ஆச்சரியமளிக்கும் பல அதிசயங்களை கொண்ட தமிழக கோயில்கள்!

நெல்லையப்பர் கோவில்

தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது.

  • Share this:
    இந்தியாவில் தாஜ்மகாலை மட்டும் தான் அதிசயமாகப் பார்க்கின்றனர். ஆனால் உண்மையில் அதைத் தவிர பல அதிசயங்கள் நனது தமிழக கோயிகளில் இருக்கிறது.

    1. நெல்லையப்பர் கோவிலில் கல் தூணை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம் தான்.

    2. திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமாக இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் நம் முன்னோர்கள். அதுவும் உலக அதிசயம் தான். அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.

    சிவன்


    3.இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். எனில் எவ்வளவு துல்லியமாக செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்வளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள்.

    4. மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில், தஞ்சை பெரிய கோவில், இராமேஸ்வரம் இராமநாதஸ்வாமி கோயில் ஆகியவற்றின் கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்கள் பல.

    சிவன்


    5. ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் படிக்க... எலுமிச்சையின் ஆன்மீக மகத்துவம்!

    6.யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழங்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.

    7. தஞ்சை பெரிய கோவிலும், திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆயிரம்கால் மண்டபமும் இந்த அதிசியங்களில் அடங்கும்

    இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது.

    இந்த வித்தையை இன்று யாராலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற்கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்கி உள்ளனர் நம் முன்னோர்கள். இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாது. உலகில் கிரேக்க, எகிப்து போன்ற பழம்கால நாகரீகங்களுக்கு முன்பே. ஸ்கேன் கருவி இல்லாமல் வயிற்றில் உள்ள குழந்தையை படம் பிடித்ததில் இருந்து. தொலைநோக்கி இல்லாது உலகம் உருண்டை என்பது முதல் ஓசோன் படலம் வரை. முதன் முதலில் உலகிற்கு சொன்னது நமது முன்னோர்கள் தான். நமது முன்னோர்களின் அறிவு உலக அதிசயம் தானே. இதை போல் இன்னொன்றை இனி உருவாக்க முடியாது என்று இருப்பவையே உலக அதிசயங்கள்.

    மேலும் படிக்க... தீராத கஷ்டத்தையும் தீர்த்து வைக்கும் ஆடி கிருத்திகை விரதம்!

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Vaijayanthi S
    First published: