ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

பிறந்தது மார்கழி மாதம்... திருப்பாவை, திருவெம்பாவை பாடல் -1

பிறந்தது மார்கழி மாதம்... திருப்பாவை, திருவெம்பாவை பாடல் -1

Margazhi 2021: மார்கழி மாதம் பிறந்தது. வைணவக் கோவில்களில் இன்று முதல் திருப்பாவை பாடல்கள் பாடப்படும். ஆண்டாள் தாயார் இந்த மார்கழி மாதத்தில்தான் விரதம் இருந்து பெருமாளை அடைந்தார்.

Margazhi 2021: மார்கழி மாதம் பிறந்தது. வைணவக் கோவில்களில் இன்று முதல் திருப்பாவை பாடல்கள் பாடப்படும். ஆண்டாள் தாயார் இந்த மார்கழி மாதத்தில்தான் விரதம் இருந்து பெருமாளை அடைந்தார்.

Margazhi 2021: மார்கழி மாதம் பிறந்தது. வைணவக் கோவில்களில் இன்று முதல் திருப்பாவை பாடல்கள் பாடப்படும். ஆண்டாள் தாயார் இந்த மார்கழி மாதத்தில்தான் விரதம் இருந்து பெருமாளை அடைந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

    மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணர் மார்கழி மாதத்தை சிறப்பித்து கூறி உள்ளார். தமிழ் மாதங்களில் தனுர் மாதம் என்றழைக்கப்படுவது மார்கழி . மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாய் என மார்கழியின் பெருமையை கூறியிருக்கிறார் ஆண்டாள். போற்றியாம் மார்கழி நீர் ஆடேலோர் எம்பாவாய் என்கிறார் திருவெம்பாவையில் மாணிக்க வாசகர். இது தேவர்களின் மாதம் என்றும் கூறப்படுவது உண்டு.

    திருப்பாவை - பாடல் 1

    மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

    நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!

    சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்

    கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

    ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்

    கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்

    நாராயணனே நமக்கே பறை தருவான்

    பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்

    பொருள்: அழகானஅணிகலன்களை அணிந்த கன்னி பெண்களே சிறப்புமிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே மார்கழியில் முழுநிலா ஒளிவீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் செல்வோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்த கோபன், அழகிய கண்களையுடைய யசோதா பிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தை கொண்டவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும் என்று புகழ்ந்து பாடியுள்ளார்.

    மேலும் படிக்க... மார்கழியில் இதையெல்லாம் செய்யக்கூடாது... ஏன் தெரியுமா?

    திருவெம்பாவை - பாடல் 1

    ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்

    சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்

    மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்

    மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய்

    வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து

    போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்

    ஏதேனும் ஆகான் கிடந்தாள் என்னே என்னே

    ஈதே எந்தோழி பரிலோர் எம்பாவாய்

    பொருள்: வாள் போன்ற நீண்ட கண்களையுடைய தோழியே, முதலும் முடிவும் இல்லாத ஒளி வெள்ளமாய் பிரகாசிக்கும் நம் சிவனை குறித்து நாங்கள் பாடுவது உன் காதில் கேட்கவில்லையா? செவிடாகி விட்டாயோ? அந்த மகாதேவனின் சிலம்பம் அணிந்த பாதங்களைச் சரணடைவது குறித்து நாங்கள் பாடியது கேட்டு, வீதியில் சென்ற ஒரு பெண் அழுதாள். பின்னர் தரையில் விழுந்து மூர்ச்சையானாள்.

    மேலும் படிக்க... மார்கழி மாதம் 2021 – விசேஷங்கள், விழாக்கள்

    ஆனால், நீ உறங்குகிறாயே பெண்ணே! நீயும் சிவனைப் பாட எழுந்து வருவாயாக என்று சிவனை புகழ்ந்து பாட அழைக்கிறார் மாணிக்கவாசகர்.

    Published by:Vaijayanthi S
    First published:

    Tags: Aandal, Margazhi