முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மார்கழியில் இதையெல்லாம் செய்யக்கூடாது... ஏன் தெரியுமா?

மார்கழியில் இதையெல்லாம் செய்யக்கூடாது... ஏன் தெரியுமா?

Husband -wife

Husband -wife

மார்கழியில் திருமண சுப காரியம் நடத்தப்படாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்தல் போன்ற சுப காரியங்கள் செய்யலாம்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

மார்கழி மாதத்தில் சூரிய பகவான் தனுசு ராசியில் சஞ்சரிப்பதால் இதை தனுர் மாதம் என்றும் அழைப்பார்கள். தனுசு ராசிக்கு அதிபதி குரு பகவான். அதாவது, குரு பகவான் வீட்டில் சூரியன் சஞ்சரிக்கும் காலம் இது. நவகிரகங்களில் அரசன் ஆகிய சூரியன், குருகுலவாசம் செய்யும் நேரம் என்பதால் அந்நாளில் அரசர்கள் யாரும் போர்த் தொழிலில் ஈடுபட மாட்டார்கள். பொதுமக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து கடவுள் பக்தியில் ஈடுபட வேண்டிய காலமாக நம் முன்னோர்கள் மார்கழி மாதத்தை கொண்டிருந்தனர். 

மேலும் வைகுண்ட ஏகாதசி விழாவும் ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படும் மாதம் மார்கழி மாதம். ஆஞ்சநேயர் மார்கழி மாத மூல நட்சத்திரத்தில் அவதரித்தவர். இதகைய சிறப்புடைய இந்த மாதத்தில்தான் காற்றில் ஆக்சிஜன் நிறைந்திருக்கும். இதனால் இந்த மாதத்தில் அதிகாலை எழுந்து திருப்பாவை, திருவெம்பாவை பாடுவது அல்லது கேட்பது, பஜனை பாடுதல் புண்ணியமாகும் என்று நனது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதனால்தான் இன்றும் கிராமங்களில் பெண்கள் அதிகாலையிலேயே எழுந்து கோலம் போடுதல், குளிர்ந்த நீரில் குளித்தல், பெருமாளை வணங்குதல் போன்ற அனைத்தும் செய்து வருகின்றனர்.

செய்யக்கூடியவை

மார்கழியில் திருமண சுப காரியம் நடத்தப்படாவிட்டாலும், திருமணத்திற்கான வரன் பார்த்தல், ஜாதகம் பரிமாற்றம், கர்ப்பிணிப் பெண்களுக்கு சீமந்தம் செய்தல் போன்ற சுப காரியங்கள் செய்யலாம். மேலும் புதிய சொத்துக்கள் வாங்குதல் அதாவது நிலம், வீடு, மனை வாங்க முன் பணம் கொடுப்பதும் நல்ல விஷயம்.

செய்யக்கூடாதவை

மார்கழி மாதத்தில் விதை விதைத்தலும், திருமணம் செய்தலும் கூடாது. மார்கழி மாதம் விதை வளர்வதற்கான காலம். இந்த காலத்தில் விதை விதைத்தால் அது சரியாக வளர்வதற்கான சூழல் இருக்காது. இதனால் தான் திருமணமும் செய்யக் கூடாது என நமது  முன்னோர்கள் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க... மார்கழி மாதம் 2021 – விசேஷங்கள், விழாக்கள்

மேலும் அதிகாலைக்குப் பிறகு தூங்கக் கூடாது. சூரிய உதயத்திற்குப் பிறகு தூங்கக் கூடாது.  மார்கழி மாதத்தில் புதுமனை புகுவிழா,வாடகை வீடு மாறுதல், அலுவகம் மாறுதல், திருமணம் மற்றும் நிச்சயதார்த்தம், காது குத்துதல், புதிய வீடு பத்திர பதிவு முதலானவை செய்யக்கூடாது.

First published:

Tags: Hindu Temple, Margazhi