முகப்பு /செய்தி /ஆன்மிகம் / இன்று மாசி மாத தேய்பிறை அமாவாசை... விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்குமாம்...

இன்று மாசி மாத தேய்பிறை அமாவாசை... விரதம் இருந்தால் பித்ரு சாபம் நீங்குமாம்...

மஹாளய பட்ச அமாவாசை 2022

மஹாளய பட்ச அமாவாசை 2022

Masi Amavasai 2023 | மாதந்தோறும் வருகிற அமாவாசையில் தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்து முன்னோரை நினைத்து வணங்கினால் நாமும் நம் சந்ததியினரும் வளமுடன் வாழ்வோம் என்பது ஐதீகம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

குடும்பத்தில் தொடர்ந்து பிரச்னைகள் மட்டுமே வருகிறது. இதுபோன்ற பிரச்னைகள் உண்டாவதற்கு முன்னோர்களின் சாபம் கூட காரணமாக இருக்கலாம். அதாவது நமது குடும்பத்தில் மறைந்துபோன முன்னோர்களை நினைக்காமல் இருந்தாலும், அவர்களுக்கு செய்ய வேண்டிய பூஜைகளை செய்யாமல் இருந்தாலும் நமது குடும்பம் எப்போதும் நிம்மதி இன்றி பிரச்னைகளோடுதான் இருக்கும். இதனால் ஒரு சிலருக்கு குணப்படுத்த முடியாத வியாதிகளும் கூட வரலாம். எனவே இந்த மாசி அமாவாசை தினத்தன்று இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து நீங்கள் விடுபட முன்னோர்களுக்கு இந்த பரிகாரத்தை தவறாமல் செய்து வாருங்கள்.

இன்று பிப்ரவரி 20ஆம் தேதி தேய்பிறை மாசி அமாவாசை. அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும். அந்த வகையில் இந்த மாதத்தின் அமாவாசை நாளான இன்று முன்னோர்களுக்கு ஆராதனை, தர்ப்பணம் முதலான காரியங்கள் செய்தால் பித்ருக்களின் ஆசியைப் பெறலாம். மாசி மாத அமாவாசையானது சதய நட்சத்திரத்தன்று வருவதால் அது பித்ருக்களுக்கு மிகவும் திருப்தியை அளிக்கக்கூடிய காலமாகும்.

மேலும் நாகம் என்றாலே அது ராகுவை குறிக்கிறது. இந்த தினத்தன்று நாக தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்களும், தீராத தோல் வியாதிகள் உள்ளவர்களும் சிவபெருமானை வணங்கி, சிவன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி, சிவனைத் வணங்குவதன் மூலம் பித்ரு சாபத்தில் இருந்து விடுபட முடியும் என்பது ஐதீகம்.

மாசி அமாவாசை நாளில் முன்னோரை வணங்கினால், வாழ்வில் துன்பங்கள் இன்றி வாழலாம். இந்நாளில் தீர்த்த தலங்களுக்குச் சென்று எள், தண்ணீர் இறைத்து அவர்களின் தாகத்தை தீர்க்கலாம். இவ்வாறு செய்தால் அவர்கள் செய்த பாவங்கள் நீங்கி, அவர்களுக்கு முக்தி கிடைக்கும். நம் முன்னோர்கள் காகத்தின் வடிவில் வீட்டிற்கு வருவதாக ஐதீகம். அதனால் அன்று காகத்துக்கு உணவு அளிப்பது மிகவும் முக்கியமான நிகழ்வாகும்.

சோமவதி அமாவாசை திதி, நேரம், குறித்த தகவல்கள்

பஞ்சாங்கத்தின் படி,  அமாவாசை

ஆரம்பம் நேரம் பிப்ரவரி 19ஆம் தேதி - 04:18 PM

முடியும் நேரம்  பிப்ரவரி 20aஅம் தேதி - 12:35 PM

First published:

Tags: Worship forefathers