உயர்ந்த ஆடைகளை அணிய விரும்பும் மகர ராசி அன்பர்களே!
சமுதாயத்தில் நன் மதிப்போடு வாழவே நீங்கள் விரும்புவீர்கள். மனைவி- யிடம் நல்அன்பை செலுத்துவீர்கள்.அவர்களின் நல்ல கருத்துக்களை மனமுவந்து ஏற்றுக்கொள்வீர்கள். பிள்ளைகள் இடத்திலும் அன்பு செலுத்துவீர்கள். குரு பகவான் இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் இருந்தார்.அவர் பல்வேறு இடையூறுகளை கொடுத்து இருப்பார். பொருளாதார நஷ்டம் ஏற்பட்டு இருக்கும்.சிலரது வாழ்க்கையில் துக்ககரமான சம்பவமும் நிகழ்ந்து இருக்கலாம். தற்போது குரு பகவான் உங்கள் ராசிக்கு அடியெடுத்து வைத்துள்ளார்.
இதுவும் அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அவர் 12-ம் இடத்தில் இருந்தது போல கெடு பலன்களை செய்யமாட்டார். குரு1-ம் இடத்தில் இருக்கும் போது கலகம் விரோதம் வரும் என்றும் மந்தநிலை ஏற்படும் என்றும் பொதுவாக கூறப்படுவது உண்டு. ஆனாலும் கவலைபட வேண்டாம். குருபகவான் சாதகமற்ற நிலையில் இருந்தாலும் அவரது அனைத்துப் பார்வைகளும் சிறப்பாக உள்ளது. மேலும் அதிகநாட்கள் அவர் இங்கு இருக்க மாட்டார். அவர் 2021ஏப்ரல் 4-ந் தேதி முதல் 2021 செப்டம்பர் 14-ந் தேதி வரை அதிசாரம் பெற்று கும்ப ராசியில் இருக்கிறார். அவர்2021 நவம்பர் 13-ந் தேதி அன்று முழுபெயர்ச்சி அடைந்து 2-ம் இடமான கும்ப ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம். அவரால் உங்களது ஆற்றல் மேம்படும்.
இதுவரை இருந்த மந்த நிலை மாறும். துணிச்சல் பிறக்கும்.பணவரவு கூடும்.தேவையான பொருட்களை வாங்கலாம். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. அவர்கள் சரண் அடையும் நிலை ஏற்படும். அதன்பிறகு 2022 ஏப்ரல் 14-ந் தேதி அன்று பெயர்ச்சி அடைந்து 3-ம் இடமான மீன ராசிக்கு மாறுகிறார். இது சிறப்பான இடம் இல்லை. அவரால் முயற்சியில் தடை ஏற்படும். அதற்காக கவலைகொள்ள தேவை இல்லை காரணம். குருவின் அனைத்து பார்வைகளும் சிறப்பாக அமைந்து உள்ளதால் உற்சாகம் பிறக்கும்.
ALSO READ | மிதுனராசி: குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
தேவைகள் பூர்த்தி ஆகும். தம்பதியினர் இடையே ஒற்றுமை மேம்படும். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். தடைபட்டு வந்த திருமணம் நடக்க வாய்ப்பு உண்டு. மற்றகிரகங்களின் நிலை சனிபகவான் தற்போது 12-ம் இடமான தனுசுராசியில் இருக்கிறார். அவரால் பொருளாதார இழப்பு வரலாம். வெளியூர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடையூறு அவ்வப்போது வரலாம். சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7-ம் இடத்துபார்வை மிதுனத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம்.இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும்.
முயற்சிகளில் வெற்றியை தருவார். உங்கள் ஆற்றல் மேபடும். தனுசு ராசியில் இருக்கும் சனிபகவான் 2020 டிசம்பர் 26-ந் தேதிஅன்று12-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஏழரை சனியின் உச்சக்கட்டம். பொதுவாக சனி உங்கள் ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டு காலம் உடல்நலம் பாதிக்கப்படலாம், உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளியூர் வாசம் இருக்கும். அதைக்கண்டு அஞ்ச வேண்டாம். காரணம் அவரது 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது.
ALSO READ | மேஷ ராசி: குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
இந்த பார்வையால் அவர் காரிய அனுகூலத்தையும் பொருளாதார வளத்தையும் குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தொழில் விருத்தியையும் தருவார். இபபோது ராகு 5-ம் இடமான ரிஷபத்தில் இருக்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவர் பல்வேறு இன்னல்களையும், இடையூறுகளையும் தரலாம். மனைவி,மக்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை உருவாக்கலாம். அவர் குடும்பத்தில் சிற்சில பிரச்சினையை உருவாக்கலாம்.
மனதில் ஏனோ இனம் புரியாத வேதனை ஆட்டிப்படைக்கலாம். ஆனால் அவரது பின்னோக்கிய 7-ம் இடத்துப் பார்வை உங்கள் ராசிக்கு 11-ம் இடமான விருச்சிகத்தில் விழுகிறது. இது சிறப்பான அம்சமாகும். கேது இப்போது 11-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து நல்ல வளத்தை -யும், நல்ல ஆரோக்கியத்தையும் கொடுப்பார். குடும்பத்தில் மேன்மையை கொடுப்பார். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்கும் ஆற்றலையும் அவர் கொடுப்பார்.
