Home /News /spiritual /

மாசி மகம் பௌர்ணமி தினத்தின் சிறப்புக்கள்...

மாசி மகம் பௌர்ணமி தினத்தின் சிறப்புக்கள்...

சிவன்

சிவன்

மாசி மகத்தன்று விரதம் இருந்து நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால், இந்த உலகத்தையே ஆளும் வாய்ப்பும், ஆசீர்வாதமும் கிட்டும் என்பது நம்பிக்கை...

    மகம் நட்சத்திரம் எல்லா மாதத்திலும் வந்தாலும் மாசி மாதத்தில் வரும் மகம் நட்சத்திரம் மிகவும் மகத்துவம் வாய்ந்தது. மாசி மகம் பௌர்ணமி தினத்தின் சிறப்புக்கள் பற்றி இங்கு தெரிந்து கொள்ளலாம். மாசி மாதத்தில் வருகிற பெளர்ணமியன்று தான் மாசி மக திருநாளைக் கொண்டாடுகிறோம். மாசி மகத்தன்று விரதம் இருந்து நம்பிக்கையோடு வழிபட்டு வந்தால், இந்த உலகத்தையே ஆளும் வாய்ப்பும், ஆசீர்வாதமும் கிட்டும் என்பது நம்பிக்கை...

    பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு சகல செல்வங்களையும் கொண்டு வந்து சேர்க்கும். இந்த தினத்தில் விரதம் இருந்து முறையாக வழிபாடு செய்திட நினைத்த காரியம் நிறைவேறும். இதன் அடிப்படையில் ஒவ்வொரு தமிழ் மாத பௌர்ணமியிலும் குறிப்பிட்ட தெய்வத்திற்கு விரதம் இருந்து வழிபாடு செய்ய என்னென்ன பலன்கள் கிடைக்கலாம் என்பதை அறிந்து கடைப்பிடித்திட சிறப்பான பலன்களை பெறமுடியும்.

    மகம் நட்சத்திரத்திற்கு அதிபதி நவகிரகங்களில் நிழற்கிரகங்களில் ஒன்றான கேது பகவான் ஆவார். இவர் ஞானத்தையும், மோட்சத்தையும் அதிகம் அருள்பவர்.
    கேது பகவான், ஞானத்தை அளிப்பதுடன் மிகப் பெரும் செல்வத்தை அள்ளித் தரும் வல்லமை உள்ளவர். இப்படி பல புண்ணிய அம்சங்களை கொண்ட மாசி மாதத்தில் கேதுவின் நட்சத்திரமான மகம் நட்சத்திரத்தில் சந்திரன் வரும் தினம் தான் மாசி பௌர்ணமி. இப்படி பூரண சந்திரன் அமையும் நாளே மாசி மாத பவுர்ணமி.

    மேலும் படிக்க... பெளர்ணமி தினத்தின் சிறப்புகள் என்ன? 12 மாதத்திலும் வரும் பெளர்ணமியின் முக்கியத்துவம் என்ன?

    மேலும் மாசி மக பௌர்ணமி அன்று கோவில்களில் சிவன், விஷ்ணு, முருகன் ஆகிய மூவருக்கும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், யாகங்கள், உற்சவங்கள் நடைபெறும். அன்றைய தினத்தில் மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமி தினங்களில் விரதம் மேற்கொள்வதை போன்றே மாசி மாத பௌர்ணமி தினத்தன்றும் இருக்கும். இந்த விரதம் நமக்கு சிறப்பான பலன் தரும்.
    மாசி மாத பௌர்ணமி அன்று சத்யநாராயண பூஜை செய்வதும் மற்றும் மாலை நேரத்தில் சூர்ய அஸ்தமனத்திற்கு பின்னர் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வதும் அதிக நன்மைகள் தரும் என்பது நம்பிக்கை...

    பெளர்ணமி


    மாசி மாத பௌர்ணமி அன்று திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் சமயம் வண்டுகள் மொத்தமாக பறக்கும் காட்சியைப் பார்க்கும் வாய்ப்பு உங்களுக்கு ஏற்படுமானால் உங்களின் பல மனிதப்பிறவிகளின் கர்மங்கள் அந்த நொடி பொழுதே தொலைந்ததாக ஐதீகம். இப்பிறவிக்கு பிறகு இனி பிறவா நிலை உங்களுக்கு கிடைக்கும்.

    மேலும் படிக்க... ஒவ்வொரு பெளர்ணமி கிழமைக்கும் ஒரு சிறப்பு உண்டு ...

    மேலும் அனைத்து துறைகளிலும் ஈடுபட்டுள்ளவர்கள் மாசி பௌர்ணமி கிரிவல வழிபாட்டால் அதிகப் பலன்களை பெறுவார்கள். கணவனை பிரிந்து வாழ்பவர்கள், கணவரின் அன்பை பெற்று இணைபிரியாமல் வாழும் அமைப்பு உண்டாகும். அதிகளவு கடன் வாங்கி அதை திருப்பிப் செலுத்த முடியாமல் திணறுபவர்கள் மாசி பௌர்ணமி கிரிவலம் சென்று சிவனை வழிபடுவதன் மூலம் விரைவில் தீரும்.
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Chithra Pournami, Sivan

    அடுத்த செய்தி