பெளர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில், நல்ல அதிர்வலைகள் ஏற்படும். பௌர்ணமியில் விரதம் இருந்து வழிபாடு செய்தால் எண்ணற்ற பலன்களை பெறலாம். பௌர்ணமி தினத்தன்று அன்னை தேவி பராசக்தியை வழிபடுவதும், பூஜை செய்வது மிகவும் சிறப்பானதாகும். மேலும் பௌர்ணமி நாளில் வீட்டிலும், குலதெய்வ கோயிலிலும் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் மிகச் சிறந்த பலன்களைப் பெற முடியும்.
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். ஆனால் மார்கழி மாத்தில் வளர்பிறையில் வரும் பெளர்ணமி சிறப்பு வாய்ந்தது. இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன. அந்த வகையில் நாளை வரும் பெளர்ணமி வெள்ளிக்கிழமையில் வருகிறது. அப்படி வெளிக்கிழமையில் வரும் பௌர்ணமி நன்னால் சுக்ரனுக்கு உகந்த தினமாக பார்க்கப்படுவதால் களத்திர தோஷம் இருப்பவர்கள், திருமணத்தடை உள்ளவர்கள், சுக்கிர தசை நடப்பவர்கள், ரிஷபம், துலாம் ராசிக்காரர்கள் மற்றும் பரணி, பூரம், பூராடம் நட்சத்திரகாரர்கள், 6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் துர்க்கை அம்மனை வணங்குவது நல்லது.
அப்படி வணங்கும் முன் துர்க்கைக்கு வெள்ளை நிற வஸ்திரம் சாற்றி, கதம்ப மாலை அணிவித்து, மல்லிகை பூவால் அர்ச்சனை செய்து, பழங்களை நிவேதனம் வைத்து வழிபட வேண்டும். அதனால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். தடைபட்ட வீடு கட்டும் பணிகள் சிறப்பாக நடைபெறும். வாழ்வில் சகல வளங்களும் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
பௌர்ணமியில் பொதுவாக, அம்மன் வழிபாடு மேற்கொள்ளப்படுகிறது. அம்மன் கோவில்களில் விளக்குப் பூஜை, அன்னதானம், சிறப்புப் பூஜைகள் செய்யப்படுகின்றன.பௌர்ணமி அன்று பெண்கள் விரத மேற்கொள்வது குடும்பத்திற்கு நல்லது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Margazhi