இனி விரிவான பலனை காணலாம்.
கேதுவால் பொருளாதார வளம் சிறப்படையும். தேவைகள் பூர்த்தி- யாகும்.வீடு,மனை வாங்க யோகம் கூடி வரும். வண்டி, வாகனங்கள் வாங்கலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக் கும்.எடுத்த காரியம்அனுகூலம்ஆகும்.சனிபகவான் சாதகமற்ற இருப்பதால் பெரியோர்களின் ஆலோசனையை அவ்வப்போது கேட்பது நல்லது. குடும்பத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் நிலவும். குருவின் பார்வையால் கணவன்-மனைவி இடையேஒற்றுமை அதிகரிக்கும்.பிரிந்திருந்த குடும்பம் ஒன்றுசேரும்.
ALSO READ | கடக ராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
உறவினர்கள் உங்களை நாடிவருவர். சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.அதுவும் நல்ல சிறப்பான வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிட்டும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை குருவால் ஏற்பட்ட மனக்கவலை ஏற்படும். சுறுசுறுப்பு அற்ற நிலை, இருப்பிட மாற்றம், வீண்அலைச்சல் முதலியன மறையும்.எந்த பிரச்சினையையும் முறியடித்து வெற்றிக்கு வழிகாணலாம்.
வசதிகள் பெருகும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் இருக்கும் அக்கம் பக்கத்தினர் அனுசரணையுடன் இருப்பர்.தேவையான பொருட்களை வாங்கலாம். பொல்லாப்பு மறையும். ஆன்மிக ஆன்றோர்களின் ஆசியும், அருளும் கிடைக்கும். உத்தியோகம் போலீஸ், ராணுவத்தில் பணி புரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். குரு மனவேதனையும், நிலையற்ற தன்மைûயும் கொடுப்பார். பொருளாதார சரிவை ஏற்படுத்துவார். வீண்- விரோதத்தை உருவாக்குவார். சிலர் இடமாற்றம் காண்பீர்கள்.
இருப்பினும் குருவின் பார்வையால் கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சகஊழியர்கள் உதவிகரமாக இருப்பர்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை பதவி உயர்வு காண்பர். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் வேலை கிடைக்கப் பெறலாம். வியாபாரம் அதிக வருமானத்தைக் காணலாம்.
புதிய வியாபாரம் ஓரளவு லாபத்தைத் தரும். கூட்டாளிகள் இடையே ஒற்றுமை ஏற்படும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும். கேதுவால் பகைவர்களின் சதியை முறியடிக்கும் வல்லமையை பெற்று இருக்கிறீர்கள்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை பகைவர்களை வெற்றி கொள்வீர் -கள்.எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும்.
ALSO READ | சிம்மராசி : குருப்பெயர்ச்சி பலன்கள் 2020
வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். அரசின் வகையில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். பகைவர்களின் சதி உங்களிடம் எடுபடாது. கணினி, அச்சுத் துறை, பத்திரிகை, கோவில் மற்றும் புண்ணிய காரியங்களுக்கான தொழில் ஆகியவை சிறந்து விளங்கும். தங்கம், வெள்ளி, வைரம் நகைகள் வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபத்தை பெறுவர். கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். புகழ், பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை இடர்பாடுகள் மறையும். சமுகநல சேவகர்கள் எதிர்பார்த்த புகழ் பாராட்டு கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
அரசியல்வாதிகள் வளர்ச்சி காண்பர். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். மாணவர்கள் அயராது உழைக்க வேண்டியதிருக்கும் சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டிய திருக்கும்.ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை நல்ல முன்னேற்றம் காணலாம். ஆசிரியரின் ஆலோசனை நல்ல வழியை காட்டும். விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறலாம். விவசாயம் சிறப்படையும். கோழி,ஆடு வளர்ப்பில் நல்ல வருமானத்தை பெறுவர். பக்கத்து நிலகாரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.
ALSO READ | கன்னி ராசி: குருப் பெயர்ச்சி பலன்கள் 2020
ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர் 14-ந் தேதி வரை பாசி பயறு நெல், கொள்ளு, துவரை, கொண்டைக்கடலை சோளம், மஞ்சள், தக்காளி, பழவகைகள் நல்ல வருவாயை கொடுக்கும். கால்நடை செல்வம் பெருகும். புதிய சொத்து வாங்கலாம். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். பெண்காவலர்கள் சிறப்பான பலனை பெறுவர். புதிய பதவி தேடி வரும். குருவின் பார்வையால் குடும்பத்தில் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் கைகூடும். ஏப்ரல் 4-ந் தேதி முதல் செப்டம்பர்14-ந் தேதிவரைவேலைக்கு செல்லும் பெண்களுக்கு கோரிக்கைகள் நிறைவேறும்.
உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தவர்கள் உங்கள் மேன்மையை அறிந்து சரணடையும் நிலை வரலாம். உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகளால் அவதிப்பட்டவர்கள் பூரண குணம் அடைவர். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றவர்கள் வீடு திரும்புவர்.
பரிகாரம்: சனிபகவானுக்கு நல்லெண்\ணை தீபம் ஏற்றுங்கள். சனிக்கிழமை பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஞானிகளுக்கு காணிக்கை செலுத்துங்கள். பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள்.