Home /News /spiritual /

மாசி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள்

மாசி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டின் சிறப்புகள்

அம்பாள்

அம்பாள்

Masi Friday | வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், நமக்கு செல்வத்தை அவள் அள்ளிக் கொடுத்து அருள் மழை பொழிவாள் என்பது நம்பிக்கை

    மாசி மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சிறப்பானது. அதிலும் அன்று விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்தால் நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அம்மாள் அருள் செய்வாள். நமக்கு என்ன தேவை என்பதை நாம் கேட்காமலே உணர்ந்து நமக்கு வழங்குபவர்கள்தான் நம் அம்மாக்கள். காளிகாம்பாளும் அப்படித்தான். உலகத்துக்கே அன்னையாகத் திகழ்பவள்தானே பராசக்தி. காளிகாம்பாளிடம் நாம் ஒருமுறையேனும் நின்று அவளை தரிசித்தாலே போதும். நாம் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்களையெல்லாம் போக்கி, நம்மை அருளிக் காப்பாள் என்பது நம்பிக்கை...

    செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தரிசிக்க குடும்பத்தில் மங்களகரமான விஷயங்கள நிகழும். அதிலும் மாசி மாதம் வந்துவிட்டால், செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை என்றில்லாமல் எல்லா நாளும் அம்பாளை வணங்குவது நல்லது.மேலும் விரதம் இருந்து அன்னை காளிகாம்பாளை கண்குளிரத் தரிசித்தால், நம் கவலைகளையெல்லாம் போக்கி அருளுவாள் அம்பாள். கஷ்டங்களையெல்லாம் நீக்கி வாழச் செய்வாள் அம்பிகை. தொடர்ந்து மாசிமாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விரதம் இருந்து காளிகாம்பாளை தரிசனம் செய்யுங்கள்.

    நம் குடும்பத்தையும் சந்ததியையும் செழிக்கச் செய்து அருளுவாள் சகல செல்வங்களையும் பெற்றுச் சந்தோஷமாக வாழ்க்கை நடத்த மாசி மாத வெள்ளிக்கிழமை விரதத்தை கடைப்பிடித்தால் சிறப்பு. அதுபோல லட்சுமி தேவியை வammanழிபாடு செய்தால், நாம் பண கஷ்டம் இல்லாம் இருக்கலாம்.



    தொடர்ந்து 15 வெள்ளிக்கிழமை அம்பாளிற்கு மல்லிகை, செந்தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய பூக்களில் ஏதாவது ஒரு பூவினால் அர்ச்சனை செய்து சர்க்கரைப் பொங்கல், வெள்ளை மொச்சை படைத்து பூஜை செய்யவும். இதனால் புகழ், செல்வம், வியாபார அபிவிருத்தி, புத்திரப்பேறு, குடும்ப ஒற்றுமை உண்டாகும்.

    மாசி வெள்ளியில் மாரியம்மன் முதலான அம்மனைத் தரிசனம் செய்து வேண்டினால் நன்மை உண்டாகும். மங்காத செல்வங்கள் தந்து காத்தருள்வாள் தேவி  என்பது ஐதீகம். குறிப்பாக, ராகுகால வேளையில் எலுமிச்சை தீபமேற்றி வழிபட்டால் காரியத்தடைகள் எல்லாம் நீங்கும்.

    மேலும் படிக்க... 12 ஆண்டுகளுக்குப் பிறகு கும்ப ராசியில் சூரியனும் வியாழனும் அஸ்தமனம்...

    வெள்ளிக்கிழமையில் விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால், நமக்கு செல்வத்தை அவள் அள்ளிக் கொடுத்து அருள் மழை பொழிவாள். எத்தனை வெள்ளிக்கிழமை வந்தாலும், தை, மாசி  வெள்ளிக்கிழமைகளுக்கும், ஆடி வெள்ளிக்கிழமைகளுக்கும் தனிப்பெருமை உண்டு. இந்த 3 மாதங்களிலும் வரும் வெள்ளிக்கிழமைகளில் தெற்கு நோக்கிய அம்பிகையையும், வடக்கு நோக்கிய அம்பிகையையும் வழிபாடு செய்துவருவது நல்லது...
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Amman Thayee, Hindu Temple

    அடுத்த செய்தி