தமிழ் மாதங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவிதத்தில் சிறப்பு வாய்ந்தது. அதிலும் மிகவும் விசேஷமானதாக பார்க்கப்படுவது மாசி மாதம். இந்த மாதம் முழுவதும் கடலாடும் மாதம் என்றும், தீர்த்தமாடும் மாதம் என்றும் சொல்வார்கள். மாசி மாத நாள்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரதம் இருந்து, குல தெய்வம், இஷ்ட தெய்வங்களை வழிபட்டுவந்தால், எல்லாவிதமான தோஷங்களும், பாவங்களும் விலகி, குடும்பத்தில் ஒற்றுமை ஏற்படும் என்பது ஐதீகம்.
மகம் ஜெகம் ஆளும் என்பது பழமொழி. சிம்ம ராசியைச் சேர்ந்த இந்த நட்சத்திரத்தின் ராசி அதிபதி சூரியன் என்பதால், இந்த நட்சத்திரத்திற்கு ஆளுமை தன்மை அதிகம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். மோட்சகாரகன் எனப்படும் கேதுவின் மகம் நட்சத்திரத்தில், சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மாசி மகம் அன்று சிவபெருமானையும், ஸ்ரீவிஷ்ணு பகவானையும், பித்ருக்களையும் வணங்கினால் சகல நலன்களையும் பெற்று வளமான வாழ்க்கையை வாழ்வோம்...
மகம் நட்சத்திரத்தின் அதிதேவதை பித்ருக்கள். ஆகையால் அன்றைய தினம் பித்ருக்கள் வழிபாடு செய்ய முன்னோர்களின் ஆசி கிடைக்கும். கும்பகோணம், ராமேஸ்வரம் போன்ற இடங்களில் தர்ப்பணம், பிதுர் கடன் செய்வது நன்மை தரும். மேலும் சிவன், விஷ்ணு, முருகன் என முப்பெரும் தெய்வங்களுக்கு உகந்த இந்த நன்னாள், தோஷம் நீக்கும் புண்ணிய நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் புண்ணிய ஸ்தலங்களை தரிசிப்பதும், புண்ணிய நதிகள், தீர்த்தங்களில் நீராடுவதும் பாவங்களை போக்கும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பகோணம் கும்பேஸ்வரர் கோயில் தெப்பத்தில் மாசி மகத் திருவிழா, மகாமகம் விழாவாக மிகவும் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம்.
மாசி மகம் எப்போது?
மாசி மாதம் பௌர்ணமியும், மகம் திதியும் சேர்ந்து வரக்கூடிய அற்புத நாள் மாசி மகம் என கொண்டாடப்படுகிறது. பெளர்ணமியுடன் கூடிய மாசி மகம் திதி மார்ச் 6, 2023 திங்கட்கிழமை ( மாசி 22ம் தேதி) அன்று கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
மாசி மகம் வரும் நேரம்
1. மகம் நட்சத்திரம் ஆரம்ப நேரம் - மார்ச் 05, 2023 அன்று இரவு 09:30
2. மகம் நட்சத்திரம் முடியும் நேரம் - மார்ச் 07, 2023 அன்று 12:05
3. அதனால் மார்ச் 6ஆம் தேதியே மகம் கொண்டாடப்படுகிறது. காரணம் அன்று முழுவதுமே மகம் நட்சத்திரம் இருக்கிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Masi Magam