ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Murugan Temple | மார்கழி முதல் நாளே கிருத்திகை... திருத்தணி முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகள்...

Murugan Temple | மார்கழி முதல் நாளே கிருத்திகை... திருத்தணி முருகன் கோயிலில் நடந்த சிறப்பு பூஜைகள்...

முருகன்

முருகன்

மார்கழி முதல் நாளே கிருத்திகை வந்தது. திருத்தணி முருகன் கோயிலில் அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஒவ்வொரு மாதத்திலும், முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் மேற்கொள்வதால், முருகனின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

கார்த்திகை பெண்கள் 6 பேர் கந்தனைப் பாலூட்டி வளர்த்த காரணத்தால் அவர்கள் 6 பேரும் கந்தனுக்கு தாய் என்ற சிறப்பினைப் பெற்றனர். அப்போது சிவபெருமான் கார்த்திகை பெண்களே, நீங்கள் எம் குமாரனை பாலூட்டி வளர்த்த காரணத்தால் இன்று முதல் உங்கள் பெயரிலேயே முருகன் கார்த்திகேயன் என்ற பெயர் பெறுவான். அது மட்டுமல்ல உங்களின் நாளாகிய கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதமிருந்து முருகனை வழிபடுவோர் இன்னல்கள் அனைத்தும் நீங்கி வாழ்வில் சகல செல்வங்களும் பெற்று வாழ்வார்கள் என்று கூறி ஆசிர்வதித்தார். அவ்வாறே இன்றும் முருகபக்தர்கள் கார்த்திகை விரதம் இருந்து முருகனின் பேரருளைப் பெற்று வருகிறார்கள்.

மேலும் படிக்க... Tirupati : திருப்பதியில் இனி திருபாவைதான் ஒலிக்கும்...

இதில் முருகனின் ஐந்தாம் வீடாக சிறந்து விலங்கும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதத்தில் சிறப்பாக திருவிழா கோலம் பூண்டு இருக்கும்... இந்நிலையில் மார்கழி முதல் நாள் கிருத்திகை சேர்ந்து வந்ததால் அதிகாலை வீடுகளில் பெண்கள் விளக்கு ஏற்றி வைத்து திருக்கோயில்களுக்கு சென்று முருகனை வழிபட்டனர்.

மேலும் படிக்க... மார்கழி மாத பிரதோஷம்...சிவனை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன?

திருத்தணி முருகன் கோயிலில் மூலவருக்கு அதிகாலை சிறப்பு அபிஷேக பூஜைகள் செய்யப்பட்டு தங்க வைர நகைகளால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானோர் மலைக் கோயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர். இதேபோல் முருகர் மாலை அணிந்த பக்தர்கள் பஜனைகள் செய்தும், முருகப்பெருமான் திருவருள் பாடல்கள் பாடிக்கொண்டும் மலைக் கோயில் மாட வீதிகளில் வலம் வந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

மேலும் படிக்க... கிருத்திகை என்றால் என்ன? கார்த்திகை விரதத்தின் ...

First published:

Tags: Margazhi, Murugan