Home /News /spiritual /

இன்று மார்கழி பிரதோஷம்... சிவனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

இன்று மார்கழி பிரதோஷம்... சிவனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும்.

மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும்.

மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷத்திற்கு விரதம் இருந்து சிவபெருமானை வழிபாடு செய்தால் அனைத்து தடைகளும் விலகி வெற்றி கிடைக்கும்.

    மார்கழி மாதம் என்பது சைவ மற்றும் வைணவ மக்களுக்குரிய ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாதமாகும். மார்கழி மாதம் முழுவதும் இறைவனின் சிந்தனையிலும், வழிபாடுகளிலும் ஈடுபடுவதால் நாம் செய்த பாவங்கள் நீங்கப்பெற்று, நமக்கு வாழ்வில் பல மகிழ்ச்சியான நிகழ்வுகள் உண்டாகும். இந்த மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அதிலும் சிவன் கோவிலுக்கு சென்று சிவனை வழிப்பட்டால் பலவிதமான நன்மைகள் நம்மை வந்து சேரும் என்பது ஐதீகம்.

    சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்புடையது. அதுவும் பிரதோஷம் குரு பகவானுக்குரிய வியாழக்கிழமையன்று பிறப்பது இன்னும் விசேஷமானதாகும். ஆம் இன்று மார்கழி மாத பிறப்பும் பிரதோஷமும் வியாழகிழமையும் ஒன்றாக வந்துள்ளது.

    மேலும் படிக்க... Tirupati : திருப்பதியில் இனி திருபாவைதான் ஒலிக்கும்...

    இப்படி சிற்ப்பு மிக்க இந்த பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று,  நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானையும் சேர்த்து வணங்கிவர வேண்டும். பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை மூன்று முறை வளம் வந்து வணங்க வேண்டும்.

    மேலும் படிக்க... பிறந்தது மார்கழி மாதம்... திருப்பாவை, திருவெம்பாவை பாடல் -1

    இன்று சிவனை வணங்கினால் கிடைக்கும் பலன்கள்

    மார்கழி மாதத்தில் வியாழக்கிழமையில் வரும் பிரதோஷத்தின் போது குரு பகவானையும், சிவபார்வதியையும் வணங்குவதால் உங்களுக்க பொன்னாபரணங்களின் சேர்க்கை உண்டாகும். வறுமை நிலை நீங்கும். செல்வம் சேரும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். பிறருடனான பகை நீங்கும்.

    மேலும் படிக்க... திருப்பாவையை தினமும் பாடினால் திருமணம் நிச்சயம்!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Margazhi, Sivan

    அடுத்த செய்தி