Home /News /spiritual /

ஆருத்ரா தரிசன திருவிழா: சிதம்பரத்தில் கோலாகமாக நடந்த தேரோட்டம்...

ஆருத்ரா தரிசன திருவிழா: சிதம்பரத்தில் கோலாகமாக நடந்த தேரோட்டம்...

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டமும், நாளை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டமும், நாளை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாளை தேரோட்டமும், நாளை ஆருத்ரா தரிசன விழாவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாக விலங்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன திருவிழா தேரோட்டம் பக்தர்கள்  வடம்பிடித்து இழுக்க வெகு விமர்சியாக துவங்கியுள்ளது. பூமியின் மையப்பகுதியாக கூறப்படும் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி திருமஞ்சன விழாவும் முக்கிய திருவிழாக்கள் ஆகும். ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆருத்ரா தரிசனமும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும் நடைபெருவது வழக்கம். இத்தகைய சிறப்பு மிக்க ஆருத்ரா தரிசன திருவிழாவானது கடந்த 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது.

இதைத்தொடர்ந்து தினமும் பஞ்சமூர்த்திகள் வீதியுலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வந்தது. இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக தேரோட்டத்திற்கு அனுமதி இல்லை எனவும், ஆருத்ரா தரிசன நேரத்தை தவிர மற்ற நேரங்களில் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் கூறியதால் பக்தர்கள்  மற்றும் சிவனடியார்கள் இடையே பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் நேற்று மாலை 6.30 மணி அளவில் பாஜக, இந்து முன்னணி, சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் நடராஜர் கோவில் கிழக்கு சன்னதி வாயிலில் அமர்ந்து தேரோட்டத்திற்கு அனுமதி வழங்க வேண்டி திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து அங்கு வந்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசன் தேரோட்டத்திற்கு அனுமதி அளித்தார். தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 2 மணி நேரம் போராட்டம் முடிவுக்கு வந்தது. அதனைத் தொடர்ந்துத ற்போது  தேரோட்டம் வெகு விமர்சியாக நடைபெற்று வருகிறது.

தேரோட்டத்தையொட்டி நடராஜர், சிவகாமசுந்தரி, விநாயகர், முருகன், சண்டிகேசுவரர் ஆகிய 5 சுவாமிகள்  அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் கிழக்குக் கோபுர வாயிலில் எழுந்தருள அங்கு திரளாக கூடியிருந்த பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

தொடர்ந்து தேர்கள் 4 மாட வீதிகளையும்  வலம் வர பக்தர்கள் நம்ச்சிவாய என கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்து தரிசனம் செய்து வருகின்றனர். தேரோட்டத்தை முன்னீட்டு பெண்கள் நான்கு மாட வீதிகளையும் மாகோளமிட்டு, நடனம் ஆடியபடி வந்து கொண்டிருகின்றனர். தேர் நிலைக்கு வந்த உடன் நடராஜ பெருமான் ஆயிரங்கால் மண்டபத்தில்  எழுந்தருள அர்ச்சணைகள் நடைபெறும்.

 மேலும் படிக்க... சூரியனும் தமிழ் மாதங்களும்!

தொடர்ந்து  நாளை காலை முதல் பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு  மதியம் 2 மணியளவில் ஆருத்ரா  தரிசனம் நடைபெறும். அப்போது நடராஜர், சிவகாமசுந்தரி உள்ளிட சுவாமிகள்  நடனம் ஆடியபடியே பக்தர்களுக்கு அருள் ஆசி வழங்குவார்கள். இவ்விழாவை முன்னிட்டு காவல்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

மேலும் படிக்க.. சிதம்பரம் நடராஜகோயிலின் ரகசியம் இதுதான்...

நகர்பகுதியில் போக்குவரத்து நெரிசலை தடுக்கும் வன்னம் போக்குவரத்து போலிசார் வழிதடங்களை மாற்றி அமைத்துள்ளனர் . ஆருத்ரா தரிசன விழவை முன்னிட்டு நாளை கடலூர் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சிதம்பரம் நடராஜர் கோவில் 4 வீதிகளை சுற்றி வரும் அனைத்து போக்குவரத்துகளும் சிதம்பரம் எஸ்பி கோயில் தெரு வழியாக போக்குவரத்து போலீசாரால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... ஆருத்ரா தரிசன விழா... சிதம்பரம் நடராஜர் கோயிலில் தேரோட்டம் நடத்த அனுமதி...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Chidambaram, Margazhi

அடுத்த செய்தி