ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

இதுதான் ஆன்மீக வரலாறு.. மார்கழி மாதத்தில் தினமும் கேளுங்கள் திருப்பாவை..!

இதுதான் ஆன்மீக வரலாறு.. மார்கழி மாதத்தில் தினமும் கேளுங்கள் திருப்பாவை..!

ஆண்டாள்

ஆண்டாள்

Margazhi 2022 | திருப்பாவை பன்னிரண்டு வைணவ ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாள் பாடிய நூல் ஆகும்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளாய் என மார்கழியின் பெருமையை கூறியிருக்கிறார் ஆண்டாள். திருப்பாவையில் உள்ள ‘திரு’ என்றால் மரியாதைக்குரிய என்று பொருள். பாவை என்றால் பெண். மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய பெண் தெய்வமான ஆண்டாள் பாடிய பாமாலையே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது.

திருப்பாவையில் உள்ள ‘திரு’ என்றால் மரியாதைக்குரிய என்று பொருள். பாவை என்றால் பெண். மரியாதைக்கும், வணக்கத்துக்கும் உரிய பெண் தெய்வமான ஆண்டாள் பாடிய பாமாலையே ‘திருப்பாவை’ என்று அழைக்கப்படுகிறது. பாவை ஒருவர் பாடியதாலும், பெண்கள் இருக்கும் நோன்பைப் பற்றிய பாடல் என்பதாலும், இது திருப்பாவை என்று பெயர் பெற்றது. இது 30 பாடல்களால் ஆனது.

வைணவப் பக்தி நூல்களின் தொகுப்பான நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் 473 தொடக்கம் 503 வரையுள்ள பாடல்கள் திருப்பாவைப் பாடல்கள் ஆகும். மேலும், தமிழ் நாட்டில் மார்கழி மாதத்தில் கன்னிப் பெண்கள் பாவை நோன்பு நோற்றனர். இதன் முதல் பாடல் விடியும் முன்பே எழும் கன்னியர் பிற பெண்களையும் துயில் எழுப்பிக் கொண்டு ஆற்றில் நீராடி இறைவனைத் துதித்து வழிபடுவர். இதனைப் பின்னணியாகக் கொண்டு எழுந்ததே இந்த நூல். இதனால் இப்போதும் கூட பாவை நோன்புக் காலத்தில் இப் பாடல்கள் பாடப்பட்டு வருகின்றன.

இதன் இரண்டாம் பாடல், நெய் உண்ணமாட்டோம், பால் அருந்த மாட்டோம் என எவ்வித உணவு வகைகளையும் உட் கொள்ளாதிருத்தலையும், காலையிலே நீராடுவதையும், கண்ணுக்கு மையிடுதல், தலையைச் சீவி முடித்து மலர்களைச் சூட்டிக்கொள்ளுதல் முதலிய அழகூட்டும் வேலைகளைச் செய்யாதிருத்தலையும், செய்யத் தகாதனவற்றைச் செய்யாது தவிர்த்தலையும், பிச்சை முதலியன இட்டு நற்செயல்களில் ஈடுபடுவதையும், இறைவனைப் பாடித் துதித்தலையும் பாவை நோன்பு காலத்தில் செய்ய வேண்டியனவாகக் கூறி அந்த நோன்பு நோக்கும் விதத்தை விளக்குகிறது.

மூன்றாம் பாடல் அதனால் உண்டாகும் பயன்களையும் எடுத்துக் கூறுகிறது. நாடு முழுதும் மாதம் மும்மாரி பெய்யும், வயல்களில் நெற் பயிர் ஓங்கி வளரும். அவற்றிடையே கயல் மீன்கள் துள்ளும், பசுக்கள் நிறையப் பால் கொடுக்கும், எங்கும் நீங்காத செல்வம் நிறையும் என்பது அப் பயன்களாகும். திருப்பாவை பாடல்கள் அனைத்தும் இறைவனின் பெருமைகளைக் கூறிக் கன்னியரைத் துயில் எழுப்பும் பாங்கில் எழுதப்பட்டுள்ளன.

தாய்லாந்தில் திருப்பாவை, திருவெம்பாவை மன்னர் முடிசூட்டலில் பாடப்படுகிறது. மார்கழி மாதத்தில் அனைத்து பெருமாள் கோயில்களிலும் சுப்ரபாதத்துக்கு பதில் திருப்பாவை பாடப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும். இப்படியாக மார்கழி மாதத்தில் பெருமாளின் புகழை சிறப்பித்து பாடுவதால் தான் மார்கழி மாதத்தில் அன்று முதல் இன்று வரையில் திருப்பாவை பாடப் பட்டு வருகிறது.

அதிலும் திருமணம் ஆகாத பெண்கள் மார்கழியில் திருப்பாவை பாடுவது என்பது மிகவும் விசேஷம். அது அவர்களுக்கு நல்ல கணவனை பெற்றுத் தரும்.

மார்கழி மாதத்தில் திருப்பாவை பாட வேண்டிய காலம் :

மார்கழி மாதம் அதிகாலை 4.30 மணிக்குள்ளாக எழுந்து நீராடி, கோவிலுக்கு சென்றோ அல்லது வீட்டில் இருந்தபடியோ திருப்பாவை பாடலை மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும். திருப்பாவை பாடல்களை முழுமையாக அல்லாமல், மார்கழி மாதம் முழுவதற்கும் வருமாறு ஒரு நாளைக்கு ஒரு பாடலாக, அந்த ஒரு பாடலை மூன்று முறை பாடவேண்டும்.

Also see... கடந்தது கார்த்திகை.. பிறந்தது மார்கழி... அதிகாலை முதல் தொடங்கிய பக்தி பரவசம்!

முதல் நாள் என்றால் அன்றைய தினம், ‘மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்...’ எனத் தொடங்கும் பாடலை மட்டும் மூன்று முறை பாராயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு படித்து வரும் போது, மார்கழியில் 29 நாட்களே உண்டு என்பதால், கடைசி நாளில் மட்டும் இரண்டு பாடல்களையும் சேர்த்து மூன்று முறை பாட வேண்டும். இத்துடன் தினமும் வாரணமாயிரம் பகுதியில் இருந்து, ‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து, மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத..’ உள்ளிட்ட பிடித்தமான பாடல்களையும் துதிப்பாடல்களாக சேர்த்து பாட வேண்டும்.

' isDesktop="true" id="856555" youtubeid="0bejnBoXBEo" category="spiritual">

இந்த பாவை நோன்பு நாட்களில் நெய், பால் சேர்த்த உணவு வகைகளை தவிர்ப்பது நல்லது. மற்ற எளிய வகை உணவுகளைச் சாப்பிடலாம். ஆண்டாள், பெருமாள் படம் வைத்து உதிரிப்பூ தூவி காலையும், மாலையும் வழிபட வேண்டும். இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த கணவனைத் தர அருள் செய்வாள்

First published:

Tags: Aandal, Margazhi, Thiruppavai