மாதந்தோறும் அமாவாசை தினங்கள் வந்தாலும், தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மகாளயபட்ச அமாவாசை, ஆடி அமாவாசை ஆகிய தினங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. ஆனால், அதற்கு மாறாக, மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் வரும் பெளர்ணமியன்று, முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
இன்றைய தினத்தில், புண்ணிய நதியாம் கங்கை, அனைத்து நதிகள், கடல், ஏரிகள், குளங்களில் கலந்திருப்பதாக ஐதீகம். இதனால், மாசி மகத்தன்று நீர் நிலைகளில் புனித நீராடினால் ஏழு ஜென்ம பாவங்கள் போகும் என்பது ஐதீகம்.
இதன் காரணமாகவே, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பகோணத்தில் மகாமகம் நடத்தப்படுகிறது. இதையே வட இந்தியாவில் கும்பமேளாவாக கொண்டாடுகின்றனர்.
காவிரி நீராடுதல்
இத்தகைய சிறப்புமிக்க, பௌர்ணமி தினத்தை ஒட்டி, நூற்றுக்கணக்கான பக்தர்கள், இன்று அதிகாலை முதலே, திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் காவிரி படித்துறையில் குவிந்தனர். காவிரி ஆற்றில் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர்.
மேலும், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் -அகிலாண்டேஸ்வரி, உத்தமர்கோவில், வயலூர் முருகன் கோயில் உள்ளிட்ட திருத்தலங்களுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Masi Magam, Srirangam, Trichy