Home /News /spiritual /

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் கோவிலுக்கு போகக்கூடாது?

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் கோவிலுக்கு போகக்கூடாது?

பெண்கள்

பெண்கள்

தீட்டு என்பது இறைவன் கொடுத்த வரம். தீட்டு வரவில்லை என்றால் குழந்தை பிறக்காது. வம்சம் தழைக்காது. உலகம் இயங்காது. பெண் என்பவள், உலகின் மிக பெரிய சக்தி. அவர்களை நம் முன்னோர்கள் நடத்தியவாறே நடத்தினால் உத்தமம். ஆனால் காலபோக்கில் இதனுடைய தார்பரியமே தெரியாமல் அவர்கள் மனம் காயப்படும்படி ஒதுக்கி வைப்பது சரியில்லை.

மேலும் படிக்கவும் ...
பெண்ணின் மாதவிடாய் காலத்தின் போது அவர்கள் கோவிலுக்கு உள்ளேயோ அல்லது வீட்டினுள் இருக்கும் பூஜை அறையின் உள்ளேயோ செல்ல அனுமதிப்பதில்லை. வீட்டின் மற்ற உறுப்பினர்களை விட்டு தள்ளியே இருக்க வேண்டும். ஊறுகாயை தொடக்கூடாது. சமலயறைக்குள் நுழையக் கூடாது என இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். சுருக்கமாக சொல்ல வேண்டுமானால், மாதவிடாய் காலத்தின் போது யாருடனும் பேசாமல் அமைதியாக ஒரு இடத்தில் இருக்க வேண்டும் என்ற மரபு சார்ந்த இந்த பழக்க வழக்கங்கள் தென் மாவட்ட கிராமக்களில் இன்றும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இதில் ஒளிந்திருக்கும் அற்புதமான விஞ்ஞான காரணங்கள் குறித்து நாட்டுப்புறப் பாடகி அனிதா குப்புசாமி இந்த பதிவில் விளக்குகிறார்.

பெண்ணின் மாதவிடாய் காலத்தின் போது அவர்களை இந்த சமூதாயம் ஒதுக்குகிறாதா ?

பொதுவாக பெண்குழந்தைகள் பூப்பெய்தும் காலம் குழந்தை பருவமாகவே இருக்கிறது. வழக்கமாக ஆடி ஓடி விளையாடிக் கொண்டு இருந்த பெண் குழந்தைக்கு திடீர்னு இரத்த கசிவு ஏற்படுவது உடலளவிலும் மனதளவிலும் சோர்வை ஏற்படுத்தும். ஆனால் அவர்களால் அதனை புரிந்துக் கொள்ள முடியாது. அதனால் எப்போதும் போலவே விளையாடிக்கொண்டே இருப்பார்கள். அதனால் இரத்த கசிவு அதிகமாகும். இதனால் மிகவும் சோர்வுடன் காணப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல் அந்த நேரத்தில் அவர்களை மிகவும் சுத்தமாக பாதுகாக்க வேண்டும். நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். ஆனால் இது குறித்து சாதாரணமாக சொன்னால் கேட்க மாட்டார்கள். அதனால்தான் நம் முன்னோர்கள் இதற்கு என்று ஒரு சாஸ்திரம் அமைத்து, சில சம்பிரதாயங்கள் மூலம் அவர்கள் தனியாக அமர வேண்டும் எங்கும் செல்லக்கூடாது என்று தெய்வத்தின் பெயரை சொல்லி இப்படி ஒரு முறையை வைத்துள்ளனர்.

ஏன் எதையும் தொடக்கூடாது, கோவிலுக்கு செல்லக்கூடாது?

மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் மிகவும் உஷ்ணமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும். உடலில் ஏற்படும் வெப்பமானது சில குறிபிட்ட பொருட்களை தொட்டால் அது கெட்டுபோகக்கூடும். அதனால்தான் சமையலறைக்குள் நுழையக்கூடாது என்கின்றனர். அதுமட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்திகுறைவாக உள்ளதால் யாரையும் தொடாமல் தனியாக இருப்பதுதான் நல்லது. அதனால் அந்த சமயத்தில் பெண்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் வராமல் இருக்கும்.

மேலும் படிக்க... ஒருவனுக்கு ஒருத்தி மட்டும்தானா?

ஆனால் இப்போ கொரோனா வந்த பிறகு உலக நாடுகள் சொன்ன பிறகு தனிமையில் இருக்கிறோம். செல்ஃப் குவாரன்டைனில் (self quarantine ) இருக்கிறோம். இதைதான் நமது முன்னோர்கள் அப்போவே சொல்லி இருக்கிறார்கள். மாதவிடாய்க்கு மட்டுமல்ல. அம்மை நோய் வந்தால்கூட அப்படிதான் தனிமையில் இருக்க சென்னார்கள். அந்த காலத்தில் அம்மை போட்ட வீட்டிற்குள் யாரும் நுழையக்கூடாது என்று வேப்பிலையை வீட்டின் முன்பு வைப்பார்கள்.அப்போது அது ஒரு நல்ல கிருமிநாசினியாகவும் செயல்பட்டு, யாரும் அந்த வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பதற்கு ஒரு நல்ல அடையாளமாகவும் இருந்தது. அது போலவே மாதவிடாயின் போது பெண்கள் மீது ஒருவிதமான இரத்த வாசனை வரும் என்பதால் அவர்களை எந்த துர்ஷட சக்திகளும் அண்டக்கூடாது என்றும், சில விஷமுள்ள பூச்சிகளும் மிருகங்களும் அண்டகூடாது என்றும் தனிமையில் பாதுகாப்பாகவும் வேப்பிலையுடனும் நமது முன்னோர்கள் இருக்க சொன்னார்கள்.

மேலும் அந்தக்காலங்களில் பெண்களுக்கு மாதவிடாயில் எற்படும் இரத்த வெளியேற்றத்தை மறைக்க போதிய வசதி கிடைக்கவில்லை. தாங்கள் உடுத்தும் சாதாரண புடவையின் துணியையே பயன்படுத்தினார்கள். அது அவ்வளவு பாதுகாப்பானதாக இருக்காது. அதனால் வெளியே செல்ல வேண்டாம் என்றும் குறிப்பாக கோவில் போன்ற பொது இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என்றும் கூறினார்கள். அவர்கள் கோவில் மட்டுமல்ல அந்த மூன்று நாட்களுமே வேறு எந்த இடத்திற்கும் செல்ல மாட்டாரக்ள்.

படிக்க... மாங்கல்ய பலம் தரும் காரடையான் நோன்பு... என்ன செய்ய வேண்டும்? விளக்குகிறார் அனிதா குப்புசாமி

அதுமட்டுமல்லாமல் அறிவியல் ரீதியாக பார்த்தோமேயானால், இந்த மாதவிடாய் நாட்களில் நமது உடலில் உள்ள சக்கரங்கலேல்லாம் கீழ் நோக்கி செயல்படும். அதனால் புவி ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்பட்டு  இரத்த போக்கு அதிகமாகக்கூடும். சாதாரண நாட்களில் பெண்களின் உடல் இருப்பதை போல மாதவிடாய் நாட்களில் இருக்காது. பலவிதமான மாற்றங்கள் ஏற்படும். அதனை அனைத்து பெண்களுமே உணர்ந்திருப்பார்கள். இதுவும் ஒரு முக்கியமான அறிவியல் காரணமாகும். அதனால் இந்த விஷயத்தை நாம் மரபு ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பார்க்க வேண்டுமே தவிர பெண்ணை அடிமைபடுத்துதல், ஒதுக்குதல், ஆண் ஆதிக்கம் என்று நினைக்க க்கூடாது.இந்த விஷயங்கள் அனைத்தும் முழுக்க முழுக்க பெண்ணின் உடல் நலனுக்காக கொண்டுவரப்பட்டதே. ஆனால் இப்போதுதான் சானிடரி நாப்கின்கள்( sanitary napkins) இருக்கின்றனவே, அதுமட்டுமல்லாமல் அனேக பெண்கள் மாதவிடாய் காலத்தில் எவ்வாறான சுகாதார விஷயங்களை கடைப்பிடிக்க வேண்டுமென நன்கு அறிந்துள்ளனர். ஆனாலும் அவர்களை பாதுகாக்க வேண்டும், ஓய்வு எடுக்க வைக்க வேண்டும் என்பது இன்றி தீட்டு என்ற வார்த்தைகளை கூறி காயப்படுத்துகின்றனர்.

மேலும் படிக்க...  தாலி கயிற்றை மாற்ற வேண்டிய நாட்கள் எது? எந்த நேரத்தில் மற்றலாம்?

இந்த தீட்டு என்பது இறைவன் கொடுத்த வரம். தீட்டு வரவில்லை என்றால் குழந்தை பிறக்காது. வம்சம் தழைக்காது. உலகம் இயங்காது. பெண் என்பவள், உலகின் மிக பெரிய சக்தி. அவர்களை நம் முன்னோர்கள் நடத்தியவாறே நடத்தினால் உத்தமம். ஆனால் காலபோக்கில் இதனுடைய தார்பரியமே தெரியாமல் அவர்கள் மனம் காயப்படும்படி ஒதுக்கி வைப்பது சரியில்லை. நம் முன்னோர்கள் ஒதுக்கி வைக்கவில்லை பாதுகாத்தார்கள். பெண்களை தெய்வமாக மதித்தார்கள்.
Published by:Vaijayanthi S
First published:

Tags: Hindu Temple, Menstrual time, Periods, Pushpavanam kuppusamy

அடுத்த செய்தி