Home /News /spiritual /

மாசி மாத பிரதோஷம் இன்று... சிவ வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்....

மாசி மாத பிரதோஷம் இன்று... சிவ வழிபாடு செய்தால் செல்வம் பெருகும்....

சிவன்

சிவன்

Pradosham: அடுத்த பிரதோஷ விரதம் பிப்ரவரி 28ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது.

    பிரதோஷம் என்பது சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு இந்து விரதம் ஆகும். கிருஷ்ண பக்ஷம் மற்றும் சுக்ல பக்ஷம் இரண்டின் திரயோதசி திதியில் 13வது நாள் பிரதோஷ விரதம் அனுசரிக்கப்படுகிறது . எனவே, இது இந்து நாட்காட்டியில் ஒவ்வொரு மாதமும் இரண்டு முறை வருகிறது. இன்று மாசி மாத பிரதோஷ விரதம்... அடுத்த பிரதோஷ விரதம் பிப்ரவரி 28ஆம் தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த பிரதோஷ விரதத்தை நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் முழு பக்தியுடனும் அர்ப்பணிப்புடனும் கடைப்பிடிக்கின்றனர். இந்த விரதம் சிவன் மற்றும் தேவி பார்வதியின் நினைவாக அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவின் சில பகுதிகளில், இந்நாளில் சிவபெருமானின் நடராஜ வடிவத்தை சீடர்கள் வழிபடுகின்றனர். ஸ்கந்த புராணத்தின் படி, பிரதோஷ விரதத்தில் இரண்டு விதமான விரத முறைகள் உள்ளன.

    முதல் முறையில், பக்தர்கள் இரவும் பகலும், அதாவது 24 மணி நேரமும் கடுமையான விரதத்தைக் கடைப்பிடிக்கிறார்கள். இரவில் விழிப்புடன் இருப்பதும் இதில் அடங்கும். இரண்டாவது முறையில் சூரிய உதயம் முதல் சூரிய அஸ்தமனம் வரை விரதம் கடைப்பிடிக்கப்பட்டு, மாலையில் சிவபெருமானை வணங்கிய பின் விரதத்தை முடிப்பார்கள்.

    மேலும் சிவ வழிபாடு உள்ளும்புறமுமாக தெளிவையும் ஞானத்தையும் கொடுக்கக் கூடியது என்பார்கள். சிவ வழிபாடு செய்வதற்கு, மாதந்தோறும் வருகிற திருவாதிரை நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷம். அதேபோல், மாதாமாதம் வருகிற சிவராத்திரி நன்னாள், சிவபெருமானை விரதம் இருந்து தரிசிப்பதும் பூஜிப்பதும் மகத்துவம் வாய்ந்தது என்கிறார்கள் ஜோதிட ஆச்சார்யர்கள்...

    அதேபோல், திரயோதசி திதி என்பது பிரதோஷ தினமாக, பிரதோஷ வைபவமாகக் கொண்டாடப்படுகிறது. திங்கட்கிழமை என்று சொல்லப்படுகிற சோமவாரத்தில் வருகிற பிரதோஷம், சுபிட்சத்தையும் முக்தியையும் கொடுக்கும். ரெம்பவே சிறப்பான நாளாக சொல்லப்படுகிறது...

    அதிலும் மாசி பிரதோஷம் என்பது ரெம்பவே விசேஷம். மாசி மாதம் என்பதே வழிபாட்டுக்கு உரிய மாதம்தான். அற்புதமான இந்த மாசி மாதத்தில் திங்கட்கிழமையில் வருகிற சோமாவார  பிரதோஷத்தில், சிவ தரிசனம் செய்தால் அனைத்து செல்வங்களும் கிடைக்கும். நோயற்ற வாழ்வை சிவன் கொடுப்பார்..

    பிரதோஷ விரதம் மற்றும் பூஜை:

    பிரதோஷ நாளில், அந்தி நேரம் - சூரிய உதயம் மற்றும் சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முந்தைய நேரம், மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த நேரத்தில் அனைத்து பிரார்த்தனைகளும் பூஜைகளும் கடைபிடிக்கப்படுகின்றன. சூரிய அஸ்தமனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன், பக்தர்கள் பூஜைக்கு தயாராக இருத்தல் நல்லது.

    அப்போது மஹா மிருத்யுஞ்சய மந்திரம் 108 முறை உச்சரிக்கப்படுகிறது. பூஜை முடிந்ததும், கலசத்தில் இருந்து தண்ணீர் எடுத்து, பக்தர்கள் தங்கள் நெற்றியில் புனித சாம்பலைப் பூசிக்கொள்வார்கள். பூஜை முடிந்ததும், பெரும்பாலான பக்தர்கள் தரிசனத்திற்காக சிவன் கோவில்களுக்குச் செல்கின்றனர். பிரதோஷ நாளில் ஒரு தீபம் ஏற்றினால் நல்ல பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    மேலும் படிக்க... சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமைக்குரிய சந்திரன் ஸ்லோகம்

    சிவனுக்கு உரிய நாள் திங்கட்கிழமையாகும். எனவே ஒரு திங்கள் கிழமையில் அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷ தினத்தில் சிவன் சன்னதியில் உங்கள் பிரார்த்தனையை ஆரம்பித்து தினமும் கடைபிடித்து வர வேண்டும். அவ்வாறு செய்வதால் பாவ வினைகள் நீங்கி உங்கள் வாழ்வில் மகிழ்ச்சியும் நிம்மதியும் ஏற்படும்.

    பிரதோஷ விரத திதி மற்றும் பூஜை நேரங்கள் பிப்ரவரி 14, திங்கட்கிழமை


























    சூரிய உதயம்14 பிப்ரவரி, 2022 07:03 AM.
    சூரிய அஸ்தமனம்14 பிப்ரவரி, 2022 06:18 PM.
    திரயோதசி திதி ஆரம்பம்13 பிப்ரவரி, 2022 06:42 PM.
    திரயோதசி திதி முடிவு14 பிப்ரவரி, 2022 08:28 PM.
    பிரதோஷ பூஜை நேரம்பிப்ரவரி 14, 06:18 PM - பிப்ரவரி 14, 08:51 PM


    நைவேத்தியமாக பழங்களையும் உங்களால் முடிந்த பாயாசம், சர்க்கரைப் பொங்கல் போன்ற ஏதாவது ஒரு நிவேதனத்தையும் படைக்கலாம். இது போல் தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் விரதம் மேற்கொண்டு சிவ பார்வதியை வணங்கினால் நிச்சயம் நம்முடைய வேண்டுகோள்கள் நிறைவேறும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan

    அடுத்த செய்தி