பலருக்கு வாழ்வில் அனைத்தும் சரியாக இருந்தும் நினைப்பது நடப்பதில் சிரமம் இருக்கலாம். ஜாதகத்தில் பித்ரு தோஷம் என்றும் பரிகாரங்கள் செய்ய அறிவுரைகள் வழங்கப்படலாம். அப்படி என்ன தான் இருக்கிறது?
பித்ருக்கள் என்பது நமது தாய் மற்றும் தந்தை வழியில் இறந்த நம் முன்னோர்கள். அவர்கள் ஆன்மா சாந்தியடையும் வண்ணம் அவர்களுக்கு உரிய தர்ப்பணம் செய்யாமல் இருத்தல், அவர்கள் நினைவின்றி வாழுதல் நமக்கு வாழ்வில் பல சங்கடங்களை தரும். தற்போது மஹாளய பட்ச காலம் நடந்து கொண்டு இருக்கிறது. இக்காலம் தர்ப்பணம், பித்ரு வழிபாடு என்னும் முன்னோர் வழிபாடுகளுக்கு உகந்த காலம். இக்காலத்தின் பலன் விளக்கும் கதை ஒன்று மகாபாரதத்தில் உள்ளது.
உலகின் அனைத்து செல்வங்களையும் வாரி வழங்கிய கர்ணனுக்கு அன்னதானம் அளிக்கும் வாய்ப்பு அமையவில்லை. போரில் இறந்து சொர்க்கம் சென்ற பின்னர் பசியில் தவிக்கிறான். அங்கு இருந்தோரிடம் பசிக்கிறது என்று கூறிய பொழுது அங்கு இருந்தவர்கள் “இச்சொர்கத்தில் யாருக்கும் பசி, தூக்கம், பிணி இருப்பதில்லை உனக்கு பசிக்கும் காரணம் எங்களுக்கு தெரியாது!” என்றனர். இவையனைத்தையும் கவனித்த தேவகுரு பிரகஸ்பதி கர்ணனிடம் வந்து அவன் ஆட்காட்டி விரலை சுவைக்குமாறு சொன்னார். அவன் பசி நின்றது! தனக்கு வந்த பசிக்கான காரணமும் அது நின்றது ஏன் என்று குருவிடம் கேட்டான்.
மேலும் படிக்க... புரட்டாசியில் ஏன் அசைவம் சாப்பிடக் கூடாது? அறிவியல் காரணம் தெரியுமா
பிரகஸ்பதி “உலகில் பொன், பொருள், வைரம், என அனைத்தும் தானம் செய்த நீ ஒருநாளும் அன்னதானம் செய்யவில்லை. ஒருமுறை ஒருவர் அன்னதான இடத்திற்கு செல்ல கேட்ட பொழுது - அங்கே என்று உன் ஆட்காட்டிவிரலால் காட்டினாய், இதனால் உன் ஆட்காட்டி விரல் சுவைத்தும் உன் பசி நின்றது” என்றார். இதை கேட்ட கர்ணன் யமனிடம் வேண்டி மீண்டும் உருவம் கொண்டு 15 நாள் பூமிக்கு வந்து அன்னதானம் செய்தான். அது தான் இந்த மஹாளய பட்ச காலம்.
இதனால் யமதர்மன் “இந்த 15 நாட்கள் ஒருவன் பூமியில் செய்யும் தர்ப்பணம், அன்னதானம் அவரின் முன்னோர் மட்டுமின்றி இறந்த அனைவரின் பசியை போக்கும் என்றார்”.
Also see... மகாளய அமாவாசை அன்று பித்ரு தர்பணம் கொடுக்க இயலாத வயதானோர்க்கு சாஸ்திரம் கூறும் எளிய வழிமுறை?
மஹாளய பட்சம் முழுமைக்கும் அன்னதானம் ஒருவருக்கு வழங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும், மஹாளய அமாவாசை ஆனா செப் 25-ம் தேதி அன்று முன்னோர் வழிபாடு செய்து, தர்ப்பணம், அன்னதானம் செய்து நலம் பெறுவோம். வசதி உள்ளோர் முதியோர், குழந்தைகள் காப்பகங்களுக்கு ஒரு நாள் உணவினை தரும் பணியினை செய்து அன்னதான பலன் பெறலாம். ஏனெனில் என்றுமே “ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்”
விஷ்ணு நாகராஜன்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Mahalaya Amavasai, Purattasi