Home /News /spiritual /

மகாசிவராத்திரி 2022: வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் கன்னியாகுமரியில் இன்று தொடங்கியது

மகாசிவராத்திரி 2022: வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் கன்னியாகுமரியில் இன்று தொடங்கியது

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

Mahashivratri 2022 | உலகபுகழ் மகாசிவராத்திரி தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் நடை பெறும் வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் இன்றும் நாளையுமாக நடைபெறுகிறது. பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்ச கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். நாளை சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஆண்டுதோறும் மகாசிவராத்திரியன்று காவி ஆடை அணிந்து, கையில் விசிறியோடு குமரி மாவட்டத்தில் உள்ள திருமலைக்கோவிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றிக்கோடு, திருநட்டாலம் ஆகிய பனிரெண்டு சிவஸ்தலங்களுக்கும் முறையாக ஓடிச்சென்று சிவபிரானை பக்தர்கள் தரிசனம் செய்வார்கள். 

இங்குள்ள பனிரெண்டு சிவாலயங்களையும் ஓடி ஓடி தரிசிப்பதே ‘சிவாலய ஓட்டம் என கூறப்படுகிறது. இந்த ஓட்டத்தின் மொத்த தூரம் 108 கி.மீ. தொலைவில் உள்ளடக்கிய 12 சிவன் கோயில்களில் ஓடும்போது பக்தர்கள் கோவிந்தா,கோபாலா என்று விஷ்ணு நாமத்தை ஜபிக்கிறார்கள். ஹரியும் சிவனும் ஒண்ணு என்ற தத்துவத்தை உணர்த்தவே இந்த சிவாலய ஓட்டம். ஏறத்தாழ 6000 ஆண்டுகளாக இந்த சிவாலய ஓட்டம் நிகழ்ந்து வருகிறது என வரலாறு கூறுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இந்த பனிரெண்டு சிவாலயங்களில் மஹாசிவராத்திரி தினத்தன்று இந்த சிவாலய ஓட்டத்தை மேற்கொள்ளும் பக்தர்கள் மாசி மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி அன்று மாலை அணிவார்கள். அன்றிலிருந்து விரதம் இருப்பார்கள். சிவராத்திரிக்கு முன் தினம் காலையில் இருந்து எதுவும் சாப்பிடாமல் காவி அல்லது மஞ்சள் உடை அணிந்து புறப்படுவார்கள். “கோவிந்தா,கோபாலா” என்று கோஷமிட்டபடி ஒன்றாவது ஆலயமான திருமலையில் இருந்து சிவாலய ஓட்டம் தொடங்குவார்கள்.

மேலும் படிக்க... ருத்ர பிரதோஷம் : சிவனின் சிறப்பு பாடல்களின் தொகுப்பு

அங்கிருந்து தொடர் ஓட்டத்தில் பன்னிரெண்டு சிவாலயங்களையும் தரிசிப்பார்கள். இது மட்டுமின்றி தமிழகம், கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து வாகனங்களிலும் பல்லாயிர கணக்கான பக்தர்கள் வருகை தந்து 12 சிவாலயங்களிலும் தரிசித்து செல்கின்றனர். சிவராத்திரியை முன்னிட்டு நாளை 01-03-2022 குமரி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



மேலும் படிக்க... 

 மகா சிவராத்திரி எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

 மகா சிவராத்திரிக்கு முன்னால் வரும் பிரதோஷம் மகா பிரதோஷம்... அன்று சிவனை வணங்கினால் சிறப்பு...

பக்தர்கள் செல்லும் வழி நெடுவே பொதுமக்கள் சார்பிலும் குடிநீர், உணவு போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு இரவு மற்றும் ஒரு பகல் அடங்கிய இந்த சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் பல லட்சம் மக்கள் பங்கேற்கும் சிவாலய ஓட்டம் வேறெங்கும் காண முடியாத ஒரு நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க... மஹா சிவராத்திரி, பிரதோஷம் அன்று நந்தி முன் சொல்ல வேண்டிய 108 போற்றி...
Published by:Vaijayanthi S
First published:

Tags: Kanyakumari, Maha Shivaratri

அடுத்த செய்தி