பெரிய பெரிய பண்டிகைகள் மற்றும் விசேஷங்கள், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் தொடங்கும் என்றாலும், சில முக்கியமான பண்டிகைகள் ஒவ்வொரு மாதமும் கொண்டாப்படும். அந்த வகையில், மே மாதம் என்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன என்று பார்க்கலாம்.
மே 3 – அட்சயத் திரிதியை
தமிழ் மாதங்களில் சித்திரை மாதத்தில் வளர்பிறையில் வரும் திருதியை என்ற விதியை அட்சய திருதியை என்று கொண்டாடப்படுகிறது. புராணங்களில் ஒன்றான மகாபாரதத்தில் பாண்டவர்கள் காட்டுக்குள் இருந்த பொழுது, திரவுபதி சூரியனை வேண்டி பெற்றது தான் அட்சயப் பாத்திரம் என்று கூறப்படுகிறது. அட்சயம் என்றால் அள்ள அள்ள குறையாதது என்று பொருள். அதே போல அட்சய திருதியை நாள் அன்று செய்யும் நல்ல காரியங்களின் மூலம் சுபிட்சம் உண்டாகும், பொருள் சேர்க்கை ஏற்படும். நகை தான் வாங்கவேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. அட்சயத் திரிதியை உப்பு வாங்கினால் கூட செல்வ வளம் பெருகும்.
மே 3 – ரம்ஜான்
இஸ்லாமியர்களின் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் மே மாதம் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இஸ்லாமியர்களின் கேலண்டர் படி,ஒன்பதாம் மாதம் ரம்ஜான் கொண்டாடப்படுகிறது. நிலவின் வளர்பிறை நாட்களின் அடிப்படையில் இந்த பண்டிகை அமைந்துள்ளது. உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்கள் ஒரு மாதம் முன்பிருந்தே தினமும் நோன்பு இருக்கத் துவங்கி, ஒரு வேளைமட்டுமே உணவு உண்டு தீவிரமான விரதத்தை கடைப்பிடித்து ரம்ஜான் கொண்டாடுவார்கள்.
மே – 14 நரசிம்மர் ஜெயந்தி
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் நரசிம்ம நான்காவது அவதாரம் ஆகும் சிங்கத்தின் தலையும் மனித உடலும் சேர்ந்த தோற்றம் கொண்டவன் தான் நரசிம்மர். நரசிம்மர் அவதிரத்த நாள், இந்த ஆண்டு மே மாதம் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. வைணவர்களின் முதன்மையான கடவுளாக இருப்பவர் நரசிம்மர். தன்னுடைய பக்தர்களை காக்க எந்த ரூபத்திலும் எந்த நேரத்திலும் உதவுவார் என்று ஆழமான நம்பிக்கை உள்ளது.
மே 16 – புத்த பூர்ணிமா
புத்த மதத்தை சேர்ந்தவர்களின் மிகப்பெரிய கொண்டாட்டம் கௌதம புத்தரின் பிறந்த நாள்தான். புத்தர் வைகாசி மாத பௌர்ணமி அன்று பிறந்துள்ளார். உலகம் முழுவதிலுமே இந்து காலண்டரின் அடிப்படையில், வைகாசி மாதம் வரும் பௌர்ணமியையே புத்த பூர்ணிமா என்று பரவலாக கொண்டாடப்படுகிறது.
Also Read...இந்த வாரம் வரவுள்ள சுபமுகூர்த்தம், ஆன்மிக சிறப்புள்ள நாட்கள்.. (ஏப்ரல் 26- 02)
வைகாசி மாத விசேஷங்கள், விழாக்கள் குறித்த தகவல்கள்...
மே 26 – இயேசு சொர்க்கத்துக்கு செல்லும் தினம்
ஆன்சென்ஷன் தினம் என்று கூறப்படும் தினம், ஈஸ்டர் கொண்டாடிய பிறகு வரும் 40வது நாள் ஆகும். ஈஸ்டர் அன்று மீண்டும் உயிர்பெற்று வரும் இயேசு, 39 நாட்கள் பூமியில் வாழ்ந்துவிட்டு, அடுத்த நாள், 40 வது நாள் அன்று மீண்டும் விண்ணுலகுக்கு செல்வது கிறித்துவர்களால் கொண்டாடப்படுகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.