நிவேதனத்தை கடவுளுக்கு ஏன் படைக்கிறோம் தெரியுமா?

இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு மிக்க நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும்.

இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு மிக்க நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும்.

 • Share this:
  நிவேதனம் என்றால் நாம் இலையில் படைக்கும் உணவை கடவுளை சாப்பிட வைத்தல் என்று அர்த்தம் அல்ல . எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு நன்றி தெரிவிக்கிறேன் என்று கூறுவதே நிவேதனமாகும். பண்டிகைகள், விரதம் வந்தால் பலகாரங்களை சுவாமியின் முன் படைக்கிறோம். பொங்கல் வந்தால் வெண்பொங்கல், சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செய்கிறோம். கிருஷ்ணஜெயந்தி வந்தால் சீடை, முறுக்கு என வைக்கிறோம். இதையெல்லாம் பார்க்கும் சிலர் கேலியாக, கடவுளா சாப்பிடு போகிறார் என்றும் கடவுளின் பெயரை சொல்லி நீங்கள்தான் சாப்புடுகிறீர்கள் என்றும் கூறுவார்கள்... இவ்வாறு கேலி செய்பவர்களிடம் சற்றும் கோபப்பட நமக்கு உரிமையில்லை. ஏனெனில், அவர்கள் உண்மையைத் தான் சொல்கிறார்கள்.

  நிவேதனம் என்பதன் பொருளை அறியாமல் அவர்கள் பேசினாலும் நிஜம் அது தான். நிவேதனம் என்றால் சுவாமியை சாப்பிட வைத்தல் என்பது பொருள் அல்ல. அறிவித்தல் என்று அர்த்தம். இறைவா இந்த சமயத்தில் எனக்கு இந்த உணவை உண்ணத்தந்து உயிர் காத்த உனக்கு மிக்க நன்றி தெரிவிக்கிறேன், என்று அறிவிப்பதே நிவேதனமாகும்.

  மேலும் படிக்க... மேலும் படிக்க.. திருப்பதி ஏழுமலையான் திருவுருவச்சிலையின் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள்!

  மேலும் படிக்க... திருப்பதி தேவஸ்தானத்தின் ஸ்பெஷல் நறுமண ஊதுபத்தி.. செப்டம்பர் 13 முதல் விற்பனை...

  சுவாமியின் முன்னால் இலைபோட்டு திருவிழா மற்றும் பண்டிகை  நாட்களில் மட்டுமே நிவேதனம் செய்கிறோம். இதை தினமும் செய்யலாம். நம் வீட்டில் அன்றாடம் சமைக்கும் வெள்ளை அன்னத்தை சுவாமிக்கு நிவேதனம் செய்துவிட்டு, அவரது நினைவோடு சாப்பிட்டால் உடலும் சுத்தமாகும், உள்ளமும் சுத்தமாகும் என்பதிஐதீகம்...

  மேலும் படிக்க... திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்தியம் செய்யப்படுகிறது
  Published by:Vaijayanthi S
  First published: