Home /News /spiritual /

பௌர்ணமி: கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி

பௌர்ணமி: கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி

பௌர்ணமி: கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி

பௌர்ணமி: கருட வாகனத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி

Tirupati | பௌர்ணமியை முன்னிட்டு திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உற்சவர் மலையப்பசாமி கருட வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். நான்கு மாடவீதிகளில் கருட வாகனத்தில் உலா வந்த மலையப்பசுவாமியை பக்தர்கள் கோவிந்தா முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

மேலும் படிக்கவும் ...
    திருமால் சீனிவாசனாக திருப்பதியில் இருந்த பொழுது, தான் வைகுண்டத்தில் இருந்ததைப் போல இங்கும் இருக்க ஆசை கொண்டார். அதனை அறிந்த கருடன், வைகுண்டத்தில் இருக்கும் ஏழு மலையையும் பெயர்த்து எடுத்து திருப்பதியில் சேர்த்தார். அங்கு திருமால் சீனிவாசனாக குடியிருக்கிறார். தான் ஆசைப்பட்டதை செய்த கருடனை தன்னுடைய வாகனமாக ஆக்கிக் கொண்டார். இதனை நினைவு படுத்தும் விதமாக திருப்பதியில் கருட சேவை, பிரம்மோற்சவ திருவிழாவின் பொழுது நடத்தப்படுகிறது. பிரம்மோற்சவ காலங்களில் கருட வாகனத்தில் மலையப்பசுவாமி எழுந்தருளும் இந்நாளில் மட்டும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள். ஒவ்வொரு பௌர்ணமி நாட்களிலும் கருடவாகனத்தில் வலம் வந்து அருள்பாலிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கருடவாகன சேவை நடைபெறுகிறது. மாசி மாத பௌர்ணமி தினமான இன்று ஏழுமலையானின் கருடசேவை கோவில் மாடவீதிகளில் நடைபெற்றது.

    கருட வாகன சேவை முன்னிட்டு சர்வ அலங்கார திருக்கோலத்தில் உற்சவர் மலையப்ப சுவாமி கோவிலில் இருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார். தொடர்ந்து தங்க கருட வாகனத்தில் எழுந்தருளிய அவருக்கு தீப,தூப,நைவேத்திய சமர்ப்பணம் நடத்தப்பட்டது.

    மேலும் படிக்க... Masi Month Rasi Palan : மாசி மாத ராசிபலன்கள் 2022

    அதன் பின்னர் மாடவீதிகளில் எழுந்தருளிய உற்சவர் மலையப்ப சுவாமி கருட வாகன சேவை கண்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அப்போது மாடவீதிகளில் கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று கோஷங்கள் எழுப்பி வழிபாடு நடத்தினர்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Tirupati, Tirupati temple

    அடுத்த செய்தி