சபரிமலையில் மண்டல பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பல்வேறு மொழிகளில் பக்தர்களுக்கு அறிவுரை மற்றும் பின் பற்ற வேண்டிய அறிவிப்புகள் இடை விடாமல் ஒலி பெருக்கி மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மண்டல பூஜைக்காக பல்வேறு துறைகளின் ஆலோசனை கூட்டம் சன்னிதானத்தில் நடைபெற்றது. சன்னிதான அதிகாரி விஷ்ணுராஜ் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், பக்தர்களுக்கு கூடுதல் வசதிகள் செய்து தருவது என முடிவு செய்யப்பட்டது. மண்டல பூஜையையொட்டி பல்வேறு துறைகளின் சார்பில் முன் ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன.
அதன்படி, ''இங்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்க பல்வேறு மொழிகளில் அறிவிப்பு ஒலி பெருக்கி மூலம் இன்று முதல் வழங்கப்படும். பல்வேறு இடங்களில் பக்தர்கள் பின்பற்றும் வழி முறைக்கள் பக்தர்கள் புரிந்துகொள்ளும் வகையில் அறிவிப்பு வெவ்வேறு மொழிகளில் வழங்கப்படும்.
சரணபாதையில் மரக்கூல்ட்டம் முதல் சரம்குத்தி வரை எட்டுத் பகுதிகள் உள்ளன . 24 கியூ வளாகங்கள் மற்றும் பரந்த நடைபந்தல் அமைத்துள்ளது. இங்கு பக்தர்கள் ஓய்வெடுக்கும் வசதிகள் மற்றும் கழிப்பறைகள் வசதிகள் அமைத்து உள்ளன.
தற்போது பெரிய நடைபந்தல் பகுதியில் பெண்கள், மாற்றுதிறனாளிகள் மற்றும் சிறுவர்கள் , குழந்தைகளுக்கு தனி வரிசை அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர, அவசர காலங்களில் பயன்படுத்த ஒரு வரிசை காலியாக கோவில் நிர்வாகம் வைத்து உள்ளது. வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி தவறாமல் வழங்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
உணவகங்கள் மற்றும் பிற இடங்களில் உணவு பாதுகாப்பு துறையின் சோதனையை கடுமையாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை (டிசம்பர் 20) 24 பக்தர்கள் உயிரிழந்துள்ளனர். பெரும்பாலானோரின் மரணத்திற்கு மாரடைப்பு தான் காரணம் என தெரியவந்துள்ளது.
இதுபோன்ற விபத்துகளைத் தவிர்க்க, பக்தர்கள் தங்களின் வழக்கமான மருந்துகளை எடுத்துச் சென்று சரியான நேரத்தில் பயன்படுத்த வேண்டும் எனவும் இதை நினைவு படுத்த பல்வேறு இடங்களில் அறிவிப்புகளை ஒலிபெருக்கி மூலம் வெளியிடவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
பக்தர்கள் தேவைப்படும் நேரங்களில் சுகாதாரத் துறை, கேரள காவல்துறை, தீயணைப்பு மீட்புப் படை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் பிற தன்னார்வலர்களிடம் உதவி பெறலாம். தற்போது நடைபாதைகள் போன்றவற்றில் பக்தர்களுக்கு இடையூறாக இருந்த மரக்கிளைகள் அனைத்தும் வெட்டப்பட்டுள்ளன.
Also see... ஜனவரி மாதம் 2023: முக்கியமான பண்டிகைகள், ஆன்மீக விசேஷங்கள்குறித்த தகவல்கள்!
பக்தர்கள் பாதுகாப்பாக படுத்து தங்கவும் தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஆலோசனை கூட்டதில் தெரிவித்துள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.