Home /News /spiritual /

மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்!

மாங்காடு ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவில்!

மாங்காடு காமாட்சி அம்மன்

மாங்காடு காமாட்சி அம்மன்

அன்னை பார்வதி, சிவபெருமானுடன் மீண்டும் இணைவதற்காக தவமிருந்த தலம். கயிலை மலையில் இருந்த போது, பார்வதி சிவபெருமானின் கண்ணைப் பொத்த, உலகமே இருண்டது. கோபமடைந்த சிவன், பார்வதியை சபித்து, தவம் செய்து மீண்டு வருமாறு கூறினார். அன்னை பார்வதி மாங்காட்டில் வந்து நெருப்பில் தவமிருந்தாள். பார்வதி தேவியார் இந்த இடத்தை விட்டு சென்றாலும், நெருப்பு மட்டும் அணையவில்லை. ஆதி சங்கரர் இங்கு வந்து அர்த்தமேரு சக்கரத்தை நிறுவினார். இதன் மூலம் மாங்காடு குளிர்ந்தது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 3 minute read
 • Last Updated :
  மாங்காடு ஸ்ரீ காமாட்சியம்மனின் மகிமை நிகரற்றது. மாங்காட்டில் காமாட்சி அம்மன் எழுந்தருளியதன் பின்னணியில் உள்ள புராண வரலாற்றை அறிந்து கொள்ளலாம் வாங்க... காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி, மதுரை மீனாட்சி என்று அகிலமெல்லாம் போற்றிப் புகழ்வது போன்றே மாங்காடு காமாட்சியம்மன் கோயிலும் பிரசித்தி பெற்றதாகும்.
   இத்தலத்தைச் சுற்றிலும் வடவத்தீஸ்வரன் கோயில், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான மூர்க்க நாயனார் அவதரித்த திருவேற்காடும், கீர்த்தனைகள் பல பாடி புகழ் பெற்ற சுந்தரரேசுவரின் கோயில் உள்ள கோவூரும், சேக்கிழார் அவதரித்த குன்றத்தூரும் வேறு பல தலங்களும் மாங்காட்டைச் சுற்றி அமைந்துள்ளன.

  ஆனந்தம், ஆறுதல், அமைதி இம்மூன்றையும் ஒருங்கே தரவல்ல தெய்வீகத் திருத்தலம்தான் மாங்காடு. மாமரங்கள் நிறைந்த மாமரக்காடாக விளங்கியமையால் இத்தலம் மாங்காடு என்னும் காரணப் பெயர் பெற்றது.

  இந்த ஆம்ராரண்யத்தில், ஒற்றை மாமரத்தடியில், ஸ்ரீ காமாட்சி அம்மன் தவம் புரிந்து, பின்னர் காஞ்சியிலே ஈசனை மணம் புரிந்து கொண்டதாக ஐதீகம். மாங்காடு தலத்திற்கு ஒரேயரு முறை வந்து விட்டால் போதும், அதன் பின்னர் நம்மையறியாமல் நம் மனம் மாங்காட்டிற்கு நம்மை செலுத்தும்.பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அனுபவப்பூர்வமான உண்மை.

  இத்திருக்கோயிலில் அர்த்த மேரு பிரதிட்டை செய்யப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேரு, ஸ்ரீ சக்கர எந்திரம் சந்தனம், அகில், பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, கோரோசனம், சிலாஜித், ஜடா மஞ்சீ, கச்சோலம் போன்ற எட்டு வகையான வாசனைப் பொருள்களால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அர்த்தமேருவிலேயே அன்னை வாசம் செய்கின்றாள்.

  மேலும் படிக்க... நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

  தல வரலாறு

  இத்தலத்தில் தான் பார்க்கவ முனிவரும், மார்க்கண்டேய முனிவரும் கடுந்தவம் புரிந்து பேறு பெற்றனர். ஒருசமயம் திருக்கயிலையில் பரமேஸ்வரனும், பார்வதியும் கண்ணாமூச்சி விளையாட ஆவலுற்றனர். அச்சமயத்தில் இறைவனை சூரிய, சந்திரரின் திருநயனங்கள் என்று கூறுகிறார்களே, அவற்றை மூடினால் என்னவாகும் என்றெண்ணிய உமாதேவி இறைவன் திருநயனங்களை தம் திருக்கரங்களால் மூடினார்.

