Home /News /spiritual /

MahaShivRatri2022 : மஹாசிவராத்திரி : விஞ்ஞானமா? மத நம்பிக்கையா?

MahaShivRatri2022 : மஹாசிவராத்திரி : விஞ்ஞானமா? மத நம்பிக்கையா?

மஹாசிவராத்திரி

மஹாசிவராத்திரி

MahaShivRatri2022 : சாயங்காலம் ஆனா குடிச்சுட்டு தூங்குற நபராக இருந்தால் உங்களுக்கு இது பொருந்தாது. உங்களுக்குள்ள இருக்குறதையும் நீங்க கொன்னுடுவீங்க. அது உங்களை பொறுத்தது. ஆனா நீங்க ஒரு முழுமையான மனிதனாக இருக்கணும்னா எல்லாமே முழு வீச்சில் நடக்கணும். இந்த உடலில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனிச்சு அதனை பாத்துக்கணும்.

மேலும் படிக்கவும் ...
    மஹாசிவராத்திரி என்பது நவீன காலத்திற்கு தேவையில்லாத பழங்கால மத சடங்கா? இதில் மஹாசிவராத்திரியின் முக்கியத்துவம் குறித்து விளக்குகிறார் சத்குரு. ஏன் மஹாசிவராத்திரி அன்று இரவு விழித்திருக்க வேண்டும், இதனால் உடலில் என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் விளக்குகிறார்.

    கேள்வி : ஈஷா யோகாவில் மஹாசிவராத்திரி கொண்டாடுறீங்க? என்ன மாதிரி இளைஞர்களுக்கு மஹாசிவராத்திரி காலம் கடந்து போன சடங்காக தெரிகின்றது. அதனால இளைஞர்களுக்கு மஹாசிவராத்திரி எப்படி பொருத்தமான ஒன்றாக இருக்கும்னு நான் தெரிஞ்சுக்க விரும்புறேன்.

    சத்குரு பதில் : உங்களுக்கு எந்த மாதிரியான பண்டிகை பிடிக்கும். காதலர் தினம் மட்டும் தானா? அதுவும் மதம் சம்பந்தபட்டது தான். அவரு பெயர் புனிதர் வேலண்டைன். மஹாசிவராத்திரி என்றால் என்ன? நீங்க இத புரிஞ்சுக்கணும். இந்தியாவுல வருடத்திற்கு 365 விழாக்கள் இருக்கு. ஆமா. இன்றைக்கு பொருளாதார காரணங்களாலயும், நம்ம வேலை , நாம செயல் படுற விதங்களாலயும், நாம வடிவமைச்சுருக்குற முறைகளாலயும் நிறைய பண்டிகைகள் அழிஞ்சு போச்சு. இன்னும் 30,35 வழக்கத்துல இருக்கு. கொஞ்சம் அதிகமாக இருக்கலாம். 50,60 பண்டிகைகள் பல தரப்பட்ட மக்களால் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த எண்ணிக்கையும் இப்ப குறைஞ்சுட்டு வருது.

    இப்ப ஒரு 5,6 தான் பெரிய அளவுல கொண்டாடப்படுது. இதுல சிலது சமூகம் சார்ந்தது. சிலது மதம் சார்ந்தது. ஆனா மதம் சார்ந்த பண்டிகைகள்ல கிட்டத்தட்ட மதமே இல்ல. சில பண்டிகை காலெண்டரோட தொடர்புடையதாக இருக்குது. அனேகமாக எல்லா இந்திய பண்டிகைகளும் காலெண்டரோட தொடர்புடையதாக இருக்கு. உங்க உடலில் உள்ள சூரிய மண்டலத்துக்கு ஏத்த மாதிரி அந்த குறிப்பிட்ட நாளில் எஞ்சியுள்ள சூரிய மண்டலத்தில் என்ன நடக்குதோ அதுக்கு ஏத்த மாதிரி செய்யணும்னு பாக்குறோம்.



