ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் எண் இப்படி இருந்தால் பிரச்னை அதிகம் தான்

மொபைல் நியூமராலஜி : உங்கள் மொபைல் எண் இப்படி இருந்தால் பிரச்னை அதிகம் தான்

மொபைல் நியூமராலஜி

மொபைல் நியூமராலஜி

Mobile Numerology | சரியான மொபைல் எண்ணை தேர்வு செய்வது என்பது நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகளை மிக எளிதாக தீர்க்க உதவும்

 • Trending Desk
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  எண் கணித பலன் என்று வரும் பொழுது, நம்முடைய பெயரில் இருக்கும் எழுத்துக்களின் கூட்டு, எந்த எண்ணைக் குறிக்கிறது, அந்த எண்ணுக்குரிய தன்மைகள், குணங்கள், ஆகியவை சார்ந்து நமக்கு எது நன்மை கொடுக்கும், எது சரியாக இருக்கும், எது அதிர்ஷ்டம் தரும் என்று கணிக்கப்படும். அந்த வகையில், நாம் பயன்படுத்தும் மொபைல் எண்ணும் நம்முடைய அன்றாட வாழ்வில் பலவிதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எனவே சரியான மொபைல் எண்ணை தேர்வு செய்வது என்பது நம்முடைய பெரும்பாலான பிரச்சனைகளை மிக எளிதாக தீர்க்க உதவும். மொபைல் நியூமராலஜிப்படி மொபைல் எண் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிய எளிமையான சில குறிப்புகள் இங்கே.

  ஒவ்வொரு எண்ணும் ஒவ்வொரு கிரகத்தைக் குறிக்கும். எனவே மொபைல் எண் உங்களுக்கு சாதகமான, நட்பாக இருக்கும் எண்ணாக இருக்க வேண்டும்.
  4,7 மட்டும் 8 என்ற இந்த மூன்று எண்களை நீங்கள் தவிர்த்து விடவேண்டும்
  ஒரு சில மொபைல் நம்பரில் ஒரே எண்கள் திரும்பத்திரும்ப வரும். அவ்வாறு இருப்பதை நீங்கள் தவிர்த்து விட வேண்டும். ஒரே எண் மீண்டும் மீண்டும் வருவது போல உங்கள் மொபைல் எண்களை தவிர்க்க வேண்டும். அப்படி நீங்கள் வாங்கினால் அந்த குறிப்பிட்ட எண்ணுக்குரிய கிரகத்தின் தாக்கம் உங்களுக்கு அதிகமாக இருக்கும்.
  குறிப்பாக உங்களுடைய பிறந்த தேதிக்கு அந்த குறிப்பிட்ட எண் பகை கிரகமாக இருந்தால் நீங்கள் பலவித பிரச்சினைகளை எதிர்கொள்வீர்கள்.
  ஒரு மொபைல் நம்பரில் கூட இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதா என்று நீங்கள் ஆச்சரியப்படலாம்! ஆனால் உங்களுடைய மொபைல் எண் உங்களுடைய வாழ்க்கைக்கு அடிப்படையான விஷயங்களான கல்வி, அறிவு, தனிப்பட்ட வாழ்க்கை, சமுதாயத்தில் உங்கள் நிலை மற்றும் பணம் ஆகிய ஐந்து விஷயங்களையும் குறிக்கிறது.
  உங்கள் மொபைல் நம்பரின் கூட்டுத்தொகை, உங்களுடைய பிறந்த தேதியின் எண் மற்றும் விதி எண் ஆகிய இரண்டுக்குமே சாதகமாக இருக்க வேண்டும் அல்லது நட்பாக இருக்க வேண்டும். இரண்டும் இல்லையென்றால் கூட, நியூட்ரல் என்று கூறப்படும் நன்மையும் அல்லாத தீமையும் அல்லாத என்னக இருக்க வேண்டும்.
  உங்களுடைய பிறந்த தேதியில் நேரடியாக இல்லாமல் இருக்கும் டிஜிட்களை உங்கள் மொபைல் எண்ணில் இருக்கக் கூடாது. இது உங்கள் வாழ்க்கையில் இல்லாத கிரகங்களுக்கு அதிக ஆற்றல் கொடுக்கும்.
  நீங்கள் என்ன வணிகம் செய்கிறீர்கள் அல்லது என்ன தொழிலில் இருக்கிறீர்கள் ஆகியவற்றின் அடிப்படையில், அந்த தொழிலுக்கு எந்த எண் சாதகமாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கு ஏற்றார் போல உங்கள் மொபைல் எண்ணின் கூட்டுத்தொகை அமையுமாறு மொபைல் எண்ணை தேர்வு செய்ய வேண்டும்.
  ஸ்டைலாக, ஃபேன்சி நம்பர் என்று தேர்வு செய்வதை விட, உங்களுக்கு எது பொருந்தும் என்ற அடிப்படையில் மொபைல் நம்பரை தேர்வு செய்ய வேண்டும்
  ஃபேன்சியான விஐபி எண்கள், உங்களுக்கு தேவைப்படுவதைவிட அதிகமாக கொடுத்தாலும், உங்களிடம் இருந்து பல விஷயங்களை பறித்து விடும்.
  Published by:Vijay R
  First published: