ஹோம் /நியூஸ் /ஆன்மிகம் /

Sabarimala | சபரிமலையில் மகரவிளக்கு நிறைவு... இன்றுடன் நடை அடைப்பு...

Sabarimala | சபரிமலையில் மகரவிளக்கு நிறைவு... இன்றுடன் நடை அடைப்பு...

மண்டல மகர விளக்கு பூஜை விளக்கு நிறைவு பெற்ற பிறகு சபரிமலை நடை இன்று அடைக்கப்பட்டது. மன்னர் குடும்பத்தினர் கோவிலின் சாவியை மேல்சாந்தி இடம் ஒப்படைத்தனர். சுவாமியின் ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரண பெட்டி பந்தளத்திற்கு  கொண்டு  செல்லப்பட்டது.

மண்டல மகர விளக்கு பூஜை விளக்கு நிறைவு பெற்ற பிறகு சபரிமலை நடை இன்று அடைக்கப்பட்டது. மன்னர் குடும்பத்தினர் கோவிலின் சாவியை மேல்சாந்தி இடம் ஒப்படைத்தனர். சுவாமியின் ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரண பெட்டி பந்தளத்திற்கு  கொண்டு  செல்லப்பட்டது.

மண்டல மகர விளக்கு பூஜை விளக்கு நிறைவு பெற்ற பிறகு சபரிமலை நடை இன்று அடைக்கப்பட்டது. மன்னர் குடும்பத்தினர் கோவிலின் சாவியை மேல்சாந்தி இடம் ஒப்படைத்தனர். சுவாமியின் ஆபரணங்கள் அடங்கிய திரு ஆபரண பெட்டி பந்தளத்திற்கு  கொண்டு  செல்லப்பட்டது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

கேரள மாநிலத்தில் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரி மலையில் அமைந்துள்ள ஐயப்ப சுவாமி கோவில் உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும் . ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை இங்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்வார்கள். ஒவ்வொரு மாதத்தின் ஐந்து நாட்கள் கோவில் நடை திறந்து இருக்கும் என்ற நிலையிலும் ஐயப்பன் கோவிலுக்கு நவம்பர் முதல் ஜனவரி வரை உள்ள காலங்களே உச்சகட்ட சீசன் காலங்களாக விளங்குகிறது.

கேரள மாநில பக்தர்கள் மட்டுமன்றி தமிழகம், புதுவை, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பக்தர்கள் கடும் விரதமிருந்து மாலை அணிந்து இருமுடி கட்டி கோவிலுக்கு வந்து செல்கின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக பெண் பக்தர்களை அனுமதிப்பது ஊரடங்கு போன்ற பல்வேறு காரணங்களால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சொற்ப அளவில் இருந்தது.

இந்தநிலையில் இந்த ஆண்டு சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வருவதற்கு பல்வேறு தரவுகளை அறிவித்து கேரள அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. இரண்டு தடுப்பூசிகள் செலுத்தி கொண்ட நபர்கள் அல்லது கொரோனா தொற்று இல்லை என்ற சான்று வைத்திருப்பவர்கள் கோவிலுக்கு வரலாம் என அறிவிக்கப்பட்டது. குறைந்த அளவு பக்தர்கள் என்ற நிலையை மாற்றி நாள்தோறும் 75,000 பக்தர்கள் வரை தரிசனம் செய்ய அறிவிக்கப்பட்டது.

அதனால்  நிறுத்தி வைக்கப்பட்ட அபிஷேகம் துவங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டிருந்த ஒரு வழி பாதையும் பக்தர்களின் பாதயாத்திரையாக திறந்துவிடப்பட்டது.

மண்டல பூஜைகளுக்காக கடந்த நவம்பர் 16ஆம் தேதி மாலை 5 மணிக்கு சபரிமலை ஐயப்பன் ஸ்ரீ கோவில் நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் புதிய மேல்சாந்தியாக பரமேஸ்வரன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மேலும் படிக்க... கார்த்திகை மாத பிறப்பு... விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்...

மண்டல பூஜை காலங்களில் தினமும் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு பதினோரு மணி வரை பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். டிசம்பர் இருபத்தி ஆறாம் தேதி மண்டல பூஜைகள் நடத்தப்பட்டு கோவில் நடை அடைக்கப்பட்டது. நான்கு நாட்களுக்குப் பிறகுடி சம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைகளுக்காக கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது.

மேலும் படிக்க... பொன்னம்பலம் வந்திடுவோம்... ஐயப்பன் பக்தி பாடல்கள்...

அதன் பிறகு நாள்தோறும் நெய் அபிஷேகம் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தது.  பக்தர்கள் வருகைக்காக எருமேலியில் இருந்து வரக்கூடிய ஒரு வழி பாதை திறந்துவிடப்பட்டு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஒரு வழிப்பாதையில் பக்தர்கள் வர அனுமதி கட்டுப்பாடுகளுடன் அளிக்கப்பட்டது. வழிநெடுகிலும் 14 இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இரவு நேரங்களில் ஒருவழிப் பாதையில் பக்தர்கள் நடந்து வர அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி திரு ஆபரண பெட்டி பந்தளம் அரண்மனையில் இருந்து புறப்பட்ட நிலையில் வழிநெடுகிலும் திருஆபரண பெட்டி சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.

மகரஜோதி தரிசனம் 14ஆம் தேதி மாலை 6:30 மணி அளவில் திரு ஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது மேல்சாந்தி பரமேஸ்வரன் மற்றும் தேவசம்போர்டு அதிகாரிகள் பந்தளம் அரண்மனை வாசிகளை வரவேற்று அழைத்து வந்தனர். கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட ஆபரண பெட்டியில் இருந்து தங்க அங்கி வாள் கேடயம் போன்ற ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அதே சமயத்தில் கோவிலின் எதிரே உள்ள காந்தமலை பொன்னம்பல மேட்டில் சுவாமி ஜோதி சொரூபனாக 3 முறை காட்சியளித்தார்.

சரண கோசம் முழங்க இலட்சக்கணக்காண பக்தர்கள் ஜோதி சொரூபனை கண்டனர்  . இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான மகரஜோதி  தரிசன காலம் முடிவடைந்த நிலையில் இன்று காலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு பந்தள மன்னர் குடும்பத்தினர் மட்டும் ஐயப்பனை வழிபட்டனர். தங்க அங்கி வாள் கேடயம் போன்றவை ஆபரண பெட்டியில் வைக்கப்பட்டு அரண்மனை குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து கோவிலின் சாவியை  பெற்றுக் கொண்ட மேல் சாந்தி பரமேஸ்வரன் நடையை அடைத்து பூட்டி பதினெட்டாம் படி வழியாக கீழ. இறங்கினார் .

மேலும் படிக்க...மாலை போட்ட ஐயப்ப பக்தர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்... 

திரு ஆபரண பெட்டி பாதுகாப்புடன் அரண்மனைக்கு கொண்டு செல்லப்பட்டது . முன்னதாக கடந்த 17ந் தேதி  முதல் நேற்று மாலை படி பூஜைகள் நடத்தப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் பக்தர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருந்த நிலையில் இந்த ஆண்டு கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து சென்றுள்ளனர். 300 கோடி ரூபாய்க்கு மேல் தேவசம் போர்டுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இனி மாசி மாத பிறப்பிற்கு சுவாமி ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க... சபரிமலை ஐயப்பன் கோவிலின் சிறப்புகளும் அதன் 18 படிகளும்...

Published by:Vaijayanthi S
First published:

Tags: Magaravilakku, Sabarimala, Sabarimala Ayyappan