மகா சிவராத்திரி கொண்டாட்டம் - சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு - ஈஷா யோகா மையத்தில் நள்ளிரவு தியானம்

மகா சிவராத்திரி கொண்டாட்டம் - சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு -  ஈஷா யோகா மையத்தில் நள்ளிரவு தியானம்
  • Share this:
மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, தமிழகம் உள்பட நாடு முழுவதும் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. 

மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியில் சிவபெருமானை அம்பிகை வணங்கியதாக கூறப்படும் நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. பிரளய காலத்தில் ஜீவராசிகள் அழிந்துவிட்ட நிலையில், பரமேஸ்வரனை நினைத்து நான்கு ஜாமங்கள் உமாதேவி பூஜை செய்ததாக கூறப்படுகிறது. சிவராத்திரி நாளில் விரதம் இருந்து வணங்குபவர்களுக்கு நன்மைகள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. பகலில் விரதம் இருக்கும் பக்தர்கள், இரவு முழுவதும் விழித்திருந்து சிவபெருமானை வழிபடுவர்.

சிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு குமரி மாவட்டத்தில் நேற்று சிவாலய ஓட்டம் தொடங்கியது. காவி உடை அணிந்தும், கையில் விசிறியுடனும் கோவிந்தா, கோபாலா என்ற நாம முழக்கமிட்டபடி பக்தர்கள் ஓடினர். திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, திருவிதாங்கோடு, திருநட்டாலம் உள்ளிட்ட சிவாலயங்களுக்கு 108 கிலோ மீட்டர் பயணம் செய்து பக்தர்கள் தரிசனம் மேற்கொண்டனர்.


இதேபோல், தஞ்சை பெரியகோயில், திருவண்ணாமலை உள்ளிட்ட சிவாலயங்களிலும் அதிகாலை முதலே பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

கோவை ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதில், குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு பங்கேற்றுள்ளார்.

கோவையில் ஈஷா யோகா மையத்தில் 26-ம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மிக பிரமாண்டமாகவும், விமர்சையாகவும் நடைபெற்றது.இதில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். மேலும்
மத்திய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செராவத் மற்றும் தமிழக அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி, திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை இராதாகிருஷ்ணன் மற்றும் எம்.பி ரவீந்தரநாத் கலந்து கொண்டனர்

உலகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் நேரில் வருகை தந்து ஆதியோகியை தரிசித்தனர்.

நேரலை
First published: February 21, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading