Home /News /spiritual /

கிருஷ்ணகிரியில் நடந்த மகாபாரத திருவிழா... மழை பொழிய வேண்டி கிராம மக்கள் வழிபாடு...

கிருஷ்ணகிரியில் நடந்த மகாபாரத திருவிழா... மழை பொழிய வேண்டி கிராம மக்கள் வழிபாடு...

கிருஷ்ணகிரியில் நடந்த மகாபாரத திருவிழா

கிருஷ்ணகிரியில் நடந்த மகாபாரத திருவிழா

Krishnagiri | கிருஷ்ணகிரி் அருகே 12 கிராம மக்கள் இணைந்து நடத்திய மகாபாரத திருவிழாவில், இறுதி நாளில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. மழை பொழிய வேண்டி கிராம மக்கள் வழிப்பட்டனர்.

கிருஷ்ணகிரி் அருகே உள்ள சின்ன தக்கேப்பள்ளி  கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ திரெளபதி அம்மன் திருக்கோவிலில்  மகாபாரதத்திருவிழா கடந்த 6-ம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கியது.பெரிய தக்கேப்பள்ளி, பெரிய கோட்டப்பள்ளி, ஓண்டியூர்,கிழ் கரடியூர், மேல் கரடியூர், கோரப்பனூர், கே.பூசாரிப்பட்டி, மால குப்பம், கல்ல குறி, போத்திநாயனப்பள்ளி, மாதிநாயனப்பள்ளி ஆகிய 12 கிராம மக்கள் இணைந்து நடத்திய இந்த மகாபாரத திருவிழாவின் போது நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகளுடன் கிருஷ்ணகிரி செல்வ வினாயகா நாடக கலைக்குழுவினரின் மகாபாரத தெருக்கூத்து நிகழ்ச்சியை கடந்த 18 நாட்களாக நடத்தினர்.

இறுதி நாளான இன்று துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரெளபதி அம்மன் கோவில் எதிரே சுமார் 30 அடி நீளத்திற்கு துரியோதனன் உருவ பெம்மை மண்ணால் உருவாக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தெருக்கூத்து கலைஞர்கள் சொற்பொழிவு ஆற்றினர். இறுதியில் பீமனும் அர்ச்சுனனும் போரிடும் காட்சிகள் நடத்தப்பட்டு இறுதியில் அர்ச்சுனன் போர் வாலால் துரியோதனன் படுகளம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதை தொடர்ந்து அலங்கரிக்கப்பட்டிருந்த திரெளபதி அம்மன் தேர் துரியோதனன் உடல் மீது வைத்து திரெளபதி சப்தம் நிறைவேறும் வகையில் துயில் முடியும் நிகழ்வும் அதை தொடர்ந்து துரியோதனன் உடலின் மீது ஏறி  மீதித்து படுகளமும் செய்தனர்.

இந்த  துரியோதனன் படுகளம் செய்யும் போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து 18 நாட்கள் நடைபெற்ற மகாபாரதம் திருவிழா நிறைவு பெற்றது. இப்படி 18 நாட்கள் மகாபாரதம் நடத்துவதின் மூலம் கிராமத்தில் உள்ள மக்களுக்கும் கால்நடைகளுக்கும் நோய் நொடிகள் நீங்கும். குழந்தைகள் இல்லாத தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மழை பொழியும், நன்மைகள் பிறக்கும் என்கிற நம்பிக்கையில் நடத்தப்படுகிறது.



Also Read... திருப்பதியில் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தரிசன டிக்கெட்..! இன்று முதல் விநியோகம்...

இந்த மகாபாரத விழாவை கடந்த 18 நாட்களாக மேற்கண்ட 12 கிராம மக்கள் இரவு முழுவதும் அங்கேயே தங்கிருந்து கண்டு மகிழ்ந்தனர்.

செய்தியாளார்: குமரேசன்
Published by:Vaijayanthi S
First published:

Tags: Krishnagiri

அடுத்த செய்தி