  கண்களை பொத்திய மாத்திரத்தில் உலகமே இருள் சூழ்ந்தது. உயிர்கள் அனைத்தும் சுவாசிக்க முடியாமல் திணறின. அது கண்ட இறைவன் வெகுண்டெழுந்து, உமாதேவியாரை நோக்கி “பூவுலகில் அவதரித்து ஏகாம்பரம் என்றழைக்கப்படும் ஒற்றை மரத்தடியின் கீழ் கடுந்தவம் புரிந்து எம்மை வந்து அடைவாயாக என்று உத்தரவிட்டார்.  இறைவனது உத்தரவினை ஏற்றுக் கொண்ட அன்னை உமாதேவி இம்மாங்காடுத் தலம் வந்தடைந்து ஐந்தணல் வளர்த்து, பஞ்சாட்சரனை நினைந்து கடுந்தவம் புரிந்தாள்; அதன் பின்னர் கச்சியம்பதி சென்றடைந்து கம்பநதிக் கரையில் சிவ பூசை புரிந்து, தவத்தை மேம்படசெய்து முடித்து மீண்டும் இறைவனை வந்தடைந்தாள் என்பது வரலாறு.

  மேலும் படிக்க... திருமணத் தடை நீங்கவும், கடன் தொல்லை தீரவும் வணங்க வேண்டிய அற்புத ஆலயம் எது தெரியுமா?

  கோவிலின் சிறப்புகள்

  1.குழந்தை பேறு, வேலை வாய்ப்பு போன்றவற்றை தரும் அற்புதமான தலமாகவும் மாங்காடு தலம் திகழ்கிறது. திங்கள், புதன், வியாழன், சனிக்கிழமைகளில் பகல் 11 மணிக்கு அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படுகிறது. வெள்ளி மற்றும் பெவுர்ணமியில் ஊஞ்சல் சேவை நடக்கிறது.

  2. நவராத்திரி 9 நாட்களும் அம்மன் வெவ்வேறு விதமாக காட்சித் தருவாள். இத்தலத்தில் எல்லா மாதமும் திருவிழாக்கள் நடந்த வண்ணம் உள்ளது.

  3. பெவுர்ணமி தோறும் 9 கலசங்களில் 9 சக்திகளை ஆவாசனம் செய்து நடத்தப்படும் நவகலச ஹோமமும், புஷ்பாஞ்சலியும் மிகவும் பிரசித்தம்.

  4. தை மாதம் முதல் ஆடி மாதம் வரை வெள்ளிக் கிழமைகளில் 108 கலச அபிஷேகம் நடைபெறும். ஆகஸ்டு மாதம் வரும் ஆடிப்பூரம் தினத்தன்று 1008 கலச அபிஷேகம் நடைபெறும். இத்தலத்தில் ஆதியில் அம்மன் புற்றில் இருந்ததாக கருதப்படுகிறது.

  5. இங்குள்ள நவகன்னிகை சன்னதி சிறப்பு வாய்ந்தது. அம்மன் தவம் இருந்த போது இந்த நவ கன்னிகைகள்தான் காவல் புரிந்தனர்.இவர்களை வழிபட்டால் உடல் உபாதைகள் நீங்கி சுகபோகம் உண்டாகும். கோவில் வட திசையில் திருக்குளம் உள்ளது.

  6. பிரச்சினைகள் தீர, 18,27,108 என்ற எண்ணிக்கையில் எலுமிச்ச மாலை சாற்றி வழிபடலாம்.

  7. புரட்டாசி பெவுர்ணமியன்று நடக்கும் நிறைமணி தரிசனத்தில் கலந்து கொண்டால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.

  கோவில் அமைவிடம்:

  கோயம்பேட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், தாம்பரத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் மாங்காடு அமைந்துள்ளது.

  தரிசன நேரம்: காலை 06.00AM – 01.00PM மாலை 04.00PM – 09.30PM

  முகவரி: அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு-602101, காஞ்சிபுரம் மாவட்டம்.

  மேலும் படிக்க... திருச்சி உறையூர் வெக்காளி அம்மன் திருக்கோவிலின் சிறப்புகள்!
  Published by:Vaijayanthi S
  First published:

  Tags: Amman Thayee, Kancheepuram

  அடுத்த செய்தி