ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?

மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை 1 ஆக இருந்தால் எப்படி இருக்கும்?

மொபைல் எண் கணிதம்

மொபைல் எண் கணிதம்

Mobile Numerology | மொபைல் எண் 1 என்பது என்னென்ன விதமான சாதக பாதகங்களை கொண்டுள்ளது என்பதை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

எண் கணித பலன்களை பொறுத்த வரையில், நம்முடைய பெயரில் இருக்கும் எழுத்துக்களின் கூட்டு, எந்த எண்ணைக் குறிக்கிறது, அந்த எண்ணுக்குரிய தன்மைகள், குணங்கள் ஆகியவை முக்கிய குறிப்பீடுகளாகும். ஏனெனில், இவற்றை சார்ந்து தான் நமக்கு நடக்க கூடிய நன்மை, தீமைகள் அமையும் என்று கூறப்படுகிறது. மேலும், நமக்கு எது அதிர்ஷ்டம் தரும், எது நன்மை கொடுக்கும், எது சரியாக இருக்கும் என்று கணிக்கப்படவும் இவை உதவுகிறது. அந்த வகையில், நாம் பயன்படுத்தும் மொபைல் எண்ணும் நமது வாழ்வில் ஒரு வித தாக்கத்தை ஏற்படுத்தும்.

இதை குறிப்பிடும்போது, ஒவ்வொருவரும் சரியான மொபைல் எண்ணை தேர்வு செய்வது எவ்வளவு அவசியம் என்பது புரிந்திருக்கும். அந்த வகையில், மொபைல் எண் 1 என்பது என்னென்ன விதமான சாதக பாதகங்களை கொண்டுள்ளது என்பதை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.

எண் 1 என்பது பணிச்சுமை அதிகரிப்பதைக் குறிக்கிறது, ஏனெனில் இது வெளிப்பாடுகள், தொடர்பு, ஈகோ, சுதந்திரம் மற்றும் உரையாடும் திறனைக் கொண்டு வருகிறது. இருப்பினும், இந்த எண் நம்பிக்கையை தர உதவுகிறது மற்றும் வாழ்க்கையில் முன்னேற ஊக்குவிக்கிறது. நீங்கள் தன்னம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்லும்போது, ​​பணியிடத்தில் பெயர் மற்றும் புகழ் ஆகியவை கிடைக்கவும் உதவுகிறது. மொபைல் எண்களில் எத்தனை முறை எண் 1 தோன்றுகிறதோ, அதை பொறுத்து அதற்கான நன்மைகளும் இருக்கும்.

எண் 1 ஒரு முறை தோன்றினால்

இந்த எண்ணை கொண்ட நபர் பொதுவாக சரியான புரிதல் கொண்டவர் என்று அர்த்தம். இருப்பினும், அவர் குறைவாகப் பேசவும், உண்மையில் தேவைப்படும்போது மட்டுமே பேசவும் விரும்புபவராக இருப்பார். இது ஒரு குறிப்பிட்ட வேலையில் அவர்களை வெற்றிபெறச் செய்கிறது, ஆனால் உணர்வுகளை வெளிப்படுத்த இயலாமை காரணமாக, சில சிக்கல்களும் ஏற்படலாம்.

எண் 1 இரு முறை தோன்றினால்:

இந்த நிலையை கொண்டவர், தனது தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை நன்கு சமநிலைப்படுத்தும் தன்மை கொண்டவராக இருக்க முடியும். மேலும், அவரது தன்னம்பிக்கை போதுமானதாக இல்லை என்பதால், சில சமயங்களில் பொறுமையை இழக்க நேரிடும்.

Also Read : உங்கள் மொபைல் நம்பருக்கான எண் கணிதம்.!

எண் 1 மூன்று முறைக்கு மேல் தோன்றினால்

இந்த வரிசை கொண்டவர் ஆற்றல் மிக்கவராக இருப்பார். மேலும், மகிழ்ச்சியான சூழல் அவருக்கு உண்டாகும். அதே போன்று அதிர்ஷ்டம் மற்றும் மிகவும் விரும்ப கூடிய விஷயங்கள் தேடி வரும். சிறந்த பொழுதுபோக்கு மற்றும் சுதந்திரமாக வேலை செய்யும் போது இவர்களை தேடி வெற்றி வரும்.

Also Read : D என்பதை முதல் எழுத்தாகக் கொண்டவர்கள் இப்படித் தான் இருப்பார்கள்.!

4, 5 அல்லது 6 முறைக்கு மேல் தோன்றினால்:

இது போன்று தோன்றுவதற்கு பல அர்த்தங்கள் உண்டு. இது உங்களை அதிக அலட்சியமாகவும், தகவல்தொடர்புக்கு அதிகமாக ஆர்வம் தருபவராகவும் மாற்றும். இது பல நேரங்களில் தவறான புரிதலையும் உருவாக்கும். எனவே பல 1-கள் கொண்ட இந்த வகையான மொபைல் எண்களை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

எண் 1 இல்லை என்றால்:

எண் 1 இல்லாத மொபைல் எண் உங்களை அக்கறையற்றவராகவும் உணர்ச்சிகளுக்கு மதிப்பு தராத நபராகவும் ஆக்குகிறது, இது இறுதியில் ஒருவரின் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையை பாதிக்கிறது. இது எதிர்மறையான எண்ணங்களையும் தருகிறது. மேலும், மற்றவர்களைச் சார்ந்திருக்கும் உங்கள் போக்கையும் இது அதிகரிக்கலாம்.

Also Read : எண் கணித ஜோதிடம் | 23 அதிர்ஷ்டமான பிறந்த தேதி.!

எண் 1 கூட்டுத்தொகை என்றால்:

இத்தகைய மொபைல் எண் உங்கள் வணிகத்தை போதுமானதாகவும், அந்தந்த துறையில் மேன்மைப்படுத்தவும் செய்கிறது. இந்த மொபைல் எண் உங்கள் ஆளுமையை மேம்படுத்தி வெற்றியை தரும். இது உங்களுக்கு நிறைய செல்வத்தையும் புகழையும் தேடி தரும். இவர்கள் சுதந்திரமாக முடிவெடுப்பவராக இருப்பார்கள்.

Published by:Selvi M
First published:

Tags: Mobile number, Numerology, Tamil News