Home /News /spiritual /

மாசி சோமவாரத்தில் சிவ தரிசனம் செய்தால் மங்கலம் உண்டாகும்...

மாசி சோமவாரத்தில் சிவ தரிசனம் செய்தால் மங்கலம் உண்டாகும்...

சிவன்

சிவன்

Sivan | அற்புதமான இந்த மாசி மாதத்தில் திங்கட்கிழமையில் வருகிற சோமாவார நாளில் சிவ தரிசனம் செய்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். நோயற்ற வாழ்வை சிவன் கொடுப்பார். குடும்பத்தில் மங்கலம் உண்டாகும்...

    மாசி மாதம் புண்ணியம் நிறைந்த மாதம். இந்த மாதத்தில் வருகிற மாசி மாத திங்கட்கிழமைகளும் விஷேசமானவை. கார்த்திகை சோம வாரமும் மாசி சோம வாரமும் சிவ வழிபாட்டுக்கு உரிய நாளாக போற்றப்படுகிறது. நாளை மாசி சோம வாரம் எனப்படும் திங்கட்கிழமை என்பதால், காலை, மதியம் உச்சிகால பூஜை, மாலை மற்றும் இரவு அர்த்த ஜாமத்தின் போது சிவனாருக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்றயுள்ளது.

    சிவபெருமானை வழிபட எல்லாநாளும் உகந்த நாள்தான். என்றாலும்  திங்கட்கிழமை சிவபெருமானுக்கு உகந்த நாள். திங்கட்கிழமையை சோமவாரம் என்பார்கள். சோமன் என்றால் சந்திரன். சிவபெருமான், தன் சிரசில் கங்கையை வைத்துக் கொண்டிருக்கிறார். அதேபோல சந்திரனையையும் பிறைபோல் சூடிக்கொண்டிருக்கிறார். இதனால்தான் சோமநாதன், சோமேஸ்வரர், சோமசுந்தரர், சந்திரசூடேஸ்வரர், சந்திரசேகரர் என்றெல்லாம் திருநாமங்கள் சிவனாருக்கு அமைந்திருக்கின்றன.

    சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமையில், சிவாலயங்களுக்குச் செல்வதும் சிவனாரை தரிசிப்பதும் மகத்தான பலன்களைத் தந்தருளும் என்பது ஐதீகம். சிவபெருமானின் ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லியபடிவணங்குவதும் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானைத் துதிப்பதும் கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்...

    மேலும் படிக்க... சிவனுக்கு உகந்த சோமவார விரதமும் வழிபடும் முறைகளும்!

    சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைக்குரிய சந்திரன் ஸ்லோகம்

    சோமவாரம் சுபிட்சம் நிச்சயம் என்பார்கள். சோமவாரத்தில், சிவ தரிசனம் செய்தால், மங்கல காரியங்கள் வீட்டில் நடக்கும். மங்காத செல்வங்களைக் கொடுப்பார். மாங்கல்ய பலம் சேர்ப்பார். நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் சிவனார் வாழச் செய்வார் என்பது நம்பிக்கை.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan

    அடுத்த செய்தி