    இது ஏன் முக்கியம்னா எதை நீங்க இப்ப என்னோட உடம்புனு சொல்லுறீங்களோ மனித உடல் இயங்குற விதம் இந்த பூமியில் இருந்து வந்தது தான். நிறைய பேருக்கு இது புரியிறது இல்ல. வேறு எங்கயோ இருந்து வந்ததாக நினச்சுக்குறாங்க. இந்த உடம்பு, இந்த சூரிய மண்டலம் ஒரு குயவனின் சக்கரம் போல செயல் படுது. இத உருவாக்க. சூரிய மண்டலத்துல நடக்குற எல்லாமே ஏதோ ஒரு விதத்துல உங்களுக்கும் நடக்குது. இதுக்கு ஏற்றார் போல் கொண்டாட்டத்தை ஏற்படுத்தி இருக்கிறோம்.

    அதுக்கு ஏற்ற குறிப்பிட்ட செயல்களை செய்யுறோம். மஹாசிவராத்திரி இரவுல சுருக்கமா சொல்லணும்னா நீங்க ரொம்ப பெரிய சப்ஜெக்ட் ஓபன் பண்ணிடீங்க. அந்த நாளில் அது காலெண்டரில் வருஷம் வருஷம் ஒரே தேதியில் வராது. நவீன காலெண்டர் தேதி அப்படியே வராது. பூமி ஒரு குறிப்பிட்ட துல்லியத்துல சுத்துது. துல்லியம் என்றால் மிகச் சரியான எனும் அர்த்தத்தில் நான் சொல்லவில்லை. நான் துல்லியம் என கூறுவதை பூமியோடு ஒப்பிட்டு சொல்லுறேன்.

    பூமிக்கு எப்போதுமே அசைந்து கொண்டே சுத்துற தன்மை இருக்கு. அந்த அசைவுனால குறிப்பா வடதுருவத்தில் மட்டும் இயற்கையிலேயே சக்தி மேல் நோக்கி எழும்புது. இந்த சக்தியில் எனக்கு நம்பிக்கை இல்லை என்றால் பரவா இல்லை. போய் கடற்கரை ஓரத்துல உட்காருங்கள். பௌர்ணமி அன்று கடல் மேல எழும்புதா இல்லையா? நீங்க அம்மாவாசை பௌர்ணமினா சமுத்திரம் மேல் எழும்புவதை நீங்க பாத்துருக்கீங்கலா? உங்கள் உடம்புல 3ல 2 பாகம் தண்ணீர் தான்.

    உங்க உடம்புல இருக்குற தண்ணீர் மேலே எழும்பாதுனு உங்களை எது யோசிக்க வைக்குது. உடம்புல இருக்குற திரவங்களும் மேல் எழும்புது. நீங்க இந்த விஷயங்கள் எல்லா இடத்துலயும் இருக்குறத நீங்க பார்க்கலாம். நீங்க எப்பவாது மனநிலை ஆஸ்பத்திரில இருந்திருந்தீங்கனா, பொதுவாக பௌர்ணமி அம்மாவாசை நாட்களில் மக்கள் கொஞ்சம் அதிக கவனம் எடுத்துக் கொள்வார்கள். ஏனென்றால் மனநிலை பாதிப்பு உடையவர்கள் இன்னும் கொஞ்சம் அதிகம் பாதிப்பு அடைவாங்க. மக்கள் நிலவு தான் கிறுக்குத் தனத்தை ஏற்படுத்துனு நினைக்கிறாங்க. அதனால தான் ஆங்கிலத்துல லூனார், லூனினு கிண்டல் , கேலிகள் பிறந்துச்சு. நிலவு கிறுக்குத் தனத்தை உருவாக்கல. அது எல்லாத்தையும் கொஞ்சம் மேல இழுக்குது.நீங்க கொஞ்சம் பைத்தியக் காரத் தனமாக இருந்தால் அது அதிகமாகும். நீங்க அதிக அன்பாக இருந்தால் உங்களை அன்பாக்கும். நீங்க தியானத் தன்மையில் இருந்தால் அதில் மேலும் அதிகமாவீர்கள். உங்கள் தன்மை இன்னும் அதிகம் ஆகும். ஏன் அப்டினா உடல் அமைப்பின் உள்ளே ஒரு எழுச்சி நடக்குது.

