இன்றைக்கு நியூமராலஜியைப் பார்த்து தான் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பது மற்றும் பெயரில் சிறிது மாற்றம் செய்வது என பலர் மேற்கொள்வது வழக்கம். இவ்வாறு செய்யும் போது வாழ்க்கையில் உள்ள கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியைப் பெறக்கூடும் என்று நம்புகிறார்கள். இதுப்போன்று தற்போது நம்முடனே 24 மணிநேரமும் இருக்ககூடிய மொபைல் எண்ணையும் எண்கணித அடிப்படையில் மக்கள் வாங்க ஆரம்பித்து விட்டனர். இந்த சூழலில் இன்றைக்கு நீங்கள் வாங்கும் மொபைல் எண்ணின் கூட்டுத்தொகையானது எண் 2 எத்தனை முறை தோன்றுகிறது? இதைப் பொறுத்து எண் கணிதம் கணக்கிடப்படுகிறது. அது மட்டுமில்லாமல் எண்ணின் கூட்டுத்தொகை 2 என்றிருக்கும் நபர்களின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது குறித்து இங்கே அறிந்துக் கொள்வோம்.
எண் 2 :
உங்களது மொபைல் எண் தொடரில் 2 என்ற எண் இருப்பவர்கள் அன்பு மற்றும் புரிதலோடும் இருப்பதைக் குறிக்கிறது. எப்போதும் வாழ்க்கையில் நம்பிக்கையுடன் இருப்பார்கள். இதில் 2 என்ற எண் மொபைல் எண்ணின் தொடரில் கட்டாயமாக இருக்க வேண்டும். இது வணிகத்தில் ஈடுபடுபவர்களுக்கு வாடிக்கையாளர்களைத் தருகிறது மற்றும் பார்ட்னர்களுடன் நீண்ட கால உறவை ஏற்படுத்துகிறது.
எண் 2 ஒருமுறை தோன்றுதல்: உங்களது மொபைல் எண்ணில் 2 என்ற எண் ஒருமுறை இருக்கும் நபரை எப்போதும் புத்திசாலியாகவும், உணர்திறன் கொண்டவர்களாகவும் ஆக்குகிறது. சுறுசுறுப்பாக இருக்கும் அளவிற்கு பலத்தை அளிக்கிறது. எப்போதும் நம்பிக்கையுடன் இருப்பார்கள். காதலில் இருப்பவர்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க முடியும்.
எண் 2 இரண்டு முறை தோன்றுதல்: எண் 2 என்பது இரு முறை தோன்றும் எண் நபர்கள் எப்போதும் புத்திசாலியாக இருப்பார்ள். வாழ்க்கையில் முன்னோக்கி செல்வதோடு எதிர்காலத் தேவைகளை அறிந்து செயல்படுவார்கள். வாழ்க்கையில் இவர்கள் எடுக்கும் முடிவுகள் அனைவருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்துவதோடு எந்த குழப்பத்திலிருந்தும் வெளியேறுவதற்கு உதவியாக இருக்கும்.
எண் 2 மூன்று முறை தோன்றும்போது: மொபைல் எண்ணில் எண் 3 மூன்று முறை வரும் நபர்கள் மிகவும் நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். சமூகத்தில் யாரும் மீது அன்பாக இருப்பதில்லை. எதற்கெல்லாம் சந்தேகம் மற்றும் நம்பிக்கையற்றவர்களாக இருப்பார்கள். இதனால் வாழ்க்கையில் மகிழ்ச்சியற்றவர்களாகவே இருக்கும் சூழல் உள்ளது.
மொபைல் எண் 2 என்பது 4 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருத்தல்: உங்களது மொபைல் எண்ணின் கூட்டுத்தொடர் 2 அல்லது அதற்கு மேற்பட்டு வரும் போது, இந்த நபர்கள் எல்லா சூழ்நிலைகளிலும் சகிப்புத்தன்மையைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சின்ன விஷயங்கள் கூட மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
எண் 2 இல்லை என்றால்: உங்களது மொபைல் எண்ணில் 2 இல்லை என்றால், இது உறவுகளிடம் புரிதலைக் கொண்டிருக்க முடியாது. கசப்பான சூழல் நிலவும். வீட்டில் வேலை செய்யும் சூழ்நிலை பாதிக்கப்படுகிறது. தங்களது சொந்த வாழ்க்கையில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். வாழ்க்கையில் போராடும் எண்ணம் தோன்றும்.
மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை மொத்தம் 2 என்றால்: உங்களது மொபைல் எண்ணின் கூட்டுத்தொடர் என்பது மொத்தம் 2 என வரும் போது, அந்த நபர் அறிவாளியாக இருக்கக்கூடும். இதோடு இவர் வெளிப்படையாகவும், தனிப்பட்ட தொழில்சார் உறவுகளை சிறந்த முறையில் செய்யமுடியும். அவர்களின் மனம் மற்றும் மூளை என்ன சொல்கிறதோ? அதை மட்டும் செய்து வெற்றிக்காண்பவர்களாக இருப்பார்கள்.
மொபைல் நியூமராலாஜி
Also Read : மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?
Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை 3-ஆக இருக்கும் நபர்கள் இப்படிதான் இருப்பார்கள்.!
Also Read : மொபைல் நியூமராலஜி: உங்கள் மொபைல் எண்ணில் 5 என்ற எண் இருந்தால் என்ன பலன்.!
Also Read : மொபைல் நியூமராலஜி: மொபைல் நம்பரில் ‘6’ இருக்கா? உங்க பலன்கள் இதுதான்!
Also Read : மொபைல் நியூமராலாஜி: உங்கள் மொபைல் எண்ணில் 7 ஆம் எண் இருந்தால் இதைப்படிங்க.!
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mobile number, Numerology, Tamil News