Home /News /spiritual /

கொட்டும் மழையிலும் 11 நாட்கள் காட்சியளித்த திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு

கொட்டும் மழையிலும் 11 நாட்கள் காட்சியளித்த திருவண்ணாமலை மகாதீபம் நிறைவு

மகா தீபம்

மகா தீபம்

நிறைவு நாளான நேற்று மகாதீபம் 2,668 அடி உயரமுள்ள மலை மீது ஏற்றப்பட்டது. நிறைவு நாள் என்பதால் ஆன்மீக பக்தர்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றி மலையின் மீது ஜோதிப் பிழம்பாய் காட்சி கொடுத்த அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 10ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்களும் பஞ்சமூர்த்திகள் ஐந்தாம் பிரகாரத்தில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

கடந்த 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கருவறையில் பரணி தீபமும், அதனைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவிலின் பின்புறமுள்ள 2668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபமும் ஏற்றப்பட்டது. தொடர்ந்து 11 நாட்கள் மகாதீபம் மலை உச்சியின் மீது மாலை 6 மணிக்கு ஏற்றப்பட்டு வந்தது. குறிப்பாக இந்த வருடம் தொடர் மழையிலும் மகாதீபம் மலை உச்சி மீது தொடர்ந்து எரிந்து கொண்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நிறைவு நாளான நேற்று மகாதீபம் 2,668 அடி உயரமுள்ள மலை மீது ஏற்றப்பட்டது. நிறைவு நாள் என்பதால் ஆன்மீக பக்தர்கள் தங்கள் இல்லங்களில் விளக்கு ஏற்றி மலையின் மீது ஜோதிப் பிழம்பாய் காட்சி கொடுத்த அண்ணாமலையாரை தரிசனம் செய்தனர். அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தி முழக்கங்களை எழுப்பினர்.



 

 

இனி தொடர்ந்து இன்று காலை மலை மீது இருந்து கோயிலுக்கு தீப கொப்பரை கீழே வர வைக்கப்பட்டு பின்பு மாலை கொப்பரைக்கு பூஜை செய்து வைப்பார்கள். அதன் பின்னர் கொப்பரையில் உள்ள  தீபமை ஆருத்ரா தரிசனம் அன்று நடராஜப்பெருமானுக்கு சாற்றவிட்டு பின் நெய் காணிக்கை செலுத்திய பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கப்படும்.

மேலும் படிக்க... திருப்பதி இலவச தரிசன டிக்கெட்டுகள் என்ன ஆனது தெரியுமா?
Published by:Vaijayanthi S
First published:

Tags: Thiruvannamalai

அடுத்த செய்தி