Home /News /spiritual /

மானாமதுரை: வெண்பட்டு உடுத்தி வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

மானாமதுரை: வெண்பட்டு உடுத்தி வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார்

Manamadurai Alagar vaigai attril  Iranguthal | மானாமதுரை சித்திரை திருவிழா முன்னிட்டு வைகை ஆற்றில் வெண் பட்டு உடுத்தி வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கினார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துக் கொண்டு தரிசனம் செய்தனர்...

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி–சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவில் சிகர நிகழ்ச்சியாக இன்று வீர அழகர் வெண் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மதுரைக்கு அடுத்தபடியாக மானாமதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது. அத்தகைய சிறப்பு வாய்ந்த மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் கோவில் சித்திரை திருவிழா கடந்த ஏழாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருவிழாவையொட்டி ஒவ்வொரு நாளும் ஆனந்தவல்லி அம்மன்–சோமநாதர் சிம்மம், அன்னம், ரி‌ஷபம் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வீர அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று நடந்தது.

இன்று அதிகாலையில் தியாக வினோத பெருமாள் கோவிலில் இருந்து புறப்பட்ட வீர அழகர் மானாமதுரை மரக்கடைவீதி, அக்ரஹாரம், அய்யப்பன் கோவில், பைபாஸ் ரோடு, ரெயில்வே கேட் வழியாக காலை 8 மணிக்கு ஆனந்தவல்லி அம்மன் கோவிலுக்கு வந்தார். அவருக்கு சிவாச்சார்யார்கள் வெண் கொற்ற குடை பிடித்து வரவேற்பு அளித்தனர்.

பின்னர் காலை 8.15 மணிக்கு வீர அழகர் வெண் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினர். அப்போது விரதமிருந்து வீர அழகர் வேடமிட்ட பக்தர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீர்த்தவாரி நடத்தினர். தொடர்ந்துஅப்போது பக்தர்கள் அருவாள் மேல் ஏரி கோவிந்தா, கோவிந்தா என்று கோ‌ஷமிட்டு சாமி தரிசனம் செய்தனர் வைகை ஆற்றில் இறங்கும் வீர அழகரை தரிசிக்க சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மனைவியுடன் பங்கேற்றார்.

மேலும் படிக்க... மதுரையே அதிர வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்...புகைப்படங்கள்...

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி மனைவியுடன் வந்து மானாமதுரை வைகை ஆற்றில் வீரஅழகர் இறங்கும் நிகழ்ச்சியை பார்வையிட்டு தரிசனம் செய்தார் பின்னர் ஆனந்தவல்லி அம்மன் கோவிலில் தரிசனம் செய்து விட்டு கிளம்பி சென்றார்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Manamadurai

அடுத்த செய்தி