தமிழகத்தில் உள்ள அதிசயமான சிவ தலங்கள் பற்றி தெரியுமா?
தமிழகத்தில் உள்ள அதிசயமான சிவ தலங்கள் பற்றி தெரியுமா?
சிவன்
shivan temple in tamil nadu யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழங்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
நம் நாட்டில் பல்வேறு திருத்தலங்கள் உள்ளன. ஒவ்வொரு கோவிலுக்கும் ஒரு சிறப்பு உண்டு. அதேபோல் அவற்றில் சில அதிசயங்களும் உண்டு. அப்படி அதிசயங்களும், சிறப்புகளும் மிக்க சிவபெருமாளுடைய கோவில்களைப் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.
1. கரூர் மாவட்ட குளித்தலை கடம்பவனநாதர் சிவாலயத்தில் இரட்டை நடராஜர் தரிசனம் செய்யலாம்.
2. காசி விஸ்வநாதர் கோவிலில் மாலைவேளை பூஜையின் போது நூற்றி எட்டு ‘வில்வ” இலைகளால். தீபாராதனைக்கு முன்பு அர்ச்சனை செய்கிறார்கள். அந்த நூற்றி எட்டு ‘வில்வ” இலைகளிலும் சந்தனத்தால் ‘ராமா” என்று எழுதி பின்னர் அர்ச்சனை செய்கிறார்கள்.
3. கும்பகோணம் அருகே திருநல்லு}ரில் உள்ள சிவலிங்கத் திருமேனி ஒரு நாளைக்கு 5 முறை வெவ்வேறு வண்ணங்களில் நிறம் மாறுவதால் ‘பஞ்சவர்ணேஸ்வரர்” என்று பெயர்.
4. திருநெல்வேலி-கடையம் அருகே நித்ய கல்யாணி உடனுறை விஸ்வநாதர் கோவிலில் உள்ள வில்வமரத்தில் லிங்க வடிவில் காய் காய்க்கிறது.
5.நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம் தான்.
6.இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். எனில் எவ்வளவு துல்லியமாக செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள்.
8. புதுச்சேரியை அடுத்துள்ள தமிழக பகுதியான கோட்டகுப்பத்தில் சிவன் லிங்கம் தலையில் வைத்த மரிகொழுந்து மற்றும் வாசனை இலைகள் தானாக துளிர்விட்டு வளர்வதை பக்தர்கள் கண்டு வழிபட்டு செல்கின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.