Home /News /spiritual /

இன்று மார்கழி மாத பிரதோஷ விரதம்... சிவ வழிபாடு நன்மை தரும்...

இன்று மார்கழி மாத பிரதோஷ விரதம்... சிவ வழிபாடு நன்மை தரும்...

பிரதோஷம் என்பது சைவ சமயத்தில் சிவபெருமானை வழிபட உகந்ததாகக் கருதப்படும் காலமாகும். இக்காலத்தில் நிகழும் வழிபாடு பிரதோஷ வழிபாடு எனவும், பிரதோஷ தினத்தில் கடைபிடிக்கப்படும் விரதம் பிரதோஷ விரதம் எனவும் அழைக்கப்படுகின்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
    பிரதோஷம் என்பது சிவபெருமானை வழிபட உகந்த காலமாக கருதப்படுகிறது. மாதந்தோறும் இருமுறை, அதாவது வளர் பிறை மற்றும் தேய் பிறை திரயோதசி (13-ம் நாள்) நாட்கள் பிரதோஷ தினங்களாகும். இந்நாட்களில் மாலை 4.30 மணி முதல் 6.00 மணி வரையிலான நேரம் பிரதோஷ காலமாகும்.

    அதிலும் மார்கழி மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள் மிகவும் சிறப்பானது. அப்பிரதோஷ தினங்களின் சிறப்பு என்ன என்பதையும், அப்பிரதோஷ வழிபட்டால் நமக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்பதையும் இங்கு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

    சூரியன் தனுசு ராசியில் பிரவேசிக்கும் மாதமே மார்கழி மாதம் ஆகும். ஜோதிட சாஸ்திரப்படி தனுசு ராசியின் அதிபதியாக குரு பகவான் இருக்கிறார். எனவே இம்மாதத்தில் வரும் பிரதோஷ தினங்கள்ம மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். அதுவும் பிரதோஷம் அம்மாபளூகுரிய வெள்ளி கிழமையன்று பிறப்பது இன்னும் விசேஷமானதாகும்.

    சிவனை வழிபடும் முறை

    பிரதோஷ தினத்தன்று மாலையில் 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக சிவன் கோயிலுக்கு சென்று, பிரதோஷ தினத்தில் செய்யப்படும் சோம சூக்த வலம் வந்து நந்தி பகவானையும், சிவனையும், சண்டிகேஸ்வரரையும் வணங்க வேண்டும். பின்பு கோயிலில் உள்ள நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை வணங்கி, பிறகு சிவனுக்கான பிரதோஷ வழிபாடுகள் செய்து கோயிலை 3 முறை வளம் வர வேண்டும்.

    இது எல்லாவற்றையும் விட தும்பைப் பூ மாலை அணிவித்து பிரதோஷ தினத்தன்று சிவனை வணங்கினால் சகல தோஷங்களும், அதாவது ஏழு ஜென்மத்திலும்  இருக்கக்கூடிய தோஷங்கள், பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்று நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது.

    மேலும் படிக்க... சிவராத்திரியில் சிவனை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Sivan

    அடுத்த செய்தி