    இதையும் படியுங்கள் :   மஹாசிவராத்திரியை முன்னிட்டு பிரதமர் மோடி சத்குருவுக்கு வாழ்த்து

    இந்த குறிப்பிட்ட நாளில் டிசம்பர்ல சூரியன் நிலை மாறினதுக்கு அப்புறம் 22 டிசம்பர் குளிர்கால கதிர் திறப்பம் நடக்குது. அதுக்கப்பறம் கிரகங்களின் துல்லியம் எப்படி இருக்குதுனா அந்த குறிப்பிட்ட இரவுல ரொம்ப பெரிய அளவுல சக்தி மேல எழும்புது. அந்த இரவுல நீங்க படுத்தீங்கனா சக்தி மேலெழும்ப நீங்க தடை போடுறீங்க. நீங்க பலனை மட்டும் இழக்கல. உங்களுக்கு சில உபத்திரங்களை ஏற்படுத்திகிறீங்க. ரொம்ப சூட்சமமான நிலையில. இது எல்லாமே ஒரு முழுமையான மனிதனாக வாழணும்னு விரும்புனீங்கனா மட்டும் தான் உங்களுக்கு பொருந்தும். முழுமையான மனிதன்னு நான் சொல்லும் போது ஒரு மனிதனுக்குள்ள திறக்க படுற எல்லாத்தையும் திறக்கணும்னு நீங்க நினைக்கிறீங்க.

    சாயங்காலம் ஆனா குடிச்சுட்டு தூங்குற நபராக இருந்தால் உங்களுக்கு இது பொருந்தாது. உங்களுக்குள்ள இருக்குறதையும் நீங்க கொன்னுடுவீங்க. அது உங்களை பொறுத்தது. ஆனா நீங்க ஒரு முழுமையான மனிதனாக இருக்கணும்னா எல்லாமே முழு வீச்சில் நடக்கணும். இந்த உடலில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூர்ந்து கவனிச்சு அதனை பாத்துக்கணும். நீங்க நேராக உட்காரனும்னு நினைக்கறீங்க. சக்தி மேல் நோக்கி போனும்னு நேராக அமர முயற்சிக்குறீங்க. அதனால ஜாகர் என எத்தனை கூறுகின்றோமோ அதனை உருவாக்கியுள்ளோம். எப்படி நேரா உட்கார முடியும். உங்களால சும்மா நேராக உட்கார முடியுமா ? அதனால அன்று இரவு கொண்டாட்டம் உண்டு.



    ஆட்டம் , பாட்டம் , கொண்டாட்டம்னு எல்லாரையும் விழிப்பா வச்சுருக்கிற மாதிரி பல விஷயங்கள் நடக்குது. டிவி சேனல்ஸ் இதனை நேரடி ஒளிபரப்பு செய்யுறாங்க. அதனால எத்தனை லட்சம் மக்கள் பாக்குறாங்கனு நமக்குத் தெரியல. இது இந்த அளவுக்கு வளந்துருக்குனா மக்கள் இதோட பலனை பாத்திருக்காங்க. நீங்க என்ன செய்யுறீங்கனா அன்றைக்கு ராத்திரி முழுவதும் சும்மா விழிப்பா உட்காருங்க. உங்களுக்கு கொண்டாட்டம் பிடிக்கலனா சும்மா உட்காருங்க. உங்களை பொறுத்த விஷயம் அது.

    நீங்க ஒன்னு புரிஞ்சுக்கணும் மனிதனுக்கு கொண்டாட்டம் தேவை படுது. உங்க வாழ்க்கையில கொண்டாட்டம் நடக்கணும்னா உங்க கிட்ட கொஞ்சம் விளையாட்டுத் தனம் இருக்கணும். இல்லனா கொண்டாட்டம் இருக்காது. நிறைய பேருக்கு குடிச்சா மட்டும் தான் கொண்டாட முடியும். நான் உங்களுக்கு லட்சக்கணக்கான மக்களை காண்பிக்கிறேன். ஒரே இடத்துல ஒரு சொட்டு மதுக்கு கூட அங்க அனுமதி கிடையாது. ஆனா இரவு பொழுது அங்க ஒருத்தரும் தூங்க மாட்டாங்க. ஆனா உற்சாகமாக இருப்பாங்க.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Maha Shivaratri, Sadhguru

    அடுத்த செய்தி