முகப்பு /செய்தி /ஆன்மிகம் / மகா சிவராத்திரி எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

மகா சிவராத்திரி எப்போது? தேதி, நேரம் குறித்த தகவல்கள்...

சிவன்

சிவன்

Maha sivratri 2022 | இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது.

  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :

மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து ஈசன் சிவபெருமானை வழிபடுவதன் மூலம் சிவனின் அனுகிரகத்தைப் பெறலாம் என்கிறது இந்துமதம். இந்த நாளின் சிறப்புகள் குறித்து திருவிளையாடல் புராணம், கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வருடத்திர்கான மாக சிவராத்ரி எப்போது வருகிறது? எப்படி பூஜை செய்து கொண்டாட வேண்டும்? அதனால் கிடைக்கும் பலன்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்...

மகா சிவராத்திரி இந்து மதத்தின் முக்கியமான பண்டிகைகளில் ஒன்றாகும். அன்றைய தினம் சிவபெருமானை வழிபட்டு விழா கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், இந்து நாட்காட்டியின்படி பால்குண மாதத்தின் கிருஷ்ண பக்ஷ சதுர்தசி அன்று மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மகா சிவராத்திரி மார்ச் 1ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்து மதத்தில் மகா சிவராத்திரிக்கு சிறப்பு முக்கியத்துவம் உள்ளது. ஒவ்வொரு மாதத்தின் சதுர்த்தசி திதியும் சிவபெருமானுக்குரியது. ஆனாலும் மாசி மாத மஹாசிவராத்திரி நாளில், சிவனை  வழிபாடு செய்தால் சிறப்பு.

அம்மனுக்கு நவராத்திரி, சிவனுக்கு சிவராத்திரி என்பார்கள். சிவராத்திரி விரதம் ஐந்து வகைப்படும்.

1. நித்திய சிவராத்திரி

2. மாத சிவராத்திரி

3. பட்ச சிவராத்திரி

4. யோக சிவராத்திரி

5. மஹா சிவராத்திரி

இதில் மஹா சிவராத்திரி சூர்யன் கும்ப ராசியில் சஞ்சரிக்கும் காலமான மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி அன்று வருகிறது. மஹா சிவராத்திரி நாளில், விரதம் இருப்பதும் கண் விழிப்பதும் சிவதரிசனம் செய்வதும் அன்னதானம் செய்வதும் மிகுந்த புண்ணியங்களை நமக்கு சேர்க்கும். பாவங்களைப் போக்கும்.

மகா சிவராத்திரி நாளில், இரவு முழுவதும் சிவாலயங்கள் திறந்திருக்கும். அனைத்து சிவாலயங்களும் இரவு 8 முதல் 9 மணிக்குள் பள்ளியறை பூஜை முடிந்து நடை சாத்துவது வழக்கம். ஆனால் மகா சிவராத்திரி நன்னாளில், விடியவிடிய கோயில் திறந்திருக்கும். ஒவ்வொரு கால பூஜைகளும் விமரிசையாக நடந்தேறும். இந்த பூஜையை நான்கு காலங்களாக பிரித்திருப்பார்கள். முதல் காலம், இரண்டாம் காலம்  மூன்றாம் காலம் வரை, நான்காம் காலம் ஆகும்.

மேலும் படிக்க.. நோய் நீக்கி, இழந்த பதவியை பெற்றுத்தரும் ஊட்டத்தூர் சிவன் கோயில்...

மகா சிவராத்திரி எப்போது?

இந்த ஆண்டு, மகா சிவராத்திரிக்கான உகந்த நாள் மார்ச் 1ஆம் செவ்வாய்கிழமை அதிகாலை 3.16 மணிக்கு தொடங்குகிறது. சதுர்த்தசி திதி மார்ச் 2 புதன்கிழமை காலை 10 மணிக்கு முடிவடைகிறது. மகா சிவராத்திரி பூஜை நான்கு கட்டங்களாக அனுசரிக்கப்படுகிறது.

2022ஆம் ஆண்டுக்கான நான்கு நிலைகளில் வழிபடுவதற்கான மங்களகரமான நேரம்:

முதல் கட்ட பூஜை:

மார்ச் 1ஆம் தேதி மாலை 6.21 மணி முதல் இரவு 9.27 மணி வரை

இரண்டாம் கட்ட பூஜை:

மார்ச் 1ஆம் இரவு 9.27 முதல் நள்ளிரவு 12.33 வரை

மூன்றாம் கட்ட பூஜை:

மார்ச் 2ஆம் தேதி நள்ளிரவு 12:33 மணி முதல் 3.39 மணி வரை

நான்காம் கட்ட பூஜை:

மார்ச் 2ஆம் காலை 3:39 முதல் 6:45 வரை

மேலும் படிக்க... Maha Shivratri: மஹா சிவராத்திரி குறித்த இந்த விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து கொள்ளுங்கள்...

சிவராத்திரி வழிபாட்டின் மகிமைகள்

1. சிவராத்திரி என்ற சொல் சிவனுடைய ராத்திரி, சிவமான ராத்திரி, சிவனுக்கு இன்பமான ராத்திரி என்று பல வகைப் பொருளை தருகிறது.

2. சிவராத்திரி 4 ஜாமங்களிலும் ஒருவர் செய்யும் பூஜை, அவரை முக்தி பாதைக்கு அழைத்து செல்ல உதவும்.

3. சூரியன், முருகன், மன்மதன், இந்திரன், எமன், சந்திரன், குபேரன், அக்னி பகவான் ஆகியோர் முறைப்படி சிவராத்திரி விரதம் இருந்து பேறு பெற்றுள்ளனர்.

4. சிவராத்திரியன்று ஆலயங்களுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டில் இருந்தபடியே சிவபெருமானுக்கு மனதில் அபிஷேகம் செய்து சிவனை வழிபடலாம்.

5. எறும்பு, நாரை, புலி, சிலந்தி, யானை, எலி போன்றவை கூட சிவபூஜையால் மோட்சம் அடைந்துள்ளன.

6. சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் தருபவர் என்று பொருள். எனவே எந்த அளவுக்கு ஒருவர் சிவ, சிவ.... என்று உச்சரிக்கிறாரோ, அந்த அளவுக்கு அவர் நன்மை பெறுவார்.

7. சிவராத்திரியன்று திருவிடை மருதூர் மகாலிங்க சுவாமியை வழிபட்டால் மறுபிறவி கிடையாது.

8. சிவராத்திரி தினத்தன்று, தியாகராஜர் என்ற பெயரில் ஈசன் வீற்றிருக்கும தலங்களில் தரிசனம் செய்தால் பாவங்களில் இருந்து விடுபடலாம்.

9. கஞ்சனூரில் ஒரே பிரகாரத்தில் அடுத்தடுத்து 2 தட்சிணாமூர்த்திகள் உள்ளனர். சிவராத்திரியன்று இவர்களை வழிபட்டால், சிவஞானம் எளிதில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

10. சிவபெருமான் லிங்கமாக உருவெடுத்த தினமே சிவராத்திரி என்று ஒரு கருத்து உண்டு.

First published:

Tags: Maha Shivaratri, Sivan