வழக்கு , விவகாரங்களில் வெற்றியடையும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் எதிர்பார்த்த சில தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் கவனமாக இருப்பது நல்லது. ஒரு சில காரியங்களில் அவசரமாக முடிவு எடுப்பதை தவிர்ப்பது நன்மை தரும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர் மூலம் உதவியும் கிடைக்கும். வீடு மனை வாகனம் ஆகியவற்றில் இருந்து வந்த இழுபறி நீங்கும். வழக்கு விவகாரங்களில் வெற்றி காண்பீர்கள். வெளிநாடு பயணம் செல்ல நேரிடலாம்.
குடும்பத்தினரின் ஆரோக்கிய குறைவு ஆகியவற்றால் செலவு அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் வாக்குவாதம் ஏற்படும். கவனமாக பேசுவதன் மூலம் நெருக்கம் அதிகரிக்கும். விருந்தினர் வருகைசில்லறை சண்டைகள் அக்கம் பக்கத்தினருடன் உண்டாகலாம். கவனமாக இருப்பது நல்லது.
தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். முன்னேற்றம் காணப்படும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரிடும். தொழில் விரிவாக்கத்திற்கான பண உதவி கிடைக்கும். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும்.
உத்தியோகம் தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். அலுவலகத்தில் உள்ள சக ஊழியர்கள், மேல் அதிகாரிகளிடம் வீண் பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
பெண்களுக்கு அடுத்தவர் ஆச்சரியப்படும் வகையில் சாமர்த்தியமாக காரியங்களை செய்து வெற்றி பெறுவார்கள். புதிய நட்பு மூலம் மகிழ்ச்சி கிடைக்கும். தாயார் வழியில் அனுகூலம் கிடைக்கும்
மாணவர்களுக்கு படிப்பில் முன்னேற்றம் காணப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.
கலைத்துறையினருக்கு இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாகசெயல்படுவது நல்லது. எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும்.
அரசியல் துறையினருக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். நட்பு வட்டாரத்தில் குதூகலம் ஏற்படும்.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
இந்த மாதம் எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம்.
அஸ்தம்:
இந்த மாதம் குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படியான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள்.
சித்திரை 1, 2, பாதங்கள்:
இந்த மாதம் உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள்.
பரிகாரம்: புதன்கிழமைதோறூம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வர எல்லா நன்மைகளும் உண்டாகும்.