Home /News /spiritual /

சபரிமலையில் மண்டல கால பூஜை இன்று நிறைவு - மாலை நடை அடைப்பு

சபரிமலையில் மண்டல கால பூஜை இன்று நிறைவு - மாலை நடை அடைப்பு

சபரிமலை

சபரிமலை

சபரிமலையில் மண்டல பூஜை முடிந்து இன்று மாலை நடை சாத்தப்படும்

    சபரிமலையில் மண்டல கால பூஜை இன்று நிறைவடையும் நிலையில் மண்டல காலத்தில் கடந்த ஆண்டை விட பலமடங்கு வருமானம் அதிகரித்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு சபரிமலையில் கடும் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப் பட்டிருந்தது. இதனால் 8 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாகக் கிடைத்தது. ஆனால் இந்த ஆண்டு நவம்பர் 15 முதல் டிசம்பர் 25 வரை 78 கோடியே 92 லட்ச ரூபாயாக வருவாய் உயர்ந்துள்ளது. அரவண விற்பனை மூலம் 31 கோடி ரூபாயும், அப்பம் விற்பனை மூலம் மூன்றரை கோடி ரூபாயும் கிடைத்துள்ளது. மேலும் காணிக்கையாக 29 கோடி ரூபாயை பக்தர்கள் வழங்கியுள்ளனர்.

    Also Read: குடும்பத்துடன் திருப்பதி போறீங்களா?.. இந்த செய்தியை மறக்காமல் படிங்க

    இதேபோல நடப்பாண்டில் பக்தர்கள் வருகையும் அதிகரித்துள்ளது. இதுவரை 10,35,000 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 43,000 வரை தரிசனம் செய்துள்ளனர். மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மண்டல பூஜை முடிந்து இன்று மாலை நடை சாத்தப்படும் நிலையில், மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் கோயில் நடை திறக்கப்படுகிறது.

     
    Published by:Ramprasath H
    First published:

    Tags: Ayyappan temple in Sabarimala, Kerala, Sabarimala devotees

    அடுத்த செய்தி