Horoscope : தனுசு ராசிக்கான மாத ராசி பலன்... ஏப்ரல், 2021

Horoscope : தனுசு ராசிக்கான மாத ராசி பலன்... ஏப்ரல், 2021

தனுசு

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Astrology April, 2021

  • Share this:
    தனுசு (மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்)

    கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சனி - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், ராஹு - லாப ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்களின் அமைப்பு உள்ளது.

    கிரகமாற்றம்:

    10-04-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

    11-04-2021 அன்று சுக்ர பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

    14-04-2021 அன்று செவ்வாய் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

    28-04-2021 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

    பலன்:

    உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாத உத்தமர் என்பதற்கேற்ப மனதில் ஒன்று வைத்து வெளியில் ஒன்று பேசாத குணமுடைய தனசு ராசி அன்பர்களே, இந்த மாதம் தன்னம்பிக்கை வளரும். பணவரவு திருப்தி தரும். வாய்க்கு ருசியான உணவு கிடைக்கும். வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். ஆனாலும் தேவையற்ற வீண் பேச்சுகளை தவிர்ப்பது நல்லது.  அறிவுத்திறன் அதிகரிக்கும். பெயருக்கும், புகழுக்கும் பங்கம் வரலாம்.

    தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்வீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும் பணவரத்து கூடும்.

    உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். கூடுதல் பணி காரணமாக உடல்சோர்வு உண்டாகலாம். சக ஊழியர்களுடன் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

    குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும். பிள்ளை கள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

    பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். மனோதிடம் கூடும்.

    கலைத்துறையினருக்கு கவனமாக பேசுவது நல்லது.  வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

    அரசியலில் உள்ளவர்களுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். காரியங்கள் தாமதமாக நடந்தாலும் வெற்றிகரமாக நடக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய பதவிகள் வரும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

    மூலம்:

    இந்த மாதம் முயற்சிகளின் பேரில் சுபகாரியங்கள் தங்கு தடையின்றி நடைபெறும். குழந்தை பாக்கியம் கிட்டும். வீட்டிற்குத் தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு, மனை ஆகியவற்றை வாங்கும் போது கவனம் தேவை. ஒருமுறைக்கு இருமுறை விசாரித்து வாங்குவது நல்லது.  மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும். முயற்சிகளில் சிறுசிறு தடைகள் வரலாம்.

    பூராடம்:

    இந்த மாதம் உங்களைப் பற்றி உங்கள் குடும்பத்தார் புரிந்து கொண்டு அனுசரனையாக நடந்து கொள்வர்.  தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும்.  திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கான முயற்சிகள் இனிதே நடக்கும். நல்ல வரனாகவும் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் அனுகூலம் கிடைக்கும்.

    உத்திராடம் 1ம் பாதம்:

    இந்த மாதம் உடல் நலனைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். சளி மற்றும் மார்புத்தொல்லை வரலாம். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும்.

    பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமையில் நெய்தீபம் ஏற்றி வணங்க எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். செயல் திறமை அதிகரிக்கும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 20, 21

    அதிர்ஷ்ட தினங்கள்: 13, 14
    Published by:Vijay R
    First published: