மார்கழி மாதம் என்பது சிவன் மற்றும் விஷ்ணு வழிபாட்டிற்குரிய மாதமாகும். இந்த மாதத்தில் வரும் அனைத்து தினங்கள், திதிகள் ஆன்மீக முக்கியத்துவம் கொண்டவையாகும். இந்த மாதத்தில் வரும் பௌர்ணமி மற்றும் அமாவாசை தினங்களும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அந்த வகையில் இன்று மார்கழி மாத அமாவாசை. இந்த தினத்தின் சிறப்புகளை தெரிந்து கொள்ளலாம்.
மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை தினம் முக்கியமான திதி தினமாகும். இம்மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்கள் வழிபாட்டை மேற்கொள்வது மிகவும் நல்லது. மார்கழி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு, குறிப்பாக எதிர்பாரா விதத்தில் மரணித்த முன்னோர்கள் அல்லது உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் போன்றவற்றை தருவதாலும் அல்லது அவர்களை வழிபடுவதாலும் அவர்களுக்கு பெருமாளின் வைகுண்ட வாசம் பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம்.
வழிபடும் முறை
மார்கழி அமாவாசை தினத்தன்று காலையில் குளித்து முடித்து, ஆற்றங்கரை அல்லது குளக்கரையில் மறைந்த உங்கள் முன்னோர்கள், உறவினர்களுக்கு திதி தர்ப்பணம் தரலாம். இப்படி தர்ப்பணம் தர இயலாதவர்கள் அன்றைய தினம் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபட்டு எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு தரலாம்.
Also see... மண்டல பூஜை: ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்க அங்கி ஊர்வலம்
மேலும் யாசகர்களுக்கு அன்னதானம் செய்யலாம். இத்தினத்தில் ராமேஸ்வரம், காவேரி,கங்கை போன்ற புனித கடல், ஆறுகளில் தலைமுழுகி முன்னோர்களை வழிபடலாம். இதனால் நாமும் நம் சந்ததியும் சிறப்பாக எல்லா வளமும் பெற்று வாழ்வோம் என்பது நம்பிக்கை. மேலும் இந்த நாளைதான் ஆஞ்சநேயர் ஜெயந்தி அதாவது அனுமன் பிறந்தநாள் என கொண்டாடிகிறோம். மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில்தான் அனுமன் ஜெயந்தி தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Margazhi