் கூறுகிறார்கள். இது மொபைல் நியூமராலஜி என்று குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையில் உங்களது மொபைல் நம்பரின் கூட்டு தொகையானது 3 என வருகிறதா? நீங்கள் எத்தகைய நலன்களை பெற முடியும் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

எண் 3:

உங்களது மொபைல் நம்பரின் இறுதி கூட்டு தொகையானது 3 என வருகிறதா.? அப்படி என்றால் இந்த நம்பர் பகுத்தறிவு, வலிமை மற்றும் புத்திசாலித்தனத்தை குறிக்கிறது. நீங்கள் பாராட்டும் வகையிலான மன மற்றும் சமூக திறன்களை கொண்டிருப்பீர்கள். உங்களது சிறந்த நினைவாற்றல் மற்றும் படைப்பாற்றல் உள்ளிட்டவற்றால் சுற்றி இருப்பவர்களை கவருவீர்கள்.

உங்கள் 10 டிஜிட் மொபைல் நம்பரில் 3 எத்தனை முறை தோன்றுகிறது என்பதை பொறுத்து அதற்கான நன்மைகள் மற்றும் குணநலன்கள் உங்களிடம் இருக்கும்.

Also Read : மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?

எண் 3 ஒரு முறை தோன்றினால்:

ஒருவரது 10 டிஜிட் மொபைல் சீரிஸில் ஒருமுறை மட்டுமே எண் 3 இருந்தால் அந்த நபர் மிகவும் அதிர்ஷ்டசாலியாக, எதையும் நேருக்கு நேர் எதிர்கொள்பவராக, சிறந்த நினைவாற்றல் கொண்டவராக இருப்பார். எப்போதும் நேர்மறையாக இருப்பார் மற்றும் எடுக்கும் திட்டங்கள் மற்றும் பணிகளை சரியாக செய்து முடிப்பவராக இருப்பார். சூழலை ஆழமாக பகுப்பாய்வு செய்து காலக்கெடுவிற்குள் வெற்றியை தன வசப்படுத்தும் அற்புத திறமை பெற்றிருப்பார்.

எண் 3 இருமுறை இருந்தால்:

ஒருவரது மொபைல் நம்பரில் 3-ஆம் எண் இருமுறை வந்தால் அவர்கள் கற்பனை மற்றும் பேரார்வம் கொண்டவர்களாக இருப்பார்கள். இத்தகையவர்கள் எழுத்து, ஊடகம் அல்லது மக்கள் தொடர்பு உள்ளிட்டவற்றில் ஸ்பெஷல் ஆர்வம் காட்டுவார்கள்.

எண் 3 மூன்று முறை இருந்தால்:

ஒருவரது மொபைல் நம்பரில் 3-ஆம் எண் மூன்று முறை வந்தால் அது அவர் மிகவும் கற்பனை திறன் மிக்கவராக இருப்பதை காட்டுகிறது. பெரும்பாலும் கற்பனை உலகில் இவர்கள் இருப்பதுடன் நிஜ உலகில் உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது இவர்களுக்கு கடினமான ஒன்றாக இருக்கும். பிறர் சொல்வதை காது கொடுத்து கேட்காமல் வாதங்களில் ஈடுபடுபவராகவும் இருப்பார். சட்டத்துறை மற்றும் அரசியலுக்கு இந்த நபர்கள் பொருத்தமானவர்கள்.

எண் 3-ஆனது நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட முறை இருந்தால்:

இவர்கள் முற்றிலும் நடைமுறைக்கு மாறானவர்கள் மற்றும் அச்சம் தர கூடிய நபர்களாக இருப்பார்கள். இவர்கள் குறைவான நம்பிக்கை கொண்டவர்கள் மற்றும் இவர்கள் அன்றாட வாழ்க்கையில் செயல்பட கடினமாக இருக்கும். இவர்களின் திட்டங்கள் எப்போதும் பெரிதாக அதே நேரம் தீர்மானிக்கப்படாதவையாக இருக்கும். அடிப்படையில் பகல் கனவு காண்பவராக இருப்பார்கள். அடிக்கடி குடும்பப் பிரச்சினைகளை எதிர்கொள்வார்கள்.

Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 2 ஆக இருக்கும் நபர்கள் இப்படித்தான் இருப்பார்கள்.!

எண் 3 இல்லை என்றால்:

நம்பர் 3 உங்கள் மொபைல் நம்பர் சீரிஸில் இல்லை என்றால் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி கவலைப்படாமல் நீங்கள் நினைப்பதை பேசுவது அல்லது செய்வதுமாக இருப்பீர்கள். இதனால் மற்றவர்களை நீங்கள் புண்படுத்தலாம், உறவுகளை பேண போராட நேரிடும். இந்த எண் உங்கள் மொபைல் சீரிஸில் இல்லாதது உங்களை சுயநலமானவராக ஆக்குகிறது. எனவே எண் 3-ன் மதிப்புமிக்க நன்மைகளை கருத்தில் கொண்டு புதிய சிம் எடுக்கிறீர்கள் என்றால் நம்பர் 3 அடங்கிய சிறந்த மொபைல் எண்ணை தேர்வு செய்யுங்கள்.

ஊடகத் துறையில் உள்ளவர்கள் வெற்றிகளை பதிவு செய்ய எப்போதும் எண் 3 இருக்கும் மொபைல் நம்பரை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

Published by:Selvi M
First published:

Tags: Numerology, Tamil News