ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மார்கழி திருவாதிரை திருவிழா.. திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

மார்கழி திருவாதிரை திருவிழா.. திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் தொடக்கம்..

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள இத்தலம், இரண்டாவது வழிபாட்டுத் தலம். மூலவர், திக்குறிச்சி மகாதேவர். நாற்சதுரமண்டபக் கருவறையில் அருள்கிறார்,

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kanniyakumari, India

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மஹா சிவாலய ஓட்டம் நடக்கும் 12 சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் இன்று தொடங்கியது. இதில் தமிழகம் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். 

கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க பனிரெண்டு சிவாலயங்களில் இரண்டாவது சிவாலயமான தாமிரபரணி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் திக்குறிச்சி மஹா தேவர் ஆலயத்தில் மார்கழி திருவாதிரை திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை 5 மணிக்கு நிர்மால்ய தரிசனம் நடைபெற்றது.

அதை தொடர்ந்து  மஹா கணபதிஹோமம், உஷபூஜை, தீபாரதனை, உஷசிவேலி, பந்தீரடி பூஜையை தொடர்ந்து திருகொடியை உப தந்திரி வேணு நம்பூதிரி பூஜைகளுக்கு பின் ஏற்றி வைத்தார். அதனை தொடர்ந்து அகண்டநாம ஜெபம் உட்பட  பல்வேறு சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாரதனை நடைபெற்றது. இந்த  பூஜைகளில் தமிழகம் கேரளாவை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்

First published:

Tags: Kanniyakumari