சபரிமலையில் மகரவிளக்கு இன்றுடன் நிறைவு... நாளை நடை அடைப்பு...
சபரிமலையில் மகரவிளக்கு இன்றுடன் நிறைவு... நாளை நடை அடைப்பு...
சபரிமலை
Sabarimala Makaravilakku 2022 : சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்றுடன் மகரவிளக்கு தரிசனம் நிறைவடைகிறது. இதையடுத்து நாளை 20ம் தேதி காலை கோயில் நடை சாத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த 14ஆம் தேதி பிரசித்தி பெற்ற மகரவிளக்கு பூஜை, மகரஜோதி தரிசனமும் நடைபெற்றது. லட்சகணக்கான பக்தர்கள் மகர ஜோதியை பார்த்து தரிசனம் செய்தனர். மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் பக்தர்கள் தற்போது வரை குவிந்து வருகின்றனர். நேற்று முன்தினம் இரவு வரை திருவாபரண அலங்காரத்துடன் பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்தனர்.
நேற்று வரை பக்தர்கள் நெய்யபிஷேம் செய்து கொள்ளலாம். இன்று இரவு வரை மட்டுமே தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நாளை காலை 6.30 மணியளவில் கோயில் நடை சாத்தப்படும் என்றும் அன்றுடன் மண்டல மகரவிளக்கு காலமும் நிறைவடையும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீண்டும் மாசி மாத பூஜைகளுக்காக பிப்ரவரி மாதம் கோயில் நடை திறக்கப்படும் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் அறிவுறுத்தியுள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.