Home /News /spiritual /

இன்று சதுர்த்தி விரதம்... விநாயகர் சிறப்பு பாடல்களின் தொகுப்பு...

இன்று சதுர்த்தி விரதம்... விநாயகர் சிறப்பு பாடல்களின் தொகுப்பு...

விநாயகர்

விநாயகர்

Masi month chaturthi 2022 | சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும் என்பது ஐதீகம்

    எந்தவொரு காரியத்தைத் தொடங்கினாலும், விநாயகரை வழிபட்டுத்தான் நாம் தொடங்குவது வழக்கம். ‘பிள்ளையார்சுழி’ போட்டு நாம் எழுதும் எழுத்துக்களுக்கு நல்ல பலன் கிடைக்கின்றது. எனவே தான் விநாயகரை ‘ஆதி மூல கணபதி’ என்று வர்ணிக்கின்றோம். கணங்களுக்கெல்லாம் அதிபதி என்பதால் ‘கணபதி’ என்கின்றோம். விநாயகருக்கு உகந்த நாட்கள், திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமையாகும். திதிகளில் சதுர்த்தி திதி அவருக்கு உகந்ததாகும். அதிலும் மாசி மாதத்தில் வரும் சங்கடாஹர சதுர்த்தி ரெம்பவே விஷேசமாகும்...

    மாசிக்கயிறு பாசி படியும் என்னும் பழமொழிகள் வழக்கில் உண்டு. மாசி மாதத்தில் வரும் சங்கடஹர சதுர்த்தியன்று மாலை நேரத்தில் 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் தாலியில் உள்ள மஞ்சள் கயிற்றை  மாற்றினால் சுமங்கலியாக வாழும் பாக்கியம் உண்டாகும். சங்கட என்றால் துன்பம் ஹர என்றால் அழித்தல். துன்பங்களை அழிக்கும் விரதமே சங்கடஹர சதுர்த்தி.



    ஏழரைச் சனி, அஷ்டமத்துச் சனி, அர்த்தாஷ்டமச் சனி ஆகியவற்றின் பிடியில் சிக்கியவர்களுக்கு அருள்கொடுப்பவர் ஆனைமுகன். சனி அவரைப் பிடிக்கும் பொழுது, ‘இன்று போய் நாளை வா” என்று எழுதி வைக்கச் சொல்லி தந்திரத்தைக் கையாண்டவர் விநாயகப் பெருமான். சதுர்த்தி விரதமிருந்து விநாயகரை வழிபட்டால் செல்வச் செழிப்பு மேலோங்கும் என்பது ஐதீகம்.

    மேலும் படிக்க... Sankashti Chaturthi 2022: சங்கடஹர சதுர்த்தி விரதம் இருந்தால் பித்ருதோஷம் உள்ளிட்ட பல தோஷங்கள் நீங்குமாம்!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Hindu Temple, Vinayagar Chathurthi | விநாயகர் சதுர்த்தி

    அடுத்த செய்தி