Home /News /spiritual /

புரட்டாசி மாதம்: வைணவ கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா.. தமிழக அரசு ஏற்பாடு!

புரட்டாசி மாதம்: வைணவ கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா.. தமிழக அரசு ஏற்பாடு!

வைணவ கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா

வைணவ கோயில்கள் ஒரு நாள் சுற்றுலா

ஆன்மீக சுற்றுலாவில் பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவு, கட்டணமில்லா சிறப்பு தரிசனம், கோயில் பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India
சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களை தலைமையிடமாக கொண்டு பல்வேறு வைணவ கோயில்களுக்கு புரட்டாசி மாதத்தில்  ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அமைச்சர் பி.கே.சேகர்பாபு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: தமிழகம் முழுவதும் உள்ள வைணவ கோயில்களில் புரட்டாசி மாதத்தில் வாரம்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு தரிசனங்கள் மேற்கொள்ளப்படுகிறது.  இதனை கருத்தில் கொண்டு முதல்அமைச்சர் மு.க.ஸ்டாலினின் வழிகாட்டுதலின்படி, தமிழத்தில் உள்ள பிரசித்தி பெற்ற வைணவ கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைந்து வரும் புரட்டாசி மாதத்தில் பக்தர்களை ஆன்மிக சுற்றுலா அழைத்துச் செல்லப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

2022-2023ஆம் ஆண்டு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் மானியக் கோரிக்கையின்போது, தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கும், வைணவ கோயில்களுக்கும் முக்கிய விழா நாட்களில் ஆன்மிகப் பயணம் செல்ல சுற்றுலா துறையுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவியை வழிபட அருமையான வாய்ப்பு... IRCTC-ன் அசத்தல் பேக்கேஜ் அறிமுகம்!

இதை செயல்படுத்தும் விதமாக கடந்த ஆடி மாதம் பிரசித்தி பெற்ற அம்மன் கோயில்களுக்கு சுற்றுலாத்துறையுடன் இணைந்து ஆன்மிக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பெருமளவில் பக்தர்கள் பயன் அடைந்தனர். எனவே அதைத் தொடர்ந்து இந்த புரட்டாசி மாதம் வைணவ கோவில்கள் சுற்றுலாத் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.

தற்போது, சென்னை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களைத் தலைமையிடமாக கொண்டு வைணவ கோயில்களுக்கு ஆன்மிக சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயில், திருவிடந்தை நித்ய கல்யாண பெருமாள் கோயில், மாமல்லபுரம் ஸ்தல சமய பெருமாள் கோயில், சிங்கப்பெமாள் கோயில் பாடலாத்ரி நரசிம்மர் கோயில், திருநீர்மலை நீர் வண்ண பெருமாள் கோயில் என ஒரு பயணத்திட்டமும்,

சென்னையில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், திருநீர்மலை நீர்வண்ண பெருமாள் கோயில், திருமுல்லைவாயில் பொன்சாமி பெருமாள் கோயில், திருவள்ளூர் வைத்திய வீரராகவபெருமாள் கோயில், ஸ்ரீபெரும்புத்தூர் ஆதிகேசவ பெருமாள் கோயில், பூந்தமல்லி வரதராஜ பெருமாள் கோயில் உள்ளிட்ட கோயில்களுக்கு இரண்டாவது பயணத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

திருச்சியிலிருந்து, உறையூர் அழகிய மணவாள பெருமாள் திருக்கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில், உத்தமர்கோயில் புருஷோத்தம பெருமாள் திருக்கோயில், குணசீலம் பிரசன்ன வெங்கடாசல பெருமாள் திருக்கோயில், தான்தோன்றி மலை கல்யாண வெங்கடராம பெருமாள் திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டம் போடப்பட்டுள்ளது.

தஞ்சாவூரிலிருந்து, திருகண்டியூர் சாபவிமோச்சன பெருமாள் திருக்கோயில், கும்பகோணம் சாரங்கபாணி பெருமாள் திருக்கோயில், திருநாகேஸ்வரம் உப்பிலியப்பன் பெருமாள் திருக்கோயில், நாச்சியார் கோயில் சீனிவாச பெருமாள் திருக்கோயில், திருச்சேறை சாரநாத பெருமாள் திருக்கோயில், மன்னார்குடி இராஜகோபால சுவாமி திருக்கோயில், வடுவூர் கோதண்டராம சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத்திட்டம் உள்ளது.

மதுரையிலிருந்து, கள்ளழகர் திருக்கோயில், ஒத்தகடை யோக நரசிம்ம பெருமாள் திருக்கோயில், திருமோகூர் காளமேக பெருமாள் திருக்கோயில், திருகோஷ்டியூர் சௌம்ய நாராயண பெருமாள் திருக்கோயில், கூடலழகர் பெருமாள் திருக்கோயில் உள்ளிட திருக்கோயில்களுக்கு ஒரு பயணத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஹரப்பா கலாச்சாரதை பறைசாற்றும் உலகின் மிகப்பெரிய அருங்காட்சியகம் ராக்கிகர்ஹியில் உருவாகிறது!

கட்டணம் , நேரம் :

இந்த வைஷ்ணவ கோவிகள் சுற்றுலா என்பது ஒரு நாள் திட்டம் ஆகும். காலை 8.30 மணிக்கு தொடங்கி, மாலை 5.00 மணிக்கு நிறைவடையும். ஒரு நபருக்கு ரூ.900 குறைந்தபட்ச கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இந்த ஆன்மீக சுற்றுலாவில் பக்தர்களுக்கு மிகக்குறைந்த கட்டணத்தில் மதிய உணவு, கட்டணமில்லா சிறப்பு தரிசனம், கோயில் பிரசாதம், கோயில்கள் பற்றிய விவரங்கள் அடங்கிய கையேடு வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 

இந்த ஆன்மிக சுற்றுலாவில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் சுற்றுலாத்துறை இணையதளத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். மேலும், இது தொடர்பாக விவரங்களுக்கு www. ttdconline.com என்ற சுற்றுலாத்துறை இணைய தளத்திலும், 044 25333333, 25333444 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொண்டு தெரிந்துக் கொள்ளலாம்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Temple, Tourism

அடுத்த செய்தி