சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம்...!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம்...!

சபரிமலை - கோப்புப்படம்

மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில், 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 • News18
 • Last Updated :
 • Share this:
  சபரிமலை ஐயப்பன் கோயிலில் இன்று மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

  பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில், மகர விளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக இன்று மாலை 5.30 மணிக்கு, மகரஜோதி தரிசனம் நடைபெறுகிறது.

  பொன்னம்பல மேட்டில் ஜோதி வடிவில் சுவாமி ஐயப்பன் காட்சி அளிப்பார் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். இதனை காண வழக்கமாக சபரிமலையில் பக்தர்கள் லட்சக்கணக்கில் திரள்வார்கள்.

  Also read... "இயற்கை விவசாயத்தை தமிழகம் முழுவதும் இளைஞர்கள் கொண்டு செல்ல வேண்டும்" - சத்குரு வேண்டுகோள்

  ஆனால், கொரோனா முன்னெச்சரிக்கையாக தற்போது, நாள் ஒன்றிற்கு ஐயாயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என, திருவிதாங்கூர் தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

  மகர ஜோதிக்கு முன்னர் நடைபெறும் பேட்டை துள்ளல் மற்றும் திருவாபரண ஊர்வலத்தில், 50 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
  Published by:Vinothini Aandisamy
  First published: