ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

மண்டல பூஜை: சபரிமலை மேல் சாந்தி பங்கேற்கவில்லை - காரணம் இதுதான்

மண்டல பூஜை: சபரிமலை மேல் சாந்தி பங்கேற்கவில்லை - காரணம் இதுதான்

சபரிமலை மேல்சாந்தி

சபரிமலை மேல்சாந்தி

Sabarimalai |  சபரிமலையில் மண்டல பூஜை தந்திரி கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Kerala, India

சபரிமலை மேல் சாந்தியின் மாமா இறந்ததையடுத்து, சபரிமலை  சம்பிரதாயப்படி, சன்னிதானம் பூஜை வழிபாடுகளில் இருந்து 10 நாட்கள் அவர் விலகியுள்ளார். மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரியின் தாயாரின் சகோதரரும், திருச்சூர் பெரிங்கொடுகரை கிழக்கு செருமுகமனை சி.கே.ஜி.நம்பூதிரி மரணமடைந்தார்.

இதனால் சம்பிரதாயப்படி பூஜைகளில் பங்கேற்க முடியாது என்பதால் சபரிமலை மேல்சாந்தி கே ஜெயராமன் நம்பூதிரி 10 நாட்களுக்கு சன்னிதானத்தில் உள்ள சபரி விருந்தினர் மாளிகைக்கு மாற்றப்பட்டார்.

எனவே இன்று முதல் தினசரி பூஜைகள் உட்பட வரும் 27 ஆம் தேதி நடைபெற உள்ள மண்டல பூஜைக்கு மேல்சாதிக்கு  பதிலாக தந்திரி கண்டரரு ராஜீவரு பூஜை முறைகளை ஏற்று நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also see... பொங்கல் பரிசு தொகுப்பு அறிவிப்பு

மேலும் 10 நாட்கள் நிறைவடைந்த பின் மேல் சாந்தி மீண்டும் சபரிமலை சன்னிதானத்தில் தன்னுடைய சேவையினை தொடங்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Mandala, Sabarimalai, Sabarimalai Ayyappan temple