Horoscope : கன்னி ராசிக்கான மாத ராசி பலன்... ஏப்ரல், 2021

Horoscope : கன்னி ராசிக்கான மாத ராசி பலன்... ஏப்ரல், 2021

கன்னி

கணித்தவர்: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோசியர் (7845119542) | Monthly Astrology April, 2021

  • Share this:
    கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

    கிரகநிலை: தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி - களத்திர ஸ்தானத்தில் சூர்யன், புதன், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், ராஹு என கிரகங்களின் அமைப்பு உள்ளது.

    கிரகமாற்றம்:

    10-04-2021 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

    11-04-2021 அன்று சுக்ர பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

    14-04-2021 அன்று செவ்வாய் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

    28-04-2021 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்க்கு மாறுகிறார்.

    பலன்:

    உழைப்பின் மூலம் வாழ்க்கையில் வெற்றி பெறும் கன்னி ராசி அன்பர்களே இந்த மாதம் தடங்கல்கள் அகலும். திட்டமிட்டபடி  காரியங்கள் நடந்து முடியும். வீண் வாக்குவாதங்களை நீங்கும். எந்த காரியத்திலும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். தன வாக்கு வாகன லாபம் ஏற்படும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

    குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். கணவன் மனைவிக்கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.  பிள்ளைகள்  வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம். உறவினர்கள் நண்பர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் மறையும்.

    தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். தேங்கி இருந்த சரக்குகள் விற்பனையாகும். எதிர்பார்த்த லாபம் கிடைத்தாலும் அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.

    உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான  பலன்  கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு  வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். மற்றவர்களிடம்  அனுசரித்து செல்வது நன்மை தரும். நண்பர்களிடம் பகை ஏற்படலாம். பிடிவாதத்தை விட்டு விடுவது  காரிய வெற்றிக்கு உதவும். வீண் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாக நேரிடலாம்.

    பெண்களுக்கு வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. காரியங்களை  செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

    கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. தங்கள் உடைமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள்.

    அரசியல் மற்றும் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது.  பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும்.

    மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

    உத்திரம் 2, 3, 4 பாதம்:

    இந்த மாதம் சக ஊழியர்களுடன் ஒத்துப் போவீர்கள்.  பெரிய கடன்களிலிருந்து விடுபட உதவும் மாதமிது. உற்பத்தி சார்ந்த தொழிற்துறையாளர்களுக்கு தொய்வு இன்றி தொழில் நடைபெறும். பதவி உயர்வுக்குரிய அறிவிப்பு வந்து சேரும். சிலருக்கு வெளியூருக்கு மாற்றலும் வரும். உடனே கைகூடா விட்டாலும் அதற்கான விதையை இப்போது ஊன்ற வேண்டிய காலகட்டமிது.

    அஸ்தம்:

    இந்த மாதம் பெற்றோர் நலம் கவனிக்கப்பட வேண்டும். மக்கள் நலனிற்கு எந்த குறைபாடும் இருக்காது. கலைத்துறையினருக்கு ஓரளவு நன்மைகள் வந்து சேரும். ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும்.  நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும்.

    சித்திரை 1, 2, பாதம்:

    இந்த மாதம் ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகள் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது. எதிர்கால படிப்புகளுக்கான பணிகளை இப்போதே ஆரம்பிக்கலாம்.  குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பார்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை  ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது.

    பரிகாரம்:  ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வணங்கி வர உடல் ஆரோக்கியம் பெறும். குடும்ப பிரச்சனை தீரும்.

    அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

    சந்திராஷ்டம தினங்கள்: 13, 14

    அதிர்ஷ்ட தினங்கள்: 6, 7
    Published by:Vijay R
